அப்பாடா.. நாரதர் கலகம் நன்மையில் முடிந்தது.. தலைவரை வரவேற்க தயாராகட்டும் தமிழகம்.. கஸ்தூரி ட்வீட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினி அமெரிக்கா சென்றது குறித்து அலைபேசியில் அழைத்து விளக்கினார்கள் என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

உடல் பரிசோதனைக்காக ரஜினிகாந்த் அமெரிக்கா சென்றுள்ளார். இதுகுறித்து கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்திற்கு அமெரிக்கா செல்ல அனுமதி கிடைத்தது எப்படி? மருத்துவ பரிசோதனை என்றால் இந்தியாவில் இல்லாத மருத்துவமனையா?

அமெரிக்காவுக்கு சென்று சோதனை செய்ய வேண்டிய அளவுக்கு அவருக்கு என்ன பிரச்சினை, இதை ரஜினி தெளிவுப்படுத்த வேண்டும் என டிவிட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார்.

ரஜினி ரசிகர்கள்

ரஜினி ரசிகர்கள்

இதையடுத்து கஸ்தூரியை ரஜினி ரசிகர்கள் ட்விட்டரில் தெறிக்கவிட்டார்கள். உங்களது தனிப்பட்ட விவரங்களை நீங்கள் பொதுவெளியில் தெரிவிப்பீர்களா, ஒருவரது தனிப்பட்ட உடல்நிலை சார்ந்த விஷயத்தை சம்பந்தப்பட்டவர் அனுமதி இல்லாமல் பேசுவது சட்டவிதிமீறல் என ரசிகர்களும் ட்விட்டர்வாசிகளும் கோபமடைந்தனர்.

வாழ்த்து

வாழ்த்து

ஒருவர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார் என்றால் அவர் நல்லபடியாக ஊர் திரும்ப வேண்டும் என வாழ்த்துவதை விட்டுவிட்டு தேவையில்லாத விவாதங்கள் தேவைதானா என்றும் சிலர் கேட்டனர். இந்த நிலையில் ரஜினிகாந்த் அமெரிக்காவுக்கு எதற்காக சென்றார் என்பது குறித்து செல்போனில் விளக்கியதாக ட்வீட் போட்டுள்ளார்.

கஸ்தூரி ட்வீட்

கஸ்தூரி ட்வீட்

இதுகுறித்து கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் அலைபேசியில் அழைத்து விவரத்தை விளக்கினார்கள்.
ஆச்சரியம் கலந்த நன்றி ! நாரதர் கலகம் நன்மையில் முடிந்தது. என் உள்மன கலக்கமும் முடிவுக்கு வந்தது. நல்ல செய்தி- நானே முதலில் சொல்கிறேன். பூரண நலமுடன் புது பொலிவுடன் 'தலைவரை' வரவேற்க தயாராகட்டும் தமிழகம்! என அவர் தெரிவித்துள்ளார்.

விளக்கத்தை சொல்லுங்க

விளக்கத்தை சொல்லுங்க

இதையடுத்து என்னத்த வெளக்குனாங்கனு கொஞ்சம் விவரமா விளக்குவீங்கன்னு நம்புறோம்னு ஒருவர் வலைஞர் கேட்ட கேள்விக்கு கஸ்தூரி, சொல்ல முடிந்ததை சொல்லிவிட்டேன் என்றார். அவர்கள் சொன்ன விளக்கத்தை ஏன் நீங்கள் இங்கு ஷேர் செய்யக் கூடாது என ஒருவர் கேட்க, அதற்கு கஸ்தூரி, மருத்துவம் என தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+