அம்மா வலிக்குதுனு சொல்லியும் கடித்த கட்டுவிரியன் பாம்பு! தூக்கத்தில் நரம்பு மண்டலத்தை முடக்கிய விஷம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாம்புகளில் விஷமுள்ள பாம்பாக கருதப்படுவது கட்டு விரியன்.. ஆனால் கட்டு விரியன் இரவு நேரத்தில் கடிப்பதாகவும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் இரவு நேரத்திலேயே ஏற்படுவதாகவும் சொல்லப்படுவதுண்டு.. கட்டுவிரியன் பாம்பு ஏன் இரவு நேரத்தில் அதிகம் நடமாடுகிறது? தூக்கத்தில் கடித்தால் ஏன் ஆபத்து அதிகம்? இந்த பாம்பு கடித்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்? விரிவாகப் பார்க்கலாம்.

கட்டுவிரியன் பாம்பு இந்தியாவிலுள்ள மிகவும் அபாயகரமான 4 விஷப் பாம்புகளில் ஒன்றாகும். இதன் உடலில் கறுப்பு நிற பின்னணியில் வெள்ளை நிற இரட்டை வரிகள் குறுக்காக அமைந்திருக்கும்.. இந்த வரிகள் பார்ப்பதற்கு உடலில் மோதிரங்கள் அல்லது கட்டுகள் போட்டது போலவே இருக்கும்.. அதனால்தான் இதற்கு "கட்டுவிரியன்" என்று பெயர் வந்ததாம்.

Kattuviriyan Snake

கட்டுவிரியனின் இரவு நேர வேட்டை

இந்த கட்டுவிரியன் பெரும்பாலும் இரவு நேரங்களில் மட்டுமே நடமாடும் பழக்கம் கொண்டதால், பகல் நேரத்தில், பழைய கட்டிட இடுக்குகள் அல்லது வளைகளுக்குள் பதுங்கி இருக்கும்.. இரவில் எலிகளை வேட்டையாட வெளியே வரும் பழக்கம் கொண்டது.. அதனால்தான் சில நேரங்களில் வீடுகளுக்குள்ளும் நுழைந்து விட நேர்கிறது.. இதனால் தூங்கிக்கொண்டிருக்கும் நேரத்தில் வீடுகளுக்குள் புகுந்து விடும் அபாயமும் உள்ளது.. குறிப்பாக தரையில் பாய் விரித்துத் தூங்குபவர்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

நரம்பு மண்டலத்தை முடக்கி..

மற்ற சில பாம்புகளைப் போல சீறி எச்சரிக்கும் பழக்கம் இதற்கு அதிகம் இல்லை. அதனால்தான், பக்கத்தில் பாம்பு இருப்பதே பலருக்கும் தெரியாமலேயே போய்விடுகிறது.. நள்ளிரவில் அதிகமாக நடமாடுவதால், இரவு நேரங்களில் கட்டு வரியன் கடியால் ஏற்படும் விபத்துகள் அதிகம் நிகழ்ந்து விடுவதாக மருத்துவ பதிவுகள் கூறுகின்றன..

எனவே இரவு நேரங்களில் வீட்டின் தரைப்பகுதியில் படுத்து உறங்குபவர்கள் இந்த பாம்பின் நடமாட்டம் குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் பாம்புபிடி வீரர்கள் அறிவுறுத்துகிறார்கள்..

பொதுவாக, கட்டுவிரியன் பாம்புகள், மனிதர்களை தேடி சென்று தாக்கும் பாம்புகள் கிடையாதாம்.. அதனால்தான் இதனை மிகவும் "அமைதியான பாம்பு" என்று சொல்கிறார்கள்.. யாராவது தன்னை மிதித்தாலோ, நெருக்கினாலோ அல்லது அச்சுறுத்தல் ஏற்பட்டாலோ தற்காப்புக்காக கடிக்கக்கூடியவை..

கட்டுவிரியன் கடித்தால் அறிகுறிகள்

ஆனால், இந்த பாம்பின் வீரியமிக்க விஷம், மனிதனின் நரம்பு மண்டலத்தையே தாக்கும் தன்மையுடையது... மற்ற பாம்புகள் கடித்தால் வலி கடுமையாக இருக்கும், ஆனால் கட்டுவிரியன் கடித்தால் அந்த இடத்தில் பெரிய அளவில் வலியோ அல்லது வீக்கமோ இருக்காது.

தூங்கிக் கொண்டிருக்கும் ஒருவரின் கை அல்லது கால் மீது கட்டுவிரியன் கடித்தால், அவருக்கு உடனடியாக வலி தெரியாமல் போகலாம். சில நேரங்களில் பாம்பு கடித்ததே தெரியாமல் தொடர்ந்து தூங்குவார்கள். ஆனால் அந்த நேரத்தில் விஷம் உடலுக்குள் பரவத் தொடங்கியிருக்கும்.

கள்ளக்குறிச்சி குழந்தைகள்

அப்படித்தான் நேற்றிரவு கள்ளக்குறிச்சியில் தூங்கி கொண்டிருந்த 2 பெண் குழந்தைகள் உட்பட தாயையும் கட்டுவிரியன் கடித்துள்ளது. அந்த குழந்தைகளும் பாம்பு கடித்தது தெரியாமலேயே தூக்கத்திலேயே இறந்துவிட்டார்கள்..

கட்டுவிரியன் பாம்புகளின் ஆபத்தே இதுதான்.. பாம்ப கடித்த வலியே தெரியாமல் நேரடியாக நரம்பு மண்டலத்தையே அந்த விஷம் தாக்கிவிடுமாம். உடனே நுரையீரலில் வீக்கம் ஏற்பட்டு, கண்களை கூட திறக்க முடியாமல் போய்விடும.. சில சமயம், ஈறுகளிலிருந்து ரத்தம் வருதல், சிறுநீரில் ரத்தம் கலத்தல், வாந்தி, மயக்கம், உடல் பலவீனம் போன்ற அறிகுறிகள் தோன்றலாம்.

கடிபட்டவர்கள் சுயநினைவையும் இழப்பார்கள்.. வாயில் துர்நாற்றத்துடன் எச்சல் வடிதல், சுவாசம் குறைதல் போன்ற அறிகுறிகளும் தோன்றுமாம்.. நேரம் அதிகரிக்க அதிகரிக்க, நுரையீரலின் திறன் குறைந்து, கடிபட்டவர்கள் மூச்சுத்திணறியே உயிரிழக்கும் அபாயமும் உள்ளது..

கேரளா சிறுவன் நினைவிருக்கா

சிலசமயம் உடல் வலியும் இருக்கும்.. ஆனால், பாம்பு கடித்துதான் அந்த உடல் வலி ஏற்படுகிறது என்றுகூட பலருக்கும் தெரியாது.. 2 மாதங்களுக்கு முன்பு கேரளாவில் ஒரு சம்பவம் நடந்தது..

திருச்சூர் கோடாலி பகுதியைச் சேர்ந்த சில்ஜோ - ஜோண்ஷி தம்பதியின் 8 வயது இளையமகன் ஆல்ஜோ, நள்ளிரவில் படுக்கையில் தன்னை ஏதோ கடித்ததாகவும், உடம்பெல்லாம் வலிப்பதாகவும், வாந்தி வருவதாகவும் பெற்றோரிடம் அழுது சொல்லியிருக்கிறான்.

ஆனால் தூக்கத்திலிருந்த பெற்றோர், காலையில் பார்த்துக்கொள்ளலாம், பேசாமல் தூங்கு என்று சொல்லயிருக்கிறார்கள்..மறுநாள் காலையில் பேச்சுமூச்சின்றி கிடந்துள்ளான் அந்த சிறுவன்.. மருத்துவமனைக்கு பெற்றோர் கொண்டு சென்றபோது, அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள்.. இதற்கு பிறகுதான் அதிர்ச்சியடைந்த பெற்றோர், மகன் படுத்திருந்த தலையணையைத் தூக்கிப் பார்த்தபோது அங்கே 2 அடி நீளமுள்ள கொடிய கட்டுவிரியன் பாம்பு பதுங்கியிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்..

எனவே, உடம்பு வலி, வாந்தி உணர்வு போன்றவையும் கட்டுவிரியன் பாம்பு கடித்ததன் அறிகுறியாக கருதப்படுகிறது. இரவு நேரத்தில் பாம்பு கடி மரணம் என்றாலே அது பெரும்பாலும் கட்டுவிரியன் பாம்புகளே காரணமாக உள்ளன.

கட்டுவிரியன் கடித்தால் என்ன செய்ய வேண்டும்?

பாம்பு கடித்துவிட்டால் பதற்றத்தில் ஓடக்கூடாது. பாதிக்கப்பட்டவரை அமைதியாக இருக்கச் செய்து, கடிபட்ட கை அல்லது காலை அசையாமல் வைத்திருக்க வேண்டும். கடித்த இடத்தை கத்தியால் கீறி ரத்தத்தை வெளியேற்றக் கூடாது. வாயால் விஷத்தை உறிஞ்சக் கூடாது. கயிறு அல்லது துணியால் இறுக்கமாகக் கட்டக் கூடாது. நாட்டு மருந்துகளையும் பயன்படுத்தக் கூடாது.

உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும். தேவையானவர்களுக்கு மருத்துவர்கள் விஷமுறிவு மருந்து செலுத்தி, சுவாசப் பாதிப்புகளையும் கண்காணிப்பார்கள்... கட்டுவிரியன் கடித்தவர்களுக்கு சில நேரங்களில் செயற்கை சுவாசம் அளிக்கும் சிகிச்சையும் தேவைப்படலாம்.

முக்கியமாக, கடித்த இடத்தில் வலி இல்லை, வீக்கம் இல்லை என்பதற்காக ஆபத்து இல்லை என்று நினைக்கக் கூடாது. பாம்பு கடித்ததாக சந்தேகம் ஏற்பட்டாலே உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.. தாமதம் உயிருக்கு ஆபத்தாக முடியும்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+