பார்ரா.. பேச்சோடு பேச்சா ராஜேந்திர பாலாஜியையே கலாய்த்து விட்டாரே கஸ்தூரி
அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை விமர்சித்து கஸ்தூரி ட்வீட் செய்துள்ளார்.
சென்னை: அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை இதைவிட வேறு யாரும் கலாய்த்துவிட முடியாது.. கஸ்தூரிக்கு தில் கொஞ்சம் ஜாஸ்திதான்!
பொதுவாக நாட்டு நடப்புகளை உன்னிப்பாக கவனித்து கொண்டு, அவற்றை மிச்சம் வைக்காமல் கலாய்த்து வருபவர் கஸ்தூரி.

சில சமயம், அறிவுஜீவிதனம் என்ற பெயரில் உளறி கொட்டி, நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக் கொள்வார். சில சமயம் சமூக அவலங்களை தன் பதிவுகள் மூலம் கழுவி கழுவி ஊற்றுவார். கஸ்தூரியின் ட்வீட்டுகளுக்கு வரவேற்பும், எதிர்ப்பும் என மாறி மாறி எழுந்து வருவது இயல்பு.
இப்போது கமல் சமாச்சாரம் நாடு முழுவதும் கொளுந்து விட்டு எரிகிறது. இதற்கு கமல் பேச்சினை இந்து அமைப்புகள் எதிர்த்து வந்தாலும், ஒருசாரார் கமல் பேசியது சரிதான் என்றும் சொல்லி வருகின்றனர்.
’கமல் நாக்கு அறுபடும் " என்று கூறியதில் எந்த மிரட்டலும் கிடையாது - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி...
— Kasturi Shankar (@KasthuriShankar) May 14, 2019
பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்....கைப்புள்ள காமெடி தான் நினைவுக்கு வருது ! pic.twitter.com/KgEYeObJDy
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கமல் நாக்கு அறுபடும் என்று வன்முறையை கையில் எடுத்துவிட்டார். ஒரு அமைச்சர் இப்படி பேசலாமா என்று கேட்டதற்கு, அப்படி பேசியதில் எந்த தவறும் இல்லை, மிரட்டலும் கிடையாது என்றார். அமைச்சரின் இந்த விளக்கத்தை கஸ்தூரி தனது ட்வீட்டில் பதிவிட்டுள்ளார்.
அதில், "கமல் நாக்கு அறுபடும் " என்று கூறியதில் எந்த மிரட்டலும் கிடையாது - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி... பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்....கைப்புள்ள காமெடி தான் நினைவுக்கு வருது!" என்று தெரிவித்துள்ளார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைப்புள்ள ரேஞ்சுக்கு கஸ்தூரி கலாய்த்துள்ளதுதான் இப்போது வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications
