கரூர் சம்பவத்தின் போது விஜய் மீது வழக்கு போட சொன்னேன்.. ஸ்டாலின் விட்டது ஏன் தெரியுமா? ரகுபதி பேச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கரூர் சம்பவத்தின் போது விஜய் தான் முதல் குற்றவாளி என்றும் அவர் மீது வழக்கு பதியுமாறு ஸ்டாலினிடம் கெஞ்சியதாகவும் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். மேலும், சினிமாவில் ஹீரோ.. அரசியலில் வில்லன் விஜய் எனவும் விமர்சித்துள்ளார். குற்றப்பத்திரிகையில் உள்ளதை தீர்ப்பு போல முதல்வர் விஜய் வாசித்துள்ளதாகவும் அவர் விமர்சனம் செய்துள்ளார்.

தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் போது முன்னாள் முதல்வர் ஸ்டாலினை அவமதிக்கும் விதமாக பேசியதாக முதல்வர் விஜய்யை கண்டித்து திமுக சார்பில் தமிழகம் முழுக்க கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சென்னையில் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

Karur Stampede Why Stalin not register a case against Vijay DMK MLA Raghupathy explains

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுடைய மிசா காலத்து கொடுமைகளை எல்லாம் கொச்சைப்படுத்தி பேசிய இன்றைய முத்லவர் விஜய்யை கண்டித்தும், அதேபோன்று சர்க்காரியா கமிஷன் அறிக்கை என்பது பிளாக் செய்யப்பட்ட ஒன்று. அந்த அறிக்கையை அடிப்படையாக வைத்துக்கொண்டு, முரசொலி மாறன், கலைஞர் மீது பழி போட்டு பேசிய இன்றைய முதல்வர் விஜய் சினிமாவில் தான் ஹீரோ.. அரசியலில் அவர் வில்லன்.

திருமாவளவன் பேசியது குறித்து கேள்வி

அந்த வில்லன் பாத்திரத்தை இன்று செய்திருக்கிறார். எனவே அவரை கண்டித்து இந்த போராட்டம் நடத்தப்படுகிறது. சர்க்காரியா கமிஷன் என்பது பிளாக் செய்யப்பட்ட ஒன்று.. என் மேலே சார்ஜ் சீட் போட்டு இருக்காங்க.. நான் எல்லா வழக்கிலும் விடுதலை ஆகிட்டேன். ஆனால் இப்போ வந்து ஜார்ஜ் சீட் போட்ட கேஸை எடுத்து வைத்துக்கொண்டு குற்றவாளி என சொல்லிக்கொண்டு இருந்தால் இதை விட மோசமான ஒன்றை சொல்ல முடியாது.

தீர்ப்புகள் தான் வாசிக்கப்பட வேண்டும். குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை" என்று பேசினார். அப்போது செய்தியாளர்கள், கரூர் வழக்கில் அன்றைக்கு விஜய் மீது வழக்கு போட சொன்னோம் என விசிக தலைவர் தொல் திருமாவளவன் சொன்னது பற்றி கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த ரகுபதி, "எங்களுடைய முதலமைச்சர் நல்லவர்.. மனிதாபிமானம் உடையவர்.. தாயுள்ளம் கொண்டவர்..

வழக்கு போடுங்க என்று கெஞ்சினோம்

அன்னைக்கு நாங்க தான் சொன்னோம். இந்த கேஸில் முதல் குற்றவாளி விஜய் தான் வரனும். எனவே நாங்கள் எல்லாரும் அப்போதைய முதல்வர் ஸ்டாலினிடம் சொன்னோம். தயவு செய்து விஜய் மீது வழக்கு போடுங்க என்று கெஞ்சினோம். நான் சட்டத்துறை அமைச்சர் என்கிற முறையில் அவரிடம் சொன்னேன். அவர் சொன்னார், பாவம் அவரை விட்டுடுங்க.. அவர் ஒரு நடிகர்.. இப்போது தான் கட்சி ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவரை இப்போது ஜெயிலில் எல்லாம் அடைச்சு வச்சா நல்லா இருக்காது..

அவர் மேலே வழக்கு போட்டால், அதை வைத்துக்கொண்டு என் மேலே கேஸ் போட்டங்கா என்று சொல்வார். அவர் மீது வழக்கு பதிவு செய்வதற்கு ஒன்னும் கிடையாது. நமக்கு மக்கள் நன்றாக இருக்கிறார்கள். மக்கள் நம்மை நம்புகிறார்கள். எனவே அது பத்தி எல்லாம் வேண்டாம் என்று சொன்னார். மனிதாபிமானம் என்ற அடிப்படையிலேயே அன்று வழக்கு பதியாமல் விடப்பட்டவர் விஜய்.. ஆனால் இன்று மனிதாபிமானம் என்றால் என்ன விலை? என்ற கேட்கக்கூடியவர் விஜய்.." என்று பதில் அளித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+