சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு பாதிப்பா? கேரளாவில் பரவும் அமீபா! அமைச்சர் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கேரளாவில் மூளையை தின்னும் அமீபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தல்கள் வந்துக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, "நேற்றைக்கு நான் இது சம்பந்தமாக மிகத் தெளிவான ஒரு பதிலை சொல்லி இருக்கிறேன். சபரிமலை ஆன்மீக சுற்றுலாவுக்கும், மூளையை தின்னும் அமீபா வைரஸ் பாதிப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

Kerala Tamil Nadu

மாசு படிந்த நீர்தான் ஆபத்து

மூளையை தின்னும் அமீபா அப்படிங்கற ஒரு வைரஸ் பரவல் கேரளாவில் சமீப காலமாக இருந்து வருகிறது. அதற்கான காரணம், கேரளாவில் சுற்றி இருக்கிற குளங்கள் குட்டைகள்தான். அதுவும் நீண்ட நாட்களாக தேங்கியிருக்கிற தண்ணீர், மாசு படிந்த தண்ணீர், சேறு அதிகமாக இருக்கும் மாசு படிந்த தண்ணீர்தான் ஆபத்தானது.

ஓடும் தண்ணீரில் பாதிப்பு இல்லை

இப்படியான நீர் நிலைகளில் குளிக்க போகும் போது, மூக்கின் வழியே அந்த வைரஸ் பரவி மூளையை பாதித்து மூளைக்காய்ச்சல் ஏற்பட்டு இறப்பு வரை செல்கிறது. அதனால்தான் அதற்கு மூளையை தின்னும் அமீபா என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் பம்பை உள்ளிட்ட ஆற்றில் குளிக்கிறார்களே! அதில் பாதிப்பு இருக்குமா? என்று பலரும் கேட்டிருந்தார்கள். ஆறுகளில் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும். ஓடும் தண்ணீரில் இப்படியான பாதிப்புகள் இருக்காது.

சபரிமலை பக்தர்களுக்கு பாதிப்பு

தேங்கியிருக்கும் தண்ணீரில்தான் பாதிப்பு இருக்கும். நீச்சல் குளம் கூட பல நாட்கள் தூய்மைப்படுத்தாமல் வைத்திருந்தால் அதில் பாசி, அழுக்கு படிந்து இருக்கும். அப்படியான நீர் நிலைகளில்தான் இந்த மாதிரியான வைரஸ் உருவாகும். கேரளாவை பொறுத்தவரை அங்கு தேங்கியிருக்கும் நீர் நிலைகள் அதிகம். நீர் நிலைகளை மக்கள் குளிக்க பயன்படுத்துகின்றனர். எனவேதான் இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. எனவே இந்த பாதிப்புக்கும் சபரிமலை பக்தர்களுக்கும் சம்பந்தம் இல்லை.

தமிழ்நாட்டிலும் தவிர்க்க வேண்டும்

மட்டுமல்லாது இந்த வைரஸ் பாதிப்பு என்பது தொற்று நோய் கிடையாது. எனவே அதை பார்த்த அச்சப்பட வேண்டியதில்லை. கேரளாவில் தேங்கியிருக்கும் நீர் நிலைகளில் குளிப்பதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அதேபோல தமிழ்நாட்டிலும் அசுத்தமான நீர் நிலைகளில் குளிப்பதை தவிர்க்க வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.

முன்னதாக இது தொடர்பாக தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல்களை கொடுத்திருந்தது. பொது சுகாதாரத்துறை இயக்குநர் சோமசுந்தரம், உள்ளாட்சி அமைப்புகளுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தார். அதில், "தேங்கிய நீரிலோ, அசுத்தமான அல்லது மாசடைந்த நீரிலோ பொது மக்களும், குறிப்பாக குழந்தைகளும் குளிக்கக் கூடாது. குளம், ஏரி உள்ளிட்ட நீர்நிலைகள் அனைத்தும் தூய்மையான சூழலில் இருப்பதை உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும். தனியார் மற்றும் அரசு நீச்சல் குளங்கள் அனைத்தும் அரசு வழிகாட்டுதலின்படி தூய்மையாக பராமரிக்க வேண்டும்.

தண்ணீரில் குறிப்பிட்ட அளவு குளோரின் கலந்திருத்தல் முக்கியம். நீர் நிலைகள் தூய்மையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதேபோன்று அதில் இறங்குவதற்கும், குளிப்பதற்கும் தடை விதிக்க வேண்டும். மூளையழற்சி அறிகுறிகளுடன் மருத்துவமனைகளுக்கு வருவோரை தீவிர மருத்துவக் கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும். உயா் சிறப்பு சிகிச்சைகள் தேவைப்படுவோருக்கு அந்த வசதிகள் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்" என குறிப்பிடப்பட்டிருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+