"போடுறா வெடிய" கஸ்தூரி ஓவரா எக்ஸைட் ஆககூடாது.. வெடி நமத்து போச்சு.. வெடிக்காது.. ரஜினிக்கு செம கலாய்
ரஜினிகாந்த் அரசியல் பேச்சு குறித்து கஸ்தூரி ட்வீட் பதிவிட்டுள்ளார்
சென்னை: "அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் இப்போது நிகழவில்லை எனில் எப்போதுமே நிகழாது" என்று ரஜினிகாந்த் பேசியதற்கு "போடுறாவெடிய" என்று கஸ்தூரி ஒத்த வார்த்தை ட்வீட் போட்டுள்ளார்.. உண்மையிலேயே கஸ்தூரி ரஜினி பேசியதை பாராட்டுகிறாரா, கிண்டல் செய்கிறாரா என தெரியாமல் குழம்பி போய் அவருக்கு பதிலளித்து வருகிறார்கள்.
Recommended Video
காலையில் ரஜினிகாந்த் அரசியல் குறித்து பேசினார்.. அதிமுக, திமுகவை சரமாரி விமர்சித்தவர், இறுதியில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

ரஜினிகாந்த் பேச்சு குறித்து சீமான் உட்பட பலரும் கருத்துதெரிவித்து வருகின்றனர்.. அந்த வகையில் நடிகை கஸ்தூரி ஒரு ட்வீட் போட்டுள்ளார்.. வழக்கமாக எதையுமே விலாவாரியாக சொல்பவர் இந்த ட்வீட்டில் மட்டும் ஒரே வார்த்தையோடு முடித்து கொண்டுள்ளார்.
அதில், "அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் இப்போது நிகழவில்லை எனில் எப்போதுமே நிகழாது -ரஜினிகாந்த் அதிரடி என்று குறிப்பிட்டு "போடுறாவெடிய " என்ற வார்த்தையை பதிவிட்டுள்ளார். எதனால் கஸ்தூரி இப்படி சொன்னால் என தெரியவில்லை.. ரஜினியை பாராட்டி சொன்னதாகவே இதன் அர்த்தம் எடுத்து கொள்ளப்பட்டுள்ளதாகவே தெரிகிறது.
இதையடுத்து ட்விட்டர்வாசிகள் கஸ்தூரிக்கு அட்வைஸ் தெரிவித்தும், கருத்து சொல்லியும் வருகின்றனர்.. "கஸ்தூரி ஓவரா எக்ஸைட் ஆக கூடாது அது உடம்புக்கு நல்லது இல்லை.. அந்த ஆளு சொன்னதோட அர்த்தமென்னன்னு தெரியுமா? தமிழ்நாடு மொத்த மக்களும் போயி அய்யா எங்களுக்கு அரசியல் மாற்றம் வேணும் நீங்க வாங்கன்னு கெஞ்சணுமின்னு எதிர்பாக்குறது போல தெரியுது கொள்கைன்னு என்னமோ பிதற்றுவது என்னன்னு தெரியுமா" என்கிறார் ஒருவர்.

மற்றொருவரோ, "இந்தம்மா ரஜினி பேசுனதுல கடைசி ரெண்டு வரிய மட்டும் கேட்டுட்டு வந்து வெடிய போட சொல்லுதே... ஆனால் தலைவர் பேச ஆரம்பிச்சப்பவே ரசிகர்கள் தலையில் வெடிய போட்டுட்டாரே....அதை யாராச்சும் புரிய வைங்கய்யா.." என்று பதிவிட்டுள்ளார்.
இன்னொருவர் "வெடி நமத்து போச்சு, வெடிக்கவே வெடிக்காது" என்றும், "என்னத்த சொல்லிட்டாருன்னு இப்படி குதிக்குறீங்க?? நான் அரசியலுக்கு வரமாட்டேன்னு இப்படி சுத்தி குழப்பி அடிச்சு இருக்கார்.. அவ்வளோ தான்.." என்று கஸ்தூரிக்கு புரிய வைக்கிறார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications