கேசி பழனிசாமிக்கு செம அதிர்ச்சி.. ‘செக்’ வைத்த நடுவர் மன்றம்.. அதிமுக பெயரில் இணையதளம் நடத்த தடை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கேசி பழனிசாமி அதிமுக பெயரை பயன்படுத்தக் கூடாது. மேலும், ரூ.50 ஆயிரத்தை அதிமுக கட்சிக்கு செலுத்த வேண்டும் என்று இந்திய தேசிய இணைய பரிவர்த்தனை நடுவர் மன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுகவின் செய்தித் தொடர்பாளராக இருந்தவர் முன்னாள் எம்.பி கேசி பழனிசாமி. எம்.ஜி. ஆர் கட்சி ஆரம்பித்ததில் இருந்து உடன் இருந்தவர் கேசி பழனிசாமி. எம்.ஜி.ஆர் ஆட்சியின்போது இளம் வயது எம்.எல்.ஏவாகவும் இருந்தவர். திருச்செங்கோடு தொகுதி எம்.பியாகவும் இருந்தார். இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய பாஜக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு அளிப்போம் எனத் தெரிவித்திருந்தார் கேசி பழனிசாமி.

KC Palanisamy is banned from running a website in the name of AIADMK

இதையடுத்து அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளிலிருந்து 2018-இல் மார்ச் 16-ஆம் தேதி நீக்கி, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து அதிமுகவின் இரட்டைத் தலைமை பதவிக்கு எதிராக கே.சி.பழனிச்சாமி வழக்கு தொடர்ந்தார். இவர் இரட்டை இலை சின்னம் தொடர்பாகவும் வழக்கு தொடர்ந்தார்.

இந்த நிலையில் கட்சியிலிருந்து அவர் நீக்கப்பட்ட போதிலும் இணையதளத்திலும் தான் பயன்படுத்தும் லெட்டர் பேடிலும் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. இந்த புகாரை தொடர்ந்து கேசி பழனிச்சாமி கடந்த 2020ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இதையடுத்து, மீண்டும் அவர் ஈபிஎஸ், ஓபிஎஸ்ஸை சந்தித்தார். ஆனால், அதன்பிறகும் கட்சியில் சேர்க்கப்படவில்லை. இதையடுத்து, எடப்பாடி பழனிசாமியை மிகக் கடுமையாக எதிர்த்து வருகிறார்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், தன்னை யாரும் கட்சியில் இருந்து நீக்க முடியாது எனக் கோரி, அதிமுக நிர்வாகி போலவே தற்போதும் மிகத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார் கேசி பழனிசாமி. தமிழகம் முழுவதும் பயணித்து பல இடங்களில் ஆலோசனைக் கூட்டங்களையும் நடத்தி வருகிறார் கேசிபி. மேலும், அதிமுக பெயரில் இணையதளம் நடத்தி வருவதோடு, தேர்தல் ஆணையத்திலும் கட்சிக்கு உரிமை கோரியுள்ளார்.

இதற்கிடையே இந்திய தேசிய இணைய பரிவர்த்தனை (Internet Exchange of India -NIXI) நடுவரிடம் அதிமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட புகார் மனுவில், அதிமுகவின் முன்னாள் உறுப்பினரான கே.சி.பழனிசாமி, 2021 முதல் தனது இணையதளத்தில் கட்சி பெயரையும், சின்னத்தையும் தவறாக பயன்படுத்துவதாக கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, கேசி பழனிசாமி கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

அதன்பிறகும் கேசி பழனிசாமி, கட்சியின் பெயரை தொடர்ந்து பயன்படுத்தி வந்ததால், இந்திய தேசிய இணைய பரிவர்த்தனை நடுவரிடம் அதிமுக தரப்பில் முறையிடப்பட்டது. இதை விசாரித்த நடுவர் மன்றம், கடந்த நவம்பர் 29-ஆம் தேதி அளித்த தீர்ப்பில், கேசி பழனிசாமி மற்றும் அவரது முகவர்கள், வேலையாட்கள், டீலர்கள், விநியோகஸ்தர்கள் போன்றோர் www.aiadmk.org இணையதள பெயரை பயன்படுத்தக் கூடாது. மேலும், கேசி பழனிசாமி, ரூ.50 ஆயிரத்தை அதிமுக கட்சிக்கு செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+