வாக்கிங் போன கதிரவன் ஐஏஎஸ்.. நெஞ்சை பிடித்தபடியே சாய்ந்த சோகம்.. சிகிச்சை பலனின்றி மரணம்
கதிரவன் ஐஏஎஸ் அதிகாரி மாரடைப்பால் இறந்த நிலையில் அவரது இறப்புக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
சென்னை: தமிழ்நாடு நெடுஞ்சாலை திட்டப் பணிகள் இயக்குநர் கதிரவன் திடீர் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 52. அவரது இறப்புக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
ஈரோடு, கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் ஆட்சியராக இருந்தார் கதிரவன். குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்ற கதிரவன் கடந்த 2002 ஆம் ஆண்டு தருமபுரி மாவட்டத்தின் துணை ஆட்சியராக பணியில் சேர்ந்தார். இதைத் தொடர்ந்து அவர் கள்ளக்குறிச்சி, அறந்தாங்கி, விழுப்புரம் ஆகிய இடங்களில் வருவாய் கோட்டாட்சியராக பணியாற்றினார்.
2013 ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக கதிரவன் பதவி உயர்வு பெற்றார். இதையடுத்து சேலம் ஆவின் பொது மேலாளராகவும் மதுரை மாநகராட்சி கமிஷனராகவும் பணியாற்றியுள்ளார். இதைத் தொடர்ந்து சேலம் மேக்னசைட் பொது மேலாளராகவும் பணிபுரிந்துள்ளார். அவர் தற்போது சென்னையில் தமிழ்நாடு நெடுஞ்சாலை திட்ட பணிகளின் இயக்குநராக பணியாற்றி வந்தார்.

அவர் நேற்றைய தினம் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். கதிரவனுக்கு தேன்மொழி என்ற மனைவியும் இரு பெண் குழந்தைகளும் உள்ளனர்.
கதிரவனின் உடல் அவரது சொந்த ஊரான நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே காந்திபுரத்தில் உள்ள அவரது வீட்டில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு தமிழக நெடுஞ்சாலை மற்றும் பொதுப் பணிகள் துறை அமைச்சர் எ.வ.வேலு, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் தமிழக அரசு சார்பில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் மாலை 6 மணிக்கு காந்திரபுரம் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
ஐஏஎஸ் அதிகாரி கதிரவன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்ட இயக்குநர் கதிரவன் ஐஏஎஸ் உடல் நலக் குறைவால் மறைவெய்திய செய்தி கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்!












Click it and Unblock the Notifications