விஜய் தான் பிரதமர் வேட்பாளர் என்றாரே.. தவெக எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ்க்கு புதிய பொறுப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் சட்ட விதிகள் ஆய்வுக்குழு உறுப்பினராக கோவை கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இன்றைய முதல்வர் விஜய் தான் நாளைய பிரதமர் வேட்பாளர் என அண்மையில் கனிமொழி சந்தோஷ் கூறியிருந்தார்.

இது குறித்து 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ்நாடு சட்டப்பேரவை சட்ட விதிகள் ஆய்வுக்குழு உறுப்பினராக என்னைத் தேர்வு செய்து, கூடுதல் பொறுப்பு வழங்கிய முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கும், சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி.பிரபாகருக்கும் எனது மரியாதையுடன் கூடிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

tvk kanimozhi cm vijay

மக்கள் நலனையும், ஜனநாயகத்தின் மாண்பையும் முன்னிறுத்தி செயல்படுவதற்கான மற்றுமொரு வாய்ப்பாக இந்தப் பொறுப்பை கருதுகிறேன். சட்ட விதிகள் தொடர்பான இந்த முக்கியமான பொறுப்பை முழு அர்ப்பணிப்புடனும் பொறுப்புணர்வுடனும் நிறைவேற்றுவேன்." எனத் தெரிவித்துள்ளார்.

சட்ட விதிகள் ஆய்வுக்குழு என்றால் என்ன?

சட்டமன்ற நடைமுறைகள், கூட்டத்தொடர் நடத்தப்படும் விதிகள் மற்றும் அவையின் செயல்பாடுகளை நெறிப்படுத்துவது தொடர்பான விவகாரங்களை ஆராய்ந்து, தேவையான திருத்தங்கள் அல்லது பரிந்துரைகளை சபாநாயகருக்கு வழங்கும் முக்கியக் குழுவாக இது செயல்படுகிறது.

சட்டப்பேரவையின் தினசரி நடைமுறைகள் மற்றும் அலுவல் விதிகளில் உள்ள குறைபாடுகளை ஆராய்தல், காலத்திற்கேற்ப சட்டப்பேரவை விதிகளில் புதிய விதிகளைச் சேர்த்தல் அல்லது திருத்தங்களைப் பரிந்துரைத்தல், சட்டப்பேரவை நடவடிக்கைகள் சீராகவும் வெளிப்படைத்தன்மையுடனும் நடைபெறுவதை உறுதி செய்தல் போன்றவை இக்குழுவின் பணிகள்.

யார் இந்த கனிமொழி சந்தோஷ்?

கோவை நரசிம்ம நாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் கனிமொழி சந்தோஷ். இளங்கலை சட்டப்படிப்பு முடித்தவர். ஜோதிடத்தில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். டைல்ஸ் மற்றும் கிரானைட் தொழில், பிசியோதெரபிஸ்ட், வாஸ்து நிபுணர் எனப் பன்முக அடையாளங்களைக் கொண்ட இவருக்கு இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சோஷியல் மீடியாவில் லட்சக்கணக்கான ஃபாலோயர்ஸ் உள்ளனர்.

ஜோதிடம் மூலம் புற்றுநோயைக் குணப்படுத்தலாம் என கனிமொழி சந்தோஷ் பேசிய பழைய வீடியோ ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கவுண்டம்பாளையம் தொகுதியில் முதல் முறையாக போட்டியிட்ட கனிமொழி சந்தோஷ் 42 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

இன்றைய முதல்வர் விஜய் தான் நாளைய பிரதமர் வேட்பாளர், ராகுல் காந்தியே விஜய்யை பிரதமர் நாற்காலியில் அமர வைப்பார் என்று கனிமொழி சந்தோஷ் அண்மையில் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+