திருமணம் என்றாலே பயம்.. யுக மாற்றத்திற்கு தயாராக வேண்டும்! கவிஞர் வைரமுத்துவின் ‘எக்ஸ்’ போஸ்ட்!
சென்னை: ஒரு யுக மாற்றத்திற்கு தமிழர்கள் தங்கள் மனதைத் தயாரித்துக் கொள்ள வேண்டும் என்றும், திருமணத்தை கண்டு அஞ்சும் குரலை நான் பரவலாகக் கேட்கிறேன் என கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
திருமணம் என்பது ஒரு அற்புத உறவு.. வெளிநாடுகளில் திருமண உறவு என்பது ஏதோ வந்தோம் பேசினோம் திருமணம் செய்தோம் பிரிந்தோம் என்று தான் இருக்கிறது.. ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை திருமணம் என்பது ஒரு சமூக பொறுப்போடு கலந்த அற்புத உணர்வாக பார்க்கப்படுகிறது.

தெய்வீகம் கலந்தும் அது இன்று வரை கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த சில வருடங்களாக இளம் தம்பதியினர் திருமண வாழ்க்கையில் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றனர்.
இளைஞர்கள் தங்களுக்குள் பேசி புரிந்து கொள்ள நேரமில்லாமல் தங்கள் வேலை என்று ஓடிக் கொண்டிருக்கும் தம்பதிகள் திருமணமான சில மாதங்களிலேயே விவாகரத்து கேட்டு நீதிமன்றங்களுக்கு செல்வதை பார்க்க முடிகிறது. மேலும் உலகம் அறிந்த நட்சத்திர தம்பதிகள் சில ஆண்டுகளிலேயே தங்கள் திருமண வாழ்வை முறித்துக் கொண்டு தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர். அப்படி ஏராளமானோர் தமிழகத்தில் கூட இருக்கிறார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட ஒரு நட்சத்திர தம்பதியின் பிரிவு சமூக வலைதளங்களில் பேசுபொருளானது.இந்த நிலையில் தான் திருமணம் என்பது இளம் தலைமுறையினரை அச்சப்படுத்தும் செயலாக இருக்கிறது, ஒரு யுக மாற்றத்திற்கு தமிழர்கள் தங்கள் மனதை தயாரித்துக் கொள்ள வேண்டும் என கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
அந்த பதிவில்,”
என் மதிப்புக்குரிய
அமைச்சர் ஒருவரின்
மனைவியிடம் கேட்டேன்
'பெண் பிள்ளைகளுக்கு
எப்பொழுதம்மா திருமணம்?’
அவர் முகத்தில் - ஒரு
வாடிய புன்னைகை
ஓடி உடைந்தது
'சமகாலத்தில்
திருமணமான சகபெண்களின்
வாழ்க்கையைப்
பார்த்துப் பார்த்துத்
திருமணம் என்றதும்
அஞ்சுகிறார்கள் அண்ணா’
என்றார்
இந்தக் குரலை
நான் பரவலாகக் கேட்கிறேன்
நிகழ்காலத் தலைமுறையின்
விழுமியச் சிக்கல் இது
ஒன்று
திருமண பந்தத்தின்
ஆதி நிபந்தனைகள்
உடைபட வேண்டும்
அல்லது
திருமணம் என்ற நிறுவனமே
உடைபடுவதை
ஒப்புக்கொள்ள வேண்டும்
ஒரு யுக மாற்றத்திற்குத்
தமிழர்கள் அல்ல அல்ல
மனிதர்கள் தங்கள் மனத்தைத்
தயாரித்துக்கொள்ள வேண்டும்
சமூகம் உடைந்துடைந்து
தனக்கு வசதியான
வடிவம் பெறும் -
கண்டங்களைப்போல” என கூறியுள்ளார்.
அதாவது சமூகப் பிரச்சினை, பொருளாதாரப் பிரச்சினை, தனிமனித சுதந்திரம் உள்ளிட்ட பிரச்சனைகள் காரணமாக இளம் வயது தலைமுறையினர் திருமண பந்தத்தை தவிர்த்து வருகிறார்கள். எனவே திருமணம் தாண்டிய உறவுக்கு அவர்கள் தயாராக இருக்க வேண்டும். அல்லது திருமணம் என்ற எண்ணத்தையே விட்டுவிட வேண்டும் என வைரமுத்து பதிவிட்டு வருகிறார்.
என் மதிப்புக்குரிய
— வைரமுத்து (@Vairamuthu) May 21, 2024
அமைச்சர் ஒருவரின்
மனைவியிடம் கேட்டேன்
‘பெண் பிள்ளைகளுக்கு
எப்பொழுதம்மா திருமணம்?’
அவர் முகத்தில் - ஒரு
வாடிய புன்னைகை
ஓடி உடைந்தது
‘சமகாலத்தில்
திருமணமான சகபெண்களின்
வாழ்க்கையைப்
பார்த்துப் பார்த்துத்
திருமணம் என்றதும்
அஞ்சுகிறார்கள் அண்ணா’
என்றார்
இந்தக்…
அதே நேரத்தில் இந்தியா போன்ற சமூக கலாச்சாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாடுகளில் இது சாத்தியமற்றது. குறிப்பாக தமிழகத்தில் திருமணம் என்பது அனைத்து சமூகங்களும் ஏற்றுக்கொண்டு அதனை உறுதியோடு கடைபிடித்து வரும் வழிமுறை. சிறுசிறு காரணங்களுக்காக அவற்றை விட்டுவிடக்கூடாது. விட்டுக்கொடுத்து வாழ வேண்டும் அல்லது பிரிந்துவிடலாம் அதற்காக திருமணம் என்ற உறவையே வேண்டாம் என்பது நல்லதல்ல என பலரும் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications