கஸ்தூரி சொல்ல வர்றது புரியுதா? தவெக அங்கிட்டு போனால் திமுகவுக்கு சிக்கல் போல? விஜயோட முடிவு என்ன
சென்னை: விஜய் விசில் சின்னம்தான் கேட்பார் என ஒரு ஆண்டுக்கு முன்னதாகவே பேசினேன், அது நான் கொடுத்த ஐடியாதான் என்று நடிகை கஸ்தூரி கூறியிருக்கிறார்.. அத்துடன், விஜய் சேர வேண்டிய இடத்திற்கு வழி பிறந்திடும் என்றும் கஸ்தூரி கூறியிருக்கிறார்... அப்படியானால் கஸ்தூரி சொல்லும் அந்த இடம் எது? இதுதான் எதிர்பார்ப்பையும், விவாதத்தையும் அரசியல் களத்தில் கிளப்பி விட்டுள்ளது.
தவெகவிற்கு பொது சின்னம் கிடைக்குமா? என்பது தொடர்பான விவாதங்கள் எழுந்தபடியே இருந்தது.. தற்போது விஜய்யின் தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது... தவெக கேட்டபடியே சின்னமும் கிடைத்தாகிவிட்டது.

நடிகை கஸ்தூரி பாஜக
எனினும், அந்த சின்னத்தை அறிமுகம் செய்யும் வகையில் விஜய் தன்னுடைய கையில் விசிலுடன் இருக்கும் போட்டோ எதுவும் வெளியிடாதது தொண்டர்களிடமும், ரசிகர்களிடமும் குழப்பத்தை தந்து கொண்டிருக்கிறது..
ஆனால் அதற்குள் காங்கிரஸ் முந்திக்கொண்டு வந்து தன்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்துள்ளது.. காங்கிரஸ் கட்சியின் தரவு பகுப்பாய்வு பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், சட்டசபை தேர்தலுக்கான விசில் ஊதப்பட்டு விட்டது.. அனைத்து கட்சிகளும் இப்போது தயாராகிவிட்டன என்று பதிவிட்டுள்ளார்.. இதை திமுகவும் கவனித்து கொண்டுதான் இருக்கிறது.
கஸ்தூரி விசில் சின்னம்
இந்த நிலையில் பாஜக பிரமுகரும், பிரபல நடிகையுமான கஸ்தூரி, செய்தியாளர்களிடம் பேசும்போது, "விஜய் விசில் சின்னம்தான் கேட்பார் என ஒரு ஆண்டுக்கு முன்னதாகவே பேசினேன்; அது நான் கொடுத்த ஐடியாதான்; தை பிறந்ததும் அவருக்கு சின்னம் பிறந்திருக்கிறது; அடுத்ததாக அவர் சேர வேண்டிய இடத்திற்கு வழி பிறந்திடும்" என்று தெரிவித்துள்ளார்.
கஸ்தூரி சொல்லி உள்ள இடம் எது? என்பதுதான் தெரியவில்லை.. சில மாதங்களுக்கு முன்பும் கஸ்தூரி செய்தியாளர்களிடம் பேசும்போது, கரூர் விவகாரத்துக்கு பிறகும்கூட விஜய்யின் மேல் இருக்கின்ற நம்பிக்கை இழக்கவில்லை.
உண்மையாக சொல்கிறேன் திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற குறிக்கோள் எல்லாரிடமும் இருக்கிறது. டி.டி.வி.தினகரனிடம் இருக்கிறது. விஜய்க்கும் இருக்கிறது. அதிமுகவுக்கும் உள்ளது.. அதனால் இவர்கள் எல்லோரும் சேர்ந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் செயல்படுவது தான் சிறப்பாக இருக்கும். விஜய்யின் தலைமையில் ஒரு கூட்டணி என்பது சரியாக வராது'' என்று வெளிப்படையாக கூறியிருந்ததையும் இங்கு நாம் நினைவூட்ட வேண்டி உள்ளது..
விஜய் முடிவு என்ன
கஸ்தூரி எதிர்பார்க்கும்படியான முடிவை தவெக எடுக்கும் பட்சத்தில், அப்படியொரு கூட்டணி உருவாகும் பட்சத்தில் அது திமுகவுக்குதான் நெருக்கடியை தரும், இதனால், திமுக பழைய வாக்குகளை இழக்கக் கூடும் என்று கணித்து கூறுகிறார்கள் அரசியல் விமர்சகர்கள்
ஒருவேளை புதிய கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்றால், திமுக ஒரு முக்கிய எதிர்க்கட்சியாக விடவே வாய்ப்புள்ளதாகவும் சொல்கிறார்கள்.
யாருடன் தவெக கூட்டணி?
இதனால் தன்னுடைய கட்சி உள்கட்டமைப்பை வலுப்படுத்தி, பொதுமக்களின் நம்பிக்கையை பெற திமுக மீண்டும் முயற்சிக்க வேண்டியிருக்கும்...
மொத்தத்தில், விஜய் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேரும் வாய்ப்பு, தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஒருபக்கம் தேசிய ஜனநாயக கூட்டணி, மறுபக்கம் தமிழக காங்கிரஸின் ஒருசாரார் காத்திருக்கும் நிலையில், விஜய் என்ன முடிவெடுக்க போகிறார்? பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
துண்டு துண்டாக உடைகிறதா திமுக ஓட்டு? சென்னை வேளச்சேரி தவெக விஜய் 18% வாக்குகளா? ஷாக் பாயிண்ட் -
புஸ்சி ஆனந்த் ஒழிக.. கோஷமிட்ட தவெக நிர்வாகிகள்.. புதுவையில் போட்டியிட சீட் வழங்காததால் ஆதங்கம் -
தவெக மாய உலகத்தில் இருக்கிறது.. கிராமப்புறங்களில் காத்து வாங்கும் கட்சி! ஷாக் ரிப்போர்ட் -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக் -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
Election Exclusive: அணில் மோட் ஆக்டிவேட் பண்ணுங்க.. நண்பா நண்பீஸ் ரெடியாகுங்க! எலக்சனுக்கு முன் விஜய் போடும் மெகா ப்ளான் -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
2026 தேர்தலில் புதிய சக்திகள்! 5 முனை போட்டிக்கு வழிவகுத்த ஜூனியர்ஸ்! யாருக்கு சாதகம்? பாதகம்? -
Velmurugan: அதிமுகவில் 3 சீட்? பாஜக கூட்டணிக்கு செல்லமாட்டேன்! தவாக வேல்முருகன் உறுதி! -
தவெகவில் இணைந்த அன்றே சீட் கொடுத்த விஜய்.. பாஜகவில் இருந்து தாவி உடனே வேட்பாளர் ஆன சாய் சரவணன்! -
Aadhav Arjuna: தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தமிழ் வழியில் கல்வி பயின்றவரா? உண்மை என்ன! -
சொதப்பும் ஸ்டாலின்.. திமுகவுக்கு எதிராக திரும்பும் வன்னியர் வாக்கு! தலித் வாக்குகளை பிரிக்கும் விஜய்












Click it and Unblock the Notifications