பைல்ஸ் வந்த பல்சர் பாபு.. டீ வாங்கி தந்த போலீஸ்.. விளைவு.. ஒரு மாத அலைச்சல்.. இப்ப நிம்மதி!
சென்னையில் தப்பி ஓடிய கைதி பல்சர் பாபு கைது செய்யப்பட்டார்.
Recommended Video

சென்னை: ஒரே ஒரு டீ வாங்கி தந்த பாவத்துக்காக போலீசாரை இவ்வளவு நாள் அலைக்கழித்த பல்சர் பாபு இப்போது சிக்கிவிட்டார்!!
காசிமேட்டின் பெரிய தாதான் பல்சர்' பாபு. இவர் மீது வழிப்பறி, கொள்ளை வழக்குகள் என கணக்கில்லாமல் உள்ளன. கொஞ்ச நாளைக்கு முன்பு ஒரு திருட்டு கேஸில் பல்சர் பாபுவை போலீசார் கைது செய்து குண்டர் சட்டத்தில் புழலில் அடைத்தனர்.
ஆனால் திடீரென்று பாபுக்கு பைல்ஸ் பிரச்சனை ஏற்பட்டது. அதனால் ஸ்டான்லி மருத்துவமனையில் சென்ற மாதம் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அதனால் அவருடன் 2 போலீசாரும் கூடவே பாதுகாப்புக்கு இருந்தனர்.

ஸ்டான்லி ஆஸ்பத்திரி
கடந்த அக்டோபர் 15-ம் தேதி காலை 6 மணி இருக்கும். பல்சர் பாபுக்கு டீ குடிக்க வேண்டும் போல் இருந்தது. அதனால் கூட இருந்த 2 போலீசாரிடம் ஒரு டீ வேண்டும் என்று கேட்டார். இதையடுத்து, 2 போலீசாரும் பைக்கில் பாபுவை உட்கார வைத்து ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு எதிரே இருந்த டீ கடைக்கு கூட்டி சென்றார்கள்.

பைக்கில் பறந்தார்
கடைக்கு வெளியே நின்று 3 டீ சொல்லி அதை வாங்கி குடித்து கொண்டிருந்தனர். டீ கடையில் பைக்கை நிறுத்திய போலீசார், அதன் சாவியை பைக்கிலிருந்து எடுக்க மறந்து விட்டனர். டீ குடித்து கொண்டே இதை கவனித்த பல்சர் பாபு, திடீரென பைக்கில் ஏறி உட்கார்ந்து கொண்டு மின்னல் வேகத்தில் சர்ரென பறந்தார்.

அதிர்ச்சியில் போலீசார்
ஆனால் அவ்வளவு அவசரத்தில் கிளம்பி போனாலும், பைக்கில் இருந்த துப்பாக்கியை பக்கத்தில் நின்றிருந்த ஒருவரிடம் கொடுத்துவிட்டு போனார் பாபு. அதிர்ச்சியில் நின்ற 2 போலீசாரும் உயரதிகாரிகளிடம் இதை பற்றி சொன்னார்கள். அப்போதிலிருந்து பல்சர் பாபுவை தேட ஆரம்பித்தார்கள் போலீசார். ஆனால் கிடைக்காமலேயே இருந்தார்.

அதிரடி கைது
இவரை பிடிக்க தனிப்படை ஒன்றும் அமைக்கப்பட்டது. இப்போது பெருங்களத்தூர் பகுதியில் இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைக்கவும் அங்கு விரைந்தார்கள். இறுதியில் அந்த பகுதியில் பதுங்கி இருந்த பல்சர் பாபுவை கைது செய்தனர். இப்போது தாதா பல்சர் பாபுவிடம் போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனர்.
-
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications