தமிழக அரசியலில் 'பெரியாள்' ஆகணுமா? மனைவி-துணைவினு தெனாவட்டா மெயின்டெயின் பண்ணனும்! கஸ்தூரி கிண்டல்
சென்னை: தமிழக அரசியலிலே பெரியாளா வரணும்னா மனைவி, துணைவியை மெயின்டெயின் செய்ய வேண்டும் என நடிகை கஸ்தூரி கிண்டலாக தெரிவித்துள்ளார். விஜய் திரிஷா விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில் தற்போது ஆளாளுக்கு கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.
விஜய்யின் அரசியல் அனுபவமின்மையை விமர்சித்த நயினார் நாகேந்திரன், "விஜய் முதலில் திரிஷா வீட்டிலிருந்து வெளியே வந்து அரசியல் செய்யட்டும்" என்று கண்ணியக்குறைவான கருத்து தெரிவித்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி, பெரும் கண்டனத்தை ஏற்படுத்தியது. திரிஷா தரப்பில் வழக்கறிஞர் மூலம் அறிக்கை வெளியிட்டு, "என் பெயரை அரசியல் சர்ச்சைகளில் இழுக்க வேண்டாம். தனிப்பட்ட வாழ்க்கை பொது விவாதத்துக்கு உரியதல்ல. அவமதிப்பை எப்போதும் கண்டிப்பேன்" என்று கடுமையாக கண்டித்தார்.

திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் "அநாகரிகம்" என்று கண்டனம் தெரிவித்தன. பெண்ணியவாதிகள், மகளிர் அமைப்புகள் நயினாருக்கு மன்னிப்பு கோரின. நயினார் பின்னர் வருத்தம் தெரிவித்து, "யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை. வாய் தவறி பேசிவிட்டேன்" என்றார்.
இந்நிலையில், பிப்ரவரி 2026-இல் விஜய்யின் மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்தது பரபரப்பை அதிகரித்தது.
மனுவில், விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாகவும், இது மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. இதை பலரும் திரிஷாவுடன் தொடர்புபடுத்தினர்.
இதன் தொடர்ச்சியாக, சென்னை திருவான்மியூரில் தயாரிப்பாளர் கல்பாத்தி சுரேஷ் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் விஜயும் திரிஷாவும் ஒரே காரில் வந்து, ஒரே நிற ஆடையில் ஜோடியாக பங்கேற்ற வீடியோ வைரலானது. இது ரசிகர்கள், அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
நடிகை காஜல் பசுபதி "உங்க ரசிகைனு சொல்லவே வெட்கமா இருக்கு" என்று விமர்சித்தார். சனம் ஷெட்டி போன்றோர் சங்கீதாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். சிலர் விஜய்யின் அரசியல் எதிர்காலத்துக்கு இது "பொலிடிகல் சூசைட்" என்று கூறினர்.
அது போல் விஜய்யின் ரசிகர்களும் தவெகவினரும் கூட பலர், "தேர்தல் நேரத்தில் இதெல்லாம் தேவையா" என கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஏற்கெனவே விஜய் யாருக்கும் உதவி செய்ததில்லை, பொதுமக்களை சந்திக்கவில்லை, மீடியாவுக்கு பேட்டி அளிக்கவில்லை என கூறி வருகிறார்கள். இந்த நிலையில் கேரக்டரை டேமேஜ் செய்துக் கொள்வது போல் இப்படி பொதுவெளியில் ஜோடி போட்டுக் கொண்டு போய் எதிராளிகளுக்கு நாமே பாயிண்டுகளை வலிய எடுத்துக் கொடுக்கலாமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில் விஜய், திரிஷாவின் பெயரை சொல்லாமல் நடிகை கஸ்தூரி கூறியிருப்பதாவது: தமிழக அரசியலிலே பெரியாளா வரணும்னா என்ன பண்ணனும்? மனைவி துணைவி இணைவின்னு தெனாவட்டா மெயின்டைன் பண்ணனும்.
கடைசியிலே இதுலதான் போட்டி போல. இதுக்கு எதுக்கு லாயர் நோட்டீஸ், அறிக்கை, பெண்ணியம் புண்ணாக்கியம் எல்லாம். இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
விஜய் அரசின் முதல் MoU.. பரந்தூருக்கு ஒரு நியாயம்? டேட்டா சென்டருக்கு ஒரு நியாயமா? -
அதிகாலை 7 மணிக்குள் கள ஆய்வு பண்ணுங்க.. விஜய் அசத்தல்! மாநகராட்சி ஆணையர்களுக்கு அரசு உத்தரவு -
அடித்து ஆடும் விஜய்! லஞ்சம் வாங்குனா காலி! சென்னை மாநகராட்சி நகரமைப்பு அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம் -
விஜய் தலைமையில் நாளை முதல் அமைச்சரவை கூட்டம்.. ரெடியாகும் ஃபைல்ஸ்.. எடுக்கப்படும் முக்கிய முடிவு? -
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி











Click it and Unblock the Notifications