Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

5000+தேமுதிக+ஓபிஎஸ்.. அடிச்சு ஆடும் ஸ்டாலின்! கப்சிப் அதிமுக.. திமுக மட்டும் ஜெயிச்சா.. விளாசிய மாஜி

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக கூட்டணிக்கு டிடிவி தினகரன் அன்புமணி வந்தபோது ஒரு அலை உருவானது எனவும், ஆனால் அதற்கு அப்புறம் அதிமுகவில் சத்தமே இல்லை என விமர்சித்துள்ளார் அதிமுக முன்னாள் எம்பியான கே.சி.பழனிச்சாமி. திமுக காங்கிரசை டீலில் விட்டு விட்டு, திடீரென மகளிர் உரிமைத்தொகை 5000 கொடுத்தது, அதற்குள்ளாக தேமுதிக கூட்டணிக்குள் வந்தது, தற்போது ஓபிஎஸ் ஸ்டாலின் வீட்டுக்கே சென்றது என அடுத்தடுத்து ஸ்டாலின் பரபரப்புகளை பற்ற வைத்து வரும் நிலையில் இந்த, தேர்தலில் திமுக வென்றால் அதற்கு ஒரே காரணம் எடப்பாடி பழனிச்சாமி மட்டும் தான் எனவும் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்," சும்மாவே சட்டமன்ற தேர்தல்ல பெருசா வெற்றி வித்தியாசம் இருக்காது, இந்த லட்சணத்தில் இந்த தடவை 4 முனை போட்டி, கூடவே சுயேட்சைகள் வேற சில நூறு, ஆயிரம் ஓட்டு வரைக்கும் பிரிச்சா, ஜெயிக்கிறது எல்லாம் ஒரு சில நூறு, ஆயிரம் ஓட்டுகளில் நடக்க போகுது.

இந்த தேர்தலில் பெரிய வேவ் எதுவும் இப்போ வரைக்கும் வெளிப்படையா தெரியலை, ஸ்டாலின் வரவே கூடாதுன்னும் இல்லை, எடப்பாடியோ விஜய்யோ வந்தே ஆகணும்ன்னு இல்லை. அதிமுக கூட TTV, அன்புமணி வரும்போது ஒரு perception கிரியேட் ஆச்சு.

KC Palanisamy Tamil Nadu Assembly Election 2026 AIADMK DMK

கே.சி.பழனிச்சாமி விமர்சனம்

அந்த சமயத்துல காங்கிரஸ் வேற திமுகவுக்கு குடைச்சல் குடுத்துட்டு இருந்திச்சு, அந்த சமயத்துல எடப்பாடி அடிச்சு ஆடி இருக்கணும், கூட்டணி அறிவிப்புகள் தொடர்ந்து வர்ற மாதிரி செஞ்சு இருக்கணும், TTV வந்து சேர்ந்து ஒரு வாரம் ஓடிச்சு, அதுக்கு அப்பறம் அதிமுக சத்தமே இல்லை. ஆனா திமுக, காங்கிரஸ லெஃப்ட்ல டீல் பண்ணிட்டே, திடீர்னு 5000ன்னு ஒன்ன இறக்கி விட்டாங்க, அதை எல்லோரும் பேசி முடிக்கறதுக்குள்ள தேமுதிகவ கூட்டணிக்குள்ள கொண்டு வந்தாங்க, அந்த ஷாக்ல எல்லோரும் இருக்கும்போதே OPS வீட்டுக்கே வர வச்சு மீட்டிங் போட்டு இருக்காங்க.

தமிழக அரசியல்

திமுக இந்த 4 முனை போட்டி எப்படி இருக்குன்னு தெளிவா யோசிக்குது, என்னதான் perception திமுகவா இருந்தாலும், எந்த ரிஸ்க்கும் எடுக்க கூடாது, 500 ஓட்டு தொகுதிக்கு விழுந்தா கூட அது முக்கியம்னு இறங்கி வேலை செய்யறாங்க. ஆனா, இங்க எடப்பாடி வழக்கம் போல எல்லாம் தட்டி கழிச்சிட்டு போயிட்டே இருக்கார், OPS என்னை பார்த்தா பாவமா இல்லையா, எந்த நிபந்தனையும் இல்லாம வர்றேன்னு சொல்லியும் செல்லாது செல்லாதுன்னு அடிச்சு துரத்தி விட்டாங்க, இப்போ வந்து OPS திமுக போனது துரோகம்ன்னு குதிச்சிட்டு இருக்காங்க, நீங்களும் சேர்த்துக்க மாட்டீங்க, அந்த மனுஷன் 5 வருஷமா கெஞ்சிட்டு இருந்தார், இப்போ போச்சா.

எடப்பாடி பழனிசாமி

அண்ணாமலை இருக்க கூடாதுன்னு பிரச்சனை பண்ணார், செங்கோட்டையனை இதே மாதிரி தேவை இல்லைன்னு துரத்தி விட்டாங்க. தேமுதிக வெளிய போனதுக்கும் அண்ணன் எடப்பாடி போட்ட பிளான்தான் காரணம், அவங்களுக்கு ராஜ்ய சபான்னு சொல்லி அல்வா குடுத்தார், இப்போ அவங்க திருப்பி கொடுக்கறாங்க. இவங்களுக்கு எல்லாம் என்ன ஓட்டு இருக்குன்னு அதிமுக காரங்க வருவாங்க, நான் மறுபடியும் சொல்றேன் இது 4 முனை போட்டி, இதுல கூட ஒருத்தன் இருந்தா 500 ஓட்டு சேர்ந்து வருதுன்னா, அவனை கூட வச்சுக்கணும். இது எல்லாம் கணக்கு போட்டுதான், திமுக arithmeticகா பிளான் பண்ணி, சீட்டு பிரச்சனை வரும்ன்னு தெரிஞ்சும், வர்ற கட்சி, ஆட்களை எல்லாம் புடிச்சு போட்டு பக்கா பிளான் பண்றாங்க.

2026 சட்டமன்ற தேர்தல்

ஆனா அதிமுகவுக்கு ஒருத்தனும் வேண்டாம் ஆட்சியை பிடிக்கிறது முக்கியமா ? இல்லை கட்சி தலைமையில் நமக்கு போட்டி இல்லாம இருக்கிறது முக்கியமான்னு எடப்பாடி அவர்கள் யோசிக்க வேண்டியது ரொம்ப முக்கியம். இந்த தடவை ஆட்சிக்கு வரலைன்னா, OPSக்கு நடந்தது எடப்பாடி அவர்களுக்கு கூட நடக்கும், வெற்றி முக்கியம் பிகிலு. இருக்கிற கொஞ்ச நாள்ல எப்படி இந்த perception மாத்த போறாங்கன்னு தெரியல. 2026ல மறுபடியும் திமுக வந்தா அதுக்கு ஒரே காரணம்.. எடப்பாடி பழனிசாமி மட்டும்தான்" என பதிவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+