பெரிய தலை.. வித்தியாசமான தோற்றம்.. கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட ஆதிகால படிமங்கள்.. செம செய்தி!

கீழடியில் நடந்த அகழ்வாராச்சியில் பெரிய அளவில் இரண்டு வித்தியாசமான ஆதிகால குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: கீழடியில் நடந்த அகழ்வாராச்சியில் பெரிய அளவில் இரண்டு வித்தியாசமான ஆதிகால குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளது.

Recommended Video

    தமிழி எழுத்துடன் கண்டுபிடிக்கப்பட்ட கிமு 3-ம் நூற்றாண்டு கல்தூண்

    கீழடியில் தற்போது 6ம் கட்ட அகழ்வாராய்ச்சி மிகவும் தீவிரமாக நடந்து வருகிறது. முதல் ஐந்து கட்ட ஆராய்ச்சியில் அடுத்தடுத்து அதிரடி கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டது . மதுரை மாவட்டத்திற்கு தென்கிழக்கில் 15 கிலோ மீட்டர் தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் இருக்கிறது கீழடி கிராமம்.

    இங்கு செய்யப்பட ஆய்வுகள் மூலம் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பொருட்கள் பல கண்டுபிடிக்கப்பட்டது. இது முழுக்க முழுக்க தமிழர் நாகரீகம் ஆகும்.

    என்ன வியப்பு

    என்ன வியப்பு

    இந்த கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் எல்லாம் உலகையே வியப்பிற்கு உள்ளாக்கி உள்ளது. இந்த நிலையில் கீழடியில் தற்போது இரண்டு குழந்தைகளின் உடல்கள் கண்டு எடுக்கப்பட்டுள்ளது. 6வது கட்ட ஆய்வில் இந்த உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த உடல்கள் தற்போது மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு ஆய்வுக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது . இரண்டு உடல்களும் குழந்தைகளின் உடல் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    என்ன உடல்கள்

    என்ன உடல்கள்

    இதுவரை அந்த பகுதியில் செய்யப்பட்ட அகழ்வாராய்ச்சியில் மொத்தம் மூன்று உடல்கள் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடைசியாக கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு உடல்களில் ஒரு உடல் 95 செமீ நீளம் கொண்டது. இன்னொரு உடல் 75 செமீ நீளம் கொண்டது. இரண்டு உடல்களும் மிக மிக அருகில் புதைக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது தீவிரமான ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது.

    கவனிக்க வேண்டியது

    கவனிக்க வேண்டியது

    இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த குழந்தையின் தலைகள் இயல்பை விட பெரிதாக இருக்கிறது. உடலின் மற்ற பகுதிகள் சாதாரணமாக இருக்கிறது. ஆனாலும் தலை பகுதி மட்டும் பெரிதாக இருக்கிறது. இதற்கான காரணம் தெரியவில்லை. பெரும்பாலும் நீண்ட காலம் புதைக்கப்பட்டு இருந்த காரணத்தால் தலைப்பகுதி இப்படி பெரிதாக மாறி இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

    என்ன வயது

    என்ன வயது

    இதன் வயது, பாலினம் குறித்து தெரியவில்லை. இதை தற்போது ஆராய்ச்சி செய்து வருகிறது. எவ்வளவு வருடம் பழமையான உடல்கள் என்பது இதில் செய்யப்படும் ஆராய்ச்சி மூலம் தெரிய வரும். பெரும்பாலும் கிமு 6ம் நூற்றாண்டு உடலாக கூட இது இருக்கலாம் என்று கூறுகிறார்கள். கீழடி ஆராய்ச்சியில் இது மிக முக்கியமான திருப்பமாக பார்க்கப்படுகிறது.

    என்ன வரலாறு

    என்ன வரலாறு

    பல்வேறு அழுத்தங்களை அடுத்து தற்போது மீண்டும் அங்கு ஆராய்ச்சி தொடங்கி நடந்து வருகிறது.
    கடந்த வருடம் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் இந்திய வரலாற்றையே மாற்றி எழுதும் அளவிற்கு அமைந்துள்ளது. ஆம் கீழடியில் கிடைத்த பொருட்களில் செய்யப்பட்ட கார்பன் ஆராய்ச்சியில் அதன் வயது 2600 வருடங்களுக்கு முந்தயது என்று கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது கிறிஸ்து பிறப்பதற்கு 600 வருடங்களுக்கும் முன்பு ஆகும்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+