Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உங்க ஸ்மார்ட் போன்கள் பாதுகாப்பாக இருக்கனுமா? இந்த 7 சீக்ரெட் எண்களை அவசியம் தெரிஞ்சு வச்சுக்கோங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகமாகிவிட்ட நிலையில், நமது ஸ்மார்ட் போன்கள் பாதுகாப்புடன் தான் உள்ளதா என்பதை செக் செய்துகொள்ள தேசிய குற்ற விசாரணை பணியகம் கொடுத்துள்ள 7 சீக்ரெட் எண்களை அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். அது என்னென்ன என்பதை இங்கே பார்கலாம்.

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு அத்தியாவசியமான ஒன்றாகவே மாறிவிட்டது என்று சொல்லலாம். அழைப்புகளுக்கு மட்டுமே செல்போன்களை பயன்படுத்தி வந்த காலம் தற்போது மலையேறிவிட்டது. பணம் அனுப்புவது முதல் வங்கி பரிவர்த்தனைகள் என பெரும்பலானவற்றை ஸ்மார்ட் போன்களிலேயே செய்து முடித்து விடுகிறோம். வெளியூர்களுக்கு போக வேண்டும் என்றால் பஸ், ரயில் டிக்கெட்டுக்காக அந்த மையங்களுக்கே செல்ல வேண்டியது இல்லை.

Keep these 7 secret numbers to keep your phone safe, National Crime Investigation Bureau Releases List

செல்போன் செயலி மூலமாக சில நிமிடங்களில் புக்கிங் செய்து கொள்ளலாம். இப்படி ஸ்மார்ட் போன்களில் உள்ள வசதிகளை அடுக்கி கொண்டே போகலாம். ஸ்மார்ட் போன்களில் அனைத்து சேவைகளையும் நாம் பெற முடிகிற சூழலில், தகவல் திருட்டு அபாயங்களும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. செல்போன்களை ஹேக் செய்ய முயற்சிப்பது என பல நவீன யுக்திகளிலும் மோசடி கும்பல்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே, நமது ஸ்மார்ட்போன்கள பாதுகாப்பு அம்சங்களுடன் உள்ளதா என்பதையும் உறுதி செய்தால் மட்டுமே இத்தகைய மோசடிகளில் இருந்து தப்ப முடியும். சரி இங்கே விஷயத்திற்கு வரலாம். ஸ்மார்ட் போன்களின் பாதுகாப்பு மற்றும் மிக முக்கியமான தகவல்கள் பத்திரமாக இருப்பதை உறுதி செய்யும் வகையில் சில ரகசிய கோட்(எண்கள்) களை தேசிய குற்ற விசாரணை பணியகம் (National Crime Investigation Bureau) தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.

இது தொடர்பாக என்.சி.ஐ. பி தனது எக்ஸ் தளத்தில், கூறுகையில், ஸ்மார்ட் போன் பயனர்கள் இந்த சீக்ரெட் கோட்களை தெரிந்து இருக்க வேண்டும். ஸ்மார்ட் போன்களுக்கான பாதுகாப்பு சீக்ரெட் கோட்களின் எண்ணிக்கை அதிகம். இருந்தாலும் சில முக்கிய கோட் எண்களை இங்கே பார்க்கலாம் எனத்தெரிவித்துள்ளது. இதன் விவரம் வருமாறு:-

1. *#21#: இந்த ரகசிய குறியீடு (Code) மூலம் உங்கள் கால், டேடா, அல்லது எண் ஆகியவை யாருக்கேனும் பார்வர்டு செய்யப்பட்டு இருக்கிறதா என்பதை அறிய முடியும்.
2.#0#: இந்த ரகசிய குறியீடு மூலம் உங்கள் செல்போனின் டிஸ்பிளே, ஸ்பீக்கர், கேமரா, சென்சார் ஆகியவை சரியாக வேலை செய்கிறதா என்பதை கண்டறியலாம்.

3. * #07#: உங்கள் போனின் SAR அளவு எந்த அளவு உள்ளது என்பதை இந்த குறியீடு மூலம் அறிந்து கொள்ளலாம். அதாவது, உங்கள் போன் வெளிப்படுத்தும் ரேடியேஷன் அளவு எவ்வளவு என்பதை கண்டறிய முடியும். செல்போனில் ரேடியேஷன் எனப்படும் கதிர்வீச்சு அளவு எப்போதும் 1.6 என்ற அளவுக்கு கீழேதான் இருக்க வேண்டும்.

4. *#06 #: உங்கள் போனின் ஐ.எம்.இ.ஐ எண்ணை இந்த குறியீடு மூலம் கண்டுபிடிக்க முடியும். ஐ.எம்.இ.ஐ.எண் என்பது உங்கள் செல்போன்கள் தொலைந்தால் மிகவும் அவசியமாக தேவைப்படும் ஒரு எண் ஆகும். ஒவ்வொரு போனும் பிரத்யேக ஐ.எம்.இ.ஐ எண்ணைக் கொண்டு இருக்கும்.

5- ## 4636##: இந்த குறியீடு மூலம் உங்கள் ஸ்மார்ட் போன் பேட்டரி , இணையதளம் மற்றும் வைஃபை ஆகியவற்றின் தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
6. ## 34971539## இந்த ரகசிய குறியீடு மூலமாக உங்கள் ஸ்மார்ட் போனின் கேமரா பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளலாம். உங்கள் செல்போன் கேமரா சரியான முறையில் இயங்குகிறதா? என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

7- 2767*3855# இந்த குறியீட்டை உங்கள் செல்போனில் டைப் செய்தால், போன் ரீசெட் ஆகும். போனை ரீசெட் செய்தால் செல்போன்களில் உள்ள அனைத்து தரவுகளும் போய்விடும். எனவே, இந்த எண்ணை டயல் செய்வதற்கு முன் உங்களுக்கு தேவையான தரவுகளை பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும்." என்று கூறப்பட்டுள்ளது.

என்.சி.ஐ.பி பகிர்ந்த இந்த எண்கள் பலவும் வேலை செய்யவில்லை என நெட்டிசன்கள் பலரும் குறை கூறியுள்ளனர். நெட்டிசன் ஒருவர் கூறுகையில், இதுபோன்ற பதிவுகளை என்.சி.ஐ.பி வெளியிடும் முன்பாக அவற்றை செக் செய்து இருக்க வேண்டும். நீங்கள் குறிப்பிட்ட எண்களில் சில எண்கள் மட்டுமே வேலை செய்கிறது. பெரும்பாலானவை பிழைகளாக மட்டுமே உள்ளன என்று சாடியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+