எஸ்பிஐ அதிகாரி கன்னத்தில் பளார்.. முக அழகிரியின் மகள் கயல்விழி அதிரடி கைது! 2 நிமிடத்தில் ட்விஸ்ட்!
சென்னை: சென்னை அடையாறு எஸ்பிஐ வங்கி மேலாளரை தாக்கிய வழக்கு தொடர்பாக திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழியிடம் 2 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்திய சாஸ்திரி நகர் போலீசார் அவரை கைது செய்தனர். இதற்கிடையே அவரை காவல்நிலைய பிணையில் உடனடியாக விடுவித்துள்ளனர்.
சென்னை அடையாறில் திமுக முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதியின் பேத்தியும், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகளுமான கயல்விழிக்குச் சொந்தமான கட்டிடத்தில், காந்தி நகர் எஸ்பிஐ என்ஆர்ஐ வங்கிக் கிளை செயல்பட்டு வருகிறது.

அந்தக் கட்டிடத்தில் இருந்த லிஃப்ட் நீண்ட நாட்களாக பழுதடைந்த நிலையில் இருந்ததாகவும், அதை சீரமைக்கும்படி கட்டிட உரிமையாளரான கயல்விழியை வங்கி நிர்வாகம் பலமுறை தொடர்புகொண்டு பேசியதாகக் கூறப்படுகிறது.
கயல்விழி அழகிரி
ஆனால், பலமுறை தகவல் தெரிவித்தும் கயல்விழி தரப்பு லிப்டை சரிசெய்துதரவில்லை என சொல்லப்படுகிறது இந்த நிலையில், வங்கிக் கிளை மேலாளர் ஹர்ஷீன் சிங் நேரடியாக கட்டிட உரிமையாளரான கயல்விழியிடம் லிஃப்ட் பழுது தொடர்பாக பேசியதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து, கயல்விழி வங்கிக்கு நேரில் சென்று கிளை மேலாளருடன் பேசியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலியில், ஆத்திரமடைந்த கயல்விழி, வங்கி மேலாளரை கன்னத்தில் அறைந்துள்ளார்.
சிசிடிவி காட்சி
இதற்கிடையில், சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதனையடுத்து எஸ்பிஐ தலைமை மேலாளர் நமச்சிவாயம், கடந்த ஜூலை 21-ஆம் தேதி சென்னை சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் வங்கி அதிகாரி மீது தாக்குதல் நடத்திய கயல்விழி மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
வழக்குப்பதிவு
இந்தப் புகாரின் அடிப்படையில், சாஸ்திரி நகர் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இந்நிலையில், வழக்குதொடர்பாக கயல்விழி விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பினர். அதன்படி, அவர் இன்று மாலை சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் நேரில் ஆஜரானார்.
அதிரடி கைது
அங்கு, புகார் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் உள்ளிடவற்றை காட்டி போலீசார் அவரிடம் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தீவிர விசாரணை நடத்தினர். விசாரணை முடிவில், வழக்கு தொடர்பாக கயல்விழியை போலீசார் கைது செய்தனர். எனினும், கைது செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே அவரை காவல் நிலைய ஜாமீனில் விடுவித்தனர். இதனால் அவர் காவல் நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.


Click it and Unblock the Notifications
