ரஜினி முதலில் கட்சி தொடங்கட்டும்... அப்போது அது பற்றி பேசலாம் -கஸ்தூரி
சென்னை: ரஜினிகாந்த் முதலில் அரசியல் கட்சி தொடங்கட்டும், அதன் பிறகு அவர் யாருடன் கூட்டணி வைப்பார் என்பது பற்றியெல்லாம் பேசுவோம் என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
மேலும், பாலியல் கொடூர நிகழ்வுகள் குறித்து மக்களின் கருத்தை தான் ராகுலும் பிரதிபலித்திருக்கிறார் என்றும், அதனால் அவருடைய கருத்தில் தவறு இல்லை எனவும் கூறியுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள லீ மெரிடியன் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார்.

பொறுமை
ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது பற்றி நடிகை கஸ்தூரியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, அதற்கு பதிலளித்த அவர், கர்ப்பம் ஆவதற்கு முன்பே குழந்தைக்கு பெயர் வைக்க முடியாது. அதைப்போல் ரஜினி கட்சி தொடங்குவதற்கு முன்பே அவர் யாருடன் கூட்டணி வைப்பார், எப்படி அரசியல் செய்வார் என்றெல்லாம் தெரிவிக்க முடியாது எனக் கூறினார்.

தவறில்லை
பாலியல் கொடூரங்கள் அதிகரிப்பது தொடர்பாக ராகுல் காந்தி தெரிவித்த கருத்தில் எந்த தவறும் இல்லை என்றும், மக்களின் எண்ணங்களைத் தான் அவர் பிரதிபலித்துள்ளார் எனவும் கூறினார். பிரிவினைவாதத்தை பரப்பும் கூட்டம் இந்தியாவில் இருப்பதாக சாடினார்.

தேர்தல் கலாட்டா
மேலும், உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுமா நடைபெறாதா என்ற சூழலில் உள்ளாட்சியை வைத்து நாள்தோறும் கலாட்டா மட்டுமே நடப்பதாக நகைச்சுவைத் தெரிவித்தார். மதத்தின் பெயரால் மக்களை பிளவுப்படுத்தும் செயல்கள் அதிகரித்து வருவதாக வேதனைத் தெரிவித்தார்.

தொடங்கி வைப்பு
சென்னை கிண்டியில் உள்ள லீ மெரிடியன் 5 நட்சத்திர விடுதியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழாவிற்கான துவக்க நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட நடிகையும், சமூக ஆர்வலருமான கஸ்தூரி மேற்கண்ட இந்த கருத்தைக் கூறினார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications