கேதர் ஜாதவ் ரேட் ரூ.7.8 கோடி.. வைப்பதோ சூப்பர் டொக்.. தெறிக்கும் சிஎஸ்கே மீம்ஸ்
சென்னை: சிஎஸ்கே அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சிடம் கோட்டை விட்டாலும் விட்டது, கேதர் ஜாதவை கழுவி ஊற்றி வருகிறார்கள் ரசிகர்கள்.
அபுதாபியில் நேற்று சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 167 ரன்களை எடுத்தது. 2வது பேட் செய்த சென்னை வாட்சனின் அரை சதத்தால் சூப்பராக சேஸிங்கை ஆரம்பித்தது.
சரியாக முதல் 10 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து, 90 ரன்களை எடுத்திருந்தது சிஎஸ்கே. பலரும் அப்போதே, சென்னை வின் பண்ணிவிடும் என நினைத்து டிவியை ஆப் செய்து படுத்துவிட்டனர்.

தோனி பேட்டிங்
ஆனால், இதன்பிறகுதான், சென்னை அணியும் அபுதாபி மைதானத்தில் பாய் நீட்டி படுத்துவிட்டது. வாட்சன், ராய்டு என ஒவ்வொருத்தராக நடையை கட்டினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தோனி, சக்கரவர்த்தி பந்தில் கிளீன் போல்ட் ஆனார். ஆரம்பத்தில் பல பந்துகளை சாவகாசமாக சாப்பிட்டார் தோனி. வெற்றியை நோக்கி வழிநடத்தத்தான் அடித்தளம் அமைக்கிறார் என ரசிகர்கள் நினைத்த நேரத்தில் 11 ரன்களில் ஏமாற்றினார். இதற்கு எடுத்த பந்துகள் 12. ஒரு பவுண்டரி அடித்ததால்தான் ஓரளவுக்கு பந்துக்கு ஈடாக ரன்கள் வந்தது. கிட்டத்தட்ட வைடு போல வீசப்பட்ட பந்தில் அந்த பவுண்டரி வந்தது வேறு விஷயம்.

கேதர் சூப்பரா ஆடுனாரு டெஸ்ட் மேட்ச்
தோனி அவுட்டானதும், அப்பாடா.. 20 ஓவர் வரை போட்டி நீளாது. சீக்கிரம் சிஎஸ்கே வென்றுவிடும் என்று பெருமூச்சு விட்டனர். ஆனால் தோனியின் மறு உருவமாக கேதர் ஜாதவ் கிரீசுக்குள் வந்துவிட்டார். 11 பந்துகளில் 17 ரன் அடித்து அவுட்டானார், குட்டிப் பையன் சாம் கரன். 8 பந்துகளில் 21 ரன்கள் விளாசிவிட்டு, பந்தை சந்திக்க அவகாசம் தந்தால் வென்று காட்டுவேன் என சீறினார் ஜடேஜா. ஆனால் விடுவாரா கேதர் ஜாதவ். ஜடேஜாவுக்கும் அடிக்க வாய்ப்பு தராமல், தானும் டெஸ்ட் மேட்ச் ஆடினார்.

பேட்டை மாற்றி டிவிஸ்ட்
12 பந்துகளில் 7 ரன்கள் எடுத்தார் கேதர். ஒரு பவுண்டரி வேறு இதில் அடித்தார். அப்படியானால் எத்தனை பந்துகள் டாட் ஆனது என்பதை நீங்களே கணக்குப் போட்டு பாருங்கள். பவுண்டரி அடித்ததும் பேட்டை மாற்றினார் கேதர். இதைப் பார்த்ததும், அடேங்கப்பா இனி சிக்சர்தானோ என்று ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் அவர் தெரியாத்தனமா பவுண்டரி அடித்துவிட்டோமே, ராசியில்லாத பேட் என நினைத்தாரோ என்னவோ, அதன்பிறகு தனக்கு தோதாக டெஸ்ட் போட்டி ஆடும் பேட்டை கையில் வைத்து, போட்டியை கொல்கத்தா அணி கையில் தாரை வார்த்தார்.

கேதர் ஜாதவ் விலை
நடப்பு ஐபிஎல் தொடர் முழுக்க இப்படித்தான் பந்துகளை சாப்பிட்டு கொட்டாவி விடுகிறார் ஜாதவ். எனவே நெட்டிசன்கள் கழுவி ஊற்ற ஆரம்பித்துள்ளனர். இவரை எதற்கு டி20 போட்டியில் ரூ.7.8 கோடி போட்டு எடுத்தீர்கள் என சிஎஸ்கேவை கேட்க ஆரம்பித்துள்ளனர். சில ட்ரோல்களை நீங்களே பாருங்க.

அட கொட்டாவி வருதுப்பா
39 ரன்தான் எடுக்கனும். ஆட்டம் எப்படி பரபரப்பாக இருக்கும். ஆனால் கிரீசில் நிற்பது கேதர் ஜாதவ். அப்போ பீல்டிங் செய்யும் அணிக்கு இப்படித்தான் கொட்டாவி வரும் என்று போட்டோவோடு போட்டுக் காட்டிவிட்டார் இந்த நெட்டிசன்.

சிஎஸ்கேவை பினிஷ் செய்வார்
அப்போ இனி ஜாதவ்.... ஐயோ அவர் CSKவ finish பன்னுவாரே தவிர, CSK வுக்காக பன்னமாட்டார் மாப்ள... என்று சத்யராஜ் வாய்சில் படித்தால் நமக்கே சிரிப்பு வருகிறது.

தோனி எஸ்கேப்
தோனி இப்போ இப்படித்தானே பீல் செய்வார், "நல்லவேளை இவனுங்க ஜாதவ் திட்ற ஆர்வத்துல நம்மள மறந்துட்டானுங்க". ஆமாம், வேகமாக போன மேட்சில் ரன் ரேட்டை குறைத்தது, நம்ம தலதானே. அவருக்கு விழ வேண்டிய விமர்சனங்களை கடைசியில் வந்து சொதப்பிய கேதர் ஜாதவ் வாங்கிக் கட்டிக் கொள்கிறார்.

தோனி மேலேயும் எழுதுங்கப்பா
ஜாதவ் கிட்ட கேட்டால், இப்படித்தான் தோனி பற்றி சொல்லியிருப்பார் என்கிறது இந்த கற்பனை: எல்லா கேஸையும் என் மேலயே எழுதாதீங்கடா.. எனக்கு முன்னால போனவனுக்கும் பிரிச்சி குடுங்க..
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications