கரூர் பலி! 72 நாள் அஞ்சலி செலுத்தக்கூட வெளியில் வராதவர்தான் முதல்வர் விஜய் - எடப்பாடி பழனிசாமி

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுராந்தகத்தில் அதிமு வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கரூர் துயரத்தில் பலியானவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தக்கூட 72 நாட்களாக வெளியில் வராதவர்தான் முதலமைச்சர் விஜய் என்று விமர்சித்திருக்கிறார்.

மேலும் அவர் பேசியதாவது, "கடந்த ஆண்டு கரூரில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். இந்த 41 பேருக்கு அஞ்சலி கூட செலுத்த வராத தலைவர்தான், இன்றைய முதலமைச்சர்.

Karur

இப்பொழுது வாழ்க்கிழிய பேசுகிறார்களே.. தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் கட்ட தலைவர்கள், அவர்கள் கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய முன்வரவில்லை. நெரிசலில் சிக்கி படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைகளில் சேர்த்தது மற்ற கட்சிகளின் தொண்டர்கள் தான்.

இந்த கட்சியைத் தவிர மற்ற அனைத்து கட்சிகளை சேர்ந்த தலைவர்களும், உயிரிழந்தவர்களின் உடலுக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்கள். நானும் சென்று அஞ்சலி செலுத்தினேன். இதுதான் அதிமுக வரலாறு.

ஆனால், நெரிசல் சம்பவத்துக்கு பிறகு.. தனது பிரச்சார வாகனத்தில் இருந்து இறங்கிய விஜய், எந்த வாகனத்தை பிடித்து விமான நிலையம் போனார் என்று தெரியவில்லை. துண்டை காணோம், துணியை காணோம் என்று அடித்து பிடித்து விமான நிலையம் வந்து.. அங்கிருந்து பனையூர் சென்று 72 நாட்களாக அவர் வெளியில் தலை காட்டவே இல்லை.

தனது சொந்த கட்சி கூட்டத்திற்கு வந்து அந்த நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் துக்கத்திற்கு கூட சென்று துக்கம் விசாரிக்காத ஒருவர் எனில், அது தவெக தலைவர் விஜய் தான்.

துக்கம் விசாரிப்பது எனில், உயிரிழந்தவர்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று.. உடல்களைப் பார்த்து.. உறவினர்களுக்கு ஆறுதல் சொல்ல வேண்டும். இதுதான் காலம் காலமாக இருக்கும் வழக்கம். ஆனால் விஜய் அவர்கள் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து.. அவர்களுக்கு ஆறுதல் சொல்கிறார். இப்படிப்பட்ட தலைவர் நாட்டுக்கு தேவையா?" என்று விமர்சித்திருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+