சத்யராஜ் கொடுத்த அல்வா.. ‘அனுபவம்’ எப்படி இருந்துச்சு? கஸ்தூரி தக் லைஃப் பதில்
சென்னை: நடிகர் சத்யராஜ் உடன் அமைதிப்படை படத்தில் அல்வா சீனில் நடித்தது குறித்து தன்னிடமே எப்போதும் கேள்வி எழுப்பப்படுவதாகவும், அந்த சீனில் அனுபவம் எப்படி இருந்து என்னிடமே கேட்கிறார்கள் எனக் கூறியிருக்கிறார் நடிகை கஸ்தூரி. அது மட்டுமல்லாமல் நியாயப்படி சத்யராஜ் இடம் தான் அந்த கேள்வியைக் கேட்க வேண்டும் எனவும் கூறியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களாக நடிகையாக பயணித்து வருபவர் கஸ்தூரி. குறிப்பாக 1990 காலகட்டங்களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர். சத்யராஜ், பிரபு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து கலக்கியவர்.
குறிப்பாக சத்யராஜ் உடன் அவர் நடித்த அமைதிப்படை திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதில் இடம் பெற்ற அல்வா சீனை யாராலும் மறக்க முடியாது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் இருந்த ஒதுங்கி அவர் சீரியல்களில் நடித்து வந்தார்.

அதற்குப் பிறகு தமிழ் படத்தில் ஒரு குத்துப் பாடலுக்கு நடனமாடியவர், தற்போது வரை அவ்வப்போது சில திரைப்படங்களில் தலைகாட்டி வருகிறார். தற்போது சினிமா மற்றும் அரசியல் என இரு குதிரைகளின் பயணித்து வரும் அவர், சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருப்பவர். மேலும், சினிமா சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசி வருகிறார். அப்படித்தான் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற வானரன் திரைப்பட நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர்," சினிமா என்றாலே பலருக்கும் தவறான பார்வை இருக்கிறது. வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு தான் அப்படி. உண்மையில் சினிமா மிக மிக பாதுகாப்பாக இருக்கிறது. இது நான் தைரியமாகவும் திமிராகவும் சொல்வேன். படப்பிடிப்பு நடக்கும் போது எங்களை சுற்றி இருக்கும் ஆண்கள் எங்களிடம் மிகவும் அன்போடு நடந்து கொள்வார்கள். தயவு செய்து யாரும் பெண்கள் குறித்தும் சினிமா துறையில் இருக்கும் ஆண்கள் குறித்தும் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்" என்றார்.
மேலும்,"நான் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் அமைதிப்படை படத்தில் அல்வா வாங்கி அனுபவம் எப்படி இருந்தது என என்னிடம் கேட்கிறார்கள். உண்மையில் அல்வா கொடுத்த சத்யராஜை யாருமே கேட்பதில்லை. இதுகுறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும்" எனக் கூறியிருக்கிறார்.
மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ், கஸ்தூரி, ரஞ்சிதா ஆகியோர் நடித்திருந்த அமைதிப்படை திரைப்படம் தமிழக சினிமா வரலாற்றில் மிக முக்கியமான திரைப்படம். அரசியல் நையாண்டி ஜானரில் வெளிவந்த இந்த திரைப்படம் தற்போது வரை பலரின் ஃபேவரைட். அந்த படத்தில் கஸ்தூரியை காதலித்து ஏமாற்றும் சத்யராஜ் அல்வாவில் போதைப் பொருளை கொடுத்து அவரை பாலியல் வன்கொடுமை செய்வது போல காட்சி நடந்திருக்கும்.
அந்த காட்சியை மட்டும் நான்கு மணி நேரம் படமாக்கியதாக கஸ்தூரி கூறியிருக்கிறார். மேலும் அந்த படப்பிடிப்பின் போது சத்யராஜ் தன்னிடம் மிகவும் கண்ணியமாக நடந்து கொண்டதாக பலமுறை அவர் சொல்லி இருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்தாண்டு திரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசிய விவகாரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் சத்யராஜ் ஹீரோயின்களை அப்பா கட்டிப்பிடிப்பது போல சீன் வைக்க வேண்டும் என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்த நிலையில், சத்யராஜ் மிகவும் ஜென்டில்மேன். அமைதிப்படை படத்தின் போது என்னிடம் மிகவும் கண்ணியமாக நடந்து கொண்டார்" என கஸ்தூரி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications