கொந்தகை கிராமத்தில் தோண்டப்பட்ட குழி.. ஆராய்ச்சியாளர்களுக்கு ஆச்சர்யம்.. கீழடி ஆய்வில் செம திருப்பம்
சென்னை: கீழடியில் நடந்து வரும் அகழ்வாராச்சியில் அடுத்தடுத்து திருப்பங்கள் நிகழ்ந்து வருகிறது. அங்கு இருக்கும் கொந்தகை கிராமத்தில் தற்போது தீவிரமாக ஆராய்ச்சி நடந்து வருகிறது.
Recommended Video
மாவட்டத்திற்கு தென்கிழக்கில் 15 கிலோ மீட்டர் தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் இருக்கிறது கீழடி கிராமம். இங்கு செய்யப்பட்ட ஆய்வுகள் மூலம் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பொருட்கள் பல கண்டுபிடிக்கப்பட்டது.
இது முழுக்க முழுக்க தமிழர் நாகரீகம் ஆகும். கீழடியில் தற்போது 6ம் கட்ட அகழ்வாராய்ச்சி நடந்து வருகிறது.

இரண்டு உடல்கள்
இங்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தற்போது அங்கிருந்து மேலும் இரண்டு உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அங்கு நேற்று முதல்நாள் 2 குழந்தைகளின் உடல்கள் கிடைத்தது. கொந்தகை பகுதியில் செய்யப்பட்ட சோதனையில் இந்த உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதோடு கீழடி ஆய்வில் மொத்தம் 5 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

நேற்று முதல்நாள் மீண்டும்
நேற்று முதல்நாள் கண்டுபிடிக்கப்பட்ட உடல்கள் இரண்டும் மிக சிறிய உடல்கள் ஆகும். ஒரு உடலின் அளவு 1.05 மீட்டர் மட்டுமே இருந்தது. இன்னொரு உடல் 0.65 மீட்டர் இருந்துள்ளது. இரண்டு உடலும் இதற்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட உடல்களை விட மிகவும் பழைய உடல்கள் ஆகும். அதில் இருந்த அளவு சதை பகுதி கூட இந்த உடல்களில் காணப்படவில்லை

என்ன நிலை
இந்த உடல்கள் தற்போது ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கிமு 300-400 ஆண்டுகளை சேர்ந்த உடல்களாக இது இருக்கலாம் என்று கூறுகிறார்கள். இதன் மீதான ஜீன் ஆராய்ச்சி தற்போது நடந்து வருகிறது. இந்த உடல்களின் பாலினம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. விரைவில் இதன் மீதான ஆராய்ச்சி முடிவுகள் வெளியாகும் என்றும் கூறுகிறார்கள்.

முன்பு எப்படி
முன்னதாக 6வது கட்ட ஆய்வில் இரண்டு உடல்கள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த உடல்கள் தற்போது மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு ஆய்வுக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது . இரண்டு உடல்களும் குழந்தைகளின் உடல் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டு உடல்களும் மிக மிக அருகில் புதைக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது தீவிரமான ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications