உடுமலை சங்கர் ஆணவக்கொலைக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை.. தமிழக அரசை சாடும் கௌசல்யா
சென்னை: உடுமலைப்பேட்டை சங்கர் சாதி ஆவண படுகொலை வழக்கில் சாட்சியங்களை நிரூபிப்பதில் அரசு தரப்பு தவறிவிட்டது. சாதி ஆணவத்தால் படுகொலை செய்யப்பட்ட இளைஞர் உடுமலை சங்கர் படுகொலை வழக்கில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டில் விடுதலையும் தீர்ப்பாக வந்துள்ளது. அரசு தரப்பில் உரிய ஆவணங்களை ஆதாரங்களை முன்வைத்து இருக்க வேண்டிய காவல்துறை தனது கடமையிலிருந்து தவறு இருப்பது வெளிப்படையாக தெரிகிறது என கௌசல்யா சங்கர் கூறினார்.
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் உடுமலை சங்கர் ஆவண கொலை வழக்கை தமிழ்நாடு அரசு விரைந்து செயலாற்று கோரி செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது செய்தியாளர்களிடம் கௌசல்யா சங்கர் பேசுகையில், உடுமலைப்பேட்டையில் சாலையில் ஆட்கள் அதிகமாக உள்ள பகுதியில் என்னுடைய பெற்றோர்கள் கூலிப்படை வைத்து நடைபெற்ற ஆவண படுகொலையில் சங்கர் இறந்து விட்டார். சங்கரின் நீதிக்காக ஆணவ படுகொலைக்கு தனி சட்டம் வேண்டும் என்று தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்கிறேன்.

சம்பவம் நடைபெற்ற பொழுது தந்தை சின்னச்சாமி அவர்கள் நிலைக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜராகினார். குற்றவாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதோடு சமுதாயத்தில் இதுபோன்ற சம்பவம் இனிமேல் நடைபெறாமல் இருப்பதற்காக அரசாங்கம் உரிய நடைமுறைகளை பின்பற்றி சாதிய கொடுமைகள் நடைபெறாமல் இருப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் .
திருப்பூர் நீதிமன்றத்தில் அன்னலட்சுமி பாண்டி துறையும் 2017 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டார்கள். அதற்குப் பிறகு 2020இல் உயர் நீதிமன்றத்தில் a1 குற்றவாளி சின்னச்சாமி விடுதலை செய்யப்பட்டார். அந்த சம்பவம் நடந்த இடத்தில் இருந்தவர்களுக்கு மட்டும் தண்டனை வழங்கப்பட்டு இருக்கிறது ஆனால் அந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு இன்று வரை எந்த தண்டனையும் வழங்கப்படாமல் இருந்து வருகிறது.
உடுமலைப்பேட்டை சங்கர் சாதி ஆவண படுகொலை வழக்கில் சாட்சியங்களை நிரூபிப்பதில் அரசு தரப்பு தவறிவிட்டது. சாதி ஆணவத்தால் படுகொலை செய்யப்பட்ட இளைஞர் உடுமலை சங்கர் படுகொலை வழக்கில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டில் விடுதலையும் தீர்ப்பாக வந்துள்ளது.
அரசு தரப்பில் உரிய ஆவணங்களை ஆதாரங்களை முன்வைத்து இருக்க வேண்டிய காவல்துறை தனது கடமையிலிருந்து தவறு இருப்பது வெளிப்படையாக தெரிகிறது. மேல்முறையீடு செய்வதாக செய்திகள் வெளிவந்த பொழுதும் காவல்துறை அப்பொழுதாவது தன் கடமையை செய்யுமா சிசிடிவி காட்சிகள் சங்கர் கொலை செய்யப்பட்ட பொழுது அவரை கொலை செய்தவர்கள் யார் என்று சட்டத்தின் முன் ஒரே சாட்சியைத்துடன் நிரூபிப்பது கௌசல்யாவிற்கு உரிய நீதி கிடைக்கிட வழிவகை செய்து விடுமா
நீதி கிடைக்க வேண்டிய இடத்தில் துணை நிற்க வேண்டிய இடத்தில் அவர்கள் துணை நிற்கவில்லை என்பதுதான் என்னுடைய குற்றச்சாட்டு. 2020 செப்டம்பர் 7ஆம் தேதி மேல்முறையீடு காக ஒப்புதல் அளித்தார்கள் அன்றையிலிருந்து இன்று வரை எடுத்துக் கொள்ளவில்லை. அரசினுடைய மெத்தனப் போக்கின் காரணமாக தான் சாதி ஓட்டுகள் போய்விடும் என்பதற்காகவே எங்களுடைய வழக்கை வழக்காகவே எடுத்துக் கொள்ளவில்லை என்று வேதனை தெரிவித்தார்.
மற்ற வழக்குகளை ஆறு மாதத்தில் முடித்து வைத்தார்கள் ஆனால் எங்களுடைய வழக்கு ஐந்தரை ஆண்டு காலம் ஆகியும் கூட ஷங்கர் என்னுடைய ஆணவ படுகொலை வழக்கை இன்றுவரை முடித்து வைக்கவில்லை என்று வேதனை தெரிவித்தார். என் கூட இருக்க வேண்டிய அரசு ஒரு கடந்து போற விஷயமாக சென்று இருக்கிறது. செப்டம்பரில் வர வேண்டிய வழக்கு நவம்பரில் வந்தது.
அரசு சமூக நீதி அரசு எப்பொழுதும் உறுதுணையாக இருப்போம் என்று சொன்ன அரசு அப்படி இல்லாமல் உங்களுடைய அரசினால் மீண்டும் ஒரு ஆண்டு காலம் வழக்காவது தள்ளி சென்று கொண்டிருக்கிறது. ஆணவ படுகொலை தொடர்பாக வழக்கை நடத்துவதற்கு அரசுக்கு எந்த ஒரு நாட்டம் இல்லை என்பது தெள்ளத் தெளிவாக தெரிய வருகிறது. அரசு தரப்பில் இன்று வரை எந்த ஒரு விரைவு மனுவும் செலுத்தவில்லை.
அரசு வழக்கறிஞர்களை வைத்து நான் விரைவு மனுக்களை போட்டுக் கொண்டிருக்கிறேன் ஆனால் அதையுமே அவர்கள் தடுத்து வருகின்றார்கள்.
ஆணவ படுகொலைக்கு எதிராக ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தி வருகிறோம் நடத்திக் கொண்டிருக்கிறோம். முதல்வர் ஸ்டாலினுக்கு இது தொடர்பாக கடிதமும் அனுப்பி இருக்கிறோம் ஆனால் அவரை சந்திப்பதற்கு பல வாய்ப்புகள் கேட்டும் சந்திப்பதற்கு வாய்ப்பு கொடுக்காமல் எங்களை காலம் தாழ்த்தி வருகிறார்கள்.
ஆனால் இன்று வரை ஆணவ படுகொலைக்கு எதிராக தனி சட்டம் வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறோம். ஆணவ படுகொலையை தடுப்பதற்காக தனி குழு அமைத்தேன் என்று சொன்னார்கள் ஆனால் இன்றுவரை அந்த குழு என்ன செய்து கொண்டிருக்கிறது. இனியாவது விரைந்து தமிழக அரசு இந்த வழக்கை எடுத்து நடக்க வேண்டும்.
கண்டிப்பாக இந்த வழக்கை இழுத்தடிக்க வேண்டும் அப்படிங்கறது உங்களுடைய நோக்கமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் மிகப்பெரிய ஆணவ படுகொலை வழக்கு என்று பேசப்பட்ட முதல் வழக்கு என்றால் எங்களுடைய வழக்கு தான். எங்களுடைய வழக்குக்கு பின்பு தான் ஆணவ படுகொலை என்று பேசுபொருளாக மாறியது . அரசு இப்படி மெத்தன போக்காக இருப்பதற்கு முக்கிய காரணம் சாதியை ஓட்டுகளை மானத்தில் வைத்துக் கொண்டுதான் ஆனால் தமிழ் சமூகத்தில் இதுபோன்று இல்லை போலி பிம்பத்தை உருவாக்குகிறார்கள் .
சமூக நீதி அரசு என்றால் சாதி ஒழிப்பு என்பது முதற்கட்டமாக இருக்க வேண்டும். சாதி ஒழிப்பு திருமணத்திற்கு அரசு உறுதுணையாக இருக்க வேண்டும் வெறும் சமூக நிதி அரசு என்று சொல்லிக் கொள்வதில் எந்த பலனும் இல்லை. ஆணவ படுகொலைக்கு எப்படி குரல் கொடுப்பார்கள் ஏனென்றால் அவர்களுக்கு சாதிக்கு ஆதரவாக தான் இருந்து வருகின்றனர்.
விசிக மார்க்சிய கட்சிகள் தவிர தொடர்ந்து களத்தில் நின்று வருகிறார்கள் ஆனால் மற்ற கட்சிகள் நிற்பது கிடையாது. தொடர்ந்து இந்த வழக்கை கொண்டு போய் காலம் கழித்து விடலாம் என்பது அவர்களுடைய நோக்கமாக இருந்து வருகிறது .இனியாவது இந்த வழக்கை அரசு கைவிடக் கூடாது " இவ்வாறு கௌசல்யா கூறினார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications