ஆளுநரோடு சண்டை போட்டுக்குங்க! திருவள்ளுவரின் அடையாளத்தை ஏன் மாத்துறீங்க! கனிமொழிக்கு கஸ்தூரி கேள்வி
சென்னை: சனாதன தர்மம் தமிழகத்தில்தான் தோன்றியது என ஆளுநர் ரவியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த கனிமொழி எம்பி அவரை அமைதி காக்குமாறு கூறியிருந்தார். இந்த நிலையில் கனிமொழியின் பதிலுக்கு நடிகை கஸ்தூரி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ராகவேந்திரா மடத்தின் பொன் விழா ஆண்டு நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில் தமிழகத்தில்தான் சனாதன தர்மம் உருவானது. தமிழகத்தில் உருவான சனாதனம் இந்தியா முழுவதும் பரவியது.
தமிழகம் ஒரு புனித பூமி. புனிதர்களும் மகான்களும் வாழ்ந்த இடம்தான் தமிழ்நாடு. இந்தியா ஒரு சனாதான நாடு. சனாதனம் தீண்டாமையை வலியுறுத்துகிறது என கூறுவது தவறு. யாதும் ஊரே யாவரும் கேளிர் என கூறும் சனாதனம் மனிதர்களிடையே எப்படி தீண்டாமையை எப்படி வலியுறுத்தும் என கேள்வி எழுப்பியிருந்தார்.

ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த பேச்சுக்கு திமுக எம்பி கனிமொழி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டிருந்த டவீட்டில் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற நெறியில் வந்த தமிழ்நாட்டிற்கும் பிறப்பால் பேதம் கற்பிக்கும் சனாதனத்திற்கும் எந்தத் தொடர்பும் இருந்ததில்லை என தெரிவித்துள்ளார். வரலாறு முழுவதும் பிறரது அடையாளங்களைச் சிதைத்து தனதாக்கிக் கொள்வதைத் தான் சனாதனம் செய்து வருகிறது.
அறிவியலுக்கு ஒவ்வாத புரட்டுகளைத் தவிர்த்து சனாதனத்திடம் வேறெதுவும் இருந்ததில்லை என்றும் தமிழ்நாடு என்னும் திராவிடப் பெருநிலம் அவற்றை ஒருநாளும் ஏற்றதுமில்லை, நாள்தோறும் ஏதேனும் அவதூறுகளைப் பரப்பியவாறு மக்களாட்சிக்கு இடையூறு விளைவித்து வரும் ஆளுநர் ரவி அவர்கள், சிறிது நேரம் அமைதி காக்கவும் என கனிமொழி கடுமையான விமர்சனத்தை முன் வைத்திருந்தார்.
கனிமொழியின் இந்த பதிவுக்கு நடிகையும் சமூகஆர்வலருமான கஸ்தூரி சங்கர் பதிலடி கொடுத்துள்ளார். அதில் தமிழரின் அடையாளங்களையும் நம்பிக்கைகளையும் அழிப்பதே மறக்கடிப்பதே திராவிடீய கொள்கை என்னும்போது.. ஆளுநர் ரவியோடு என்ன வேணாலும் சண்டை போட்டுக்குங்க. அதுக்காக திருவள்ளுவரின் அடையாளத்தை ஏன் மாற்றுகிறீர் என கேட்டுள்ளார். மேலும் திருக்குறளே அறம் பொருள் இன்பம் (வீடு) என்ற சனாதன தர்ம சிந்தனை நூல்தானே.
சனாதனம் என்றால் என்னென்று தெரியாமலே தான் கம்பு சுத்தி கொண்டிருக்கிறார்களா, சங்கி, சாதி, இந்து, பிஜேபி இதையே உடைஞ்ச ரெக்கார்டு போல... காவி இந்துக்கு மட்டுமில்லை. சாதி இன நிற பேதம் எங்கும் உண்டு. பெளத்தம், சமணம், எல்லாம் சனாதனமே. போங்க கதறுங்க என்றும் சாடியுள்ளார்.

நடிகை கஸ்தூரி பதிவிட்டுள்ள மற்றொரு டிவிட்டில் சனாதனம் என்றால் அழிவில்லாத என்று பொருள் என்றும் அது மதம் இல்லை, வாழ்வியல். சனாதன அறத்தை அடிப்படையாக கொண்டு உருவான மதங்கள் சைவம், வைணவம், பவுத்தம் , சமணம், ஆசீவகம் போன்றவை இன்னும் சொல்ல போனால், சீக்கியம் சனாதன தர்ம அடிப்படையிலான மிக முற்போக்கு சமயம் என்றும் நடிகை கஸ்தூரி விளக்கியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications