கரூர் சம்பவம்: காயமடைந்த 53 பேர் இன்று டிஸ்சார்ஜ் ஆகின்றனர்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கரூர் வேலுச்சாமிபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் காயமடைந்த 53 பேர் இன்று (செப். 30) மாலை டிஸ்சார்ஜ் செய்யப்படுகின்றனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கடந்த சனிக்கிழமை கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட போது, அங்கு கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்கள் கரூரில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

Karur Tragedy 53 Injured to Be Discharged Today Says Minister Ma Subramanian

கரூர் காந்தி கிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு 40க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் மூலம் பலர் கொண்டு செல்லப்பட்டு, அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களில் சிலர் மேல் சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

அதன்படி, கூட்ட நெரிசலில் சிக்கியவர்களில் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மட்டும் முதலில் 110 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 41 பேர் உயிரிழந்த நிலையில், நேற்றைய நிலவரப்படி மொத்தம் 110 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். அதில் 11 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். மேலும் சிலர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கரூர் கூட்ட நெரிசலில் காயமடைந்து சிகிச்சையில் இருந்த 110 பேரில் 51 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக நேற்று கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேலு கூறினார். மீதமுள்ள 59 பேரில் 51 பேர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 8 பேர் மூன்று தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சையில் உள்ளனர் என அவர் தெரிவித்தார்.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் காயமடைந்த 53 பேர் இன்று (செப். 30) மாலை டிஸ்சார்ஜ் செய்யப்படுகின்றனர் என தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேர் பட்டியல்

1. தாமரைக்கண்ணன்(25), த/பெ முருகேசன், பாகநத்தம், கரூர்.
2. ஹேமலதா(28), க/பெ ஆனந்த்ஜோதி, விஸ்வநாதபுரி, கரூர்
3. சாய்லெட்சனா(8), த/பெ ஆனந்த்ஜோதி. விஸ்வநாதபுரி. கரூர்
4. சாய்ஜீவா(4), த/பெ ஆனந்த்ஜோதி, விஸ்வநாதபுரி, கரூர்
5. சுகன்யா(33), க/பெ தேவேந்திரன், வடிவேல்நகர், கரூர்
6. ஆகாஷ்(23), த/பெ மாணிக்கம், காமராஜ்புரம், கரூர்
7. தனுஷ்குமார்(24), த/பெ இளங்கோவன், காந்திகிராமம், கரூர்
8. வடிவழகன்(54), த/பெ முத்துசாமி, பசுபதிபாளையம், கரூர்
9. ரேவதி(52), க/பெ முருகேசன், கொடுமுடி, ஈரோடு.
10. சந்திரா(40), க/பெ செல்வராஜ், ஏமூர் புதூர், கரூர்.

11. குரு விஷ்னு(2), த/பெ விமல், வடிவேல் நகர், வேலுசாமிபுரம், கரூர்.
12. ரமேஷ்(32), த/பெ பெருமாள், கோடங்கிபட்டி, கரூர்.
13. சனுஜ்(13), த/பெ ரகு, காந்திகிராமம், கரூர்.
14. ரவிகிருஷ்ணன்(32), த/பெ மருதாசலம், எல்.என்.எஸ் கிராமம், கரூர்.
15. பிரியதர்ஷ்ணி(35), க/பெ.சக்திவேல், ஏமூர், கரூர்.
16. தரணிகா(14), த/பெ சக்திவேல், ஏமூர், கரூர்.
17. பழனியம்மாள்(11), த/பெ பெருமாள், வேலுசாமிபுரம், கரூர்.
18. கோகிலா(14), த/பெ பெருமாள், வேலுசாமிபுரம், கரூர்.
19. மகேஷ்வரி (45), க/பெ சக்திவேல், மண்மங்கலம், கரூர்
20. அஜிதா(21), த/பெ மணி, தொக்குப்பட்டி, அரவக்குறிச்சி.

21. மாலதி(36), க/பெ கிருஷ்ணமூர்த்தி, ராயனூர் வடக்கு, கரூர்.
22. சுமதி(50), க/பெ மணி, 80 அடி ரோடு,கரூர்.
23. மணிகண்டன்(33), த/பெ பாலாஜி, தீர்த்தம்பாளையம், வெள்ளக்கோவில்.
24. சதீஷ்குமார் (34), த/பெ துரைசாமி, கொடுமுடி, ஈரோடு.
25. கிருத்திக்யாதவ்(7), த/பெ சரவணன். 5 ரோடு, கரூர்.
26. ஆனந்த்(26), த/பெ முருகன், சுக்காம்பட்டி, சேலம்.
27. சங்கர் கணேஷ்(45), த/பெ பால்ராஜ், வடக்கு தாளிபட்டி, குஜிலியம்பாறை.
28. விஜயராணி(42), க/பெ சக்திவேல், தாழைப்பட்டி, கரூர்.
29. கோகுலபிரியா(28), க/பெ ஜெயபிரகாஷ், செம்மாண்டபாளையம், வெள்ளகோவில்.
30. பாத்திமா பானு(29), க/பெ பிரபாகரன், கொள்ளப்பட்டி, ஒட்டன்சத்திரம்.

31. கிஷோர் (17), த/பெ கணேஷ், வடக்கு காந்திகிராமம், கரூர்.
32. ஜெயா(55), க/பெ சுப்பிரமணி, வெங்கமேடு, கரூர்.
33. அருக்காணி(60), ஏமூர், கரூர்.
34. ஜெயந்தி(43), க/பெ சதீஷ்குமார், வேலாயுதம்பாளையம், புகளூர்.
35. கோகுலஸ்ரீ (எ) சவுந்தர்யா(27), உப்பிடமங்கலம், கரூர்
36. ஸ்ரீநாத்(16), புதுக்காம்பள்ளி வீரக்கல் புதூர், மேட்டூர்.
37. மோகன்(19), ஜம்பை, பவானி, ஈரோடு.
38. பிரித்திக்(10), த/பெ பன்னீர்செல்வம், தாந்தோணிமலை, கரூர்.
39. பிருந்தா (22), புதுப்பட்டி சேந்தமங்கலம் அரவக்குறிச்சி.
39. கிஷோர் (18), த/பெ கணேஷ், காந்தி கிராமம், கரூர்.
40. கவின்(34), தொழிற்பேட்டை, கரூர்.
41. சுகுணா (65), தொழிற்பேட்டை, கரூர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+