Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஹாட்ரிக்.. இதுவரை இப்படி நடந்ததே இல்லை.. கேரள சட்டசபை தேர்தல் ரொம்ப முக்கியமானது ஏன் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கேரளாவில் கடந்த சில வாரங்களாக அனல் பறந்த தேர்தல் பிரச்சாரம் ஏப்ரல் 7-ம் தேதியுடன் ஓய்ந்த நிலையில், இன்று (ஏப்ரல் 9) 140 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 1977-க்குப் பிறகு, 2021-ல் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்து இடதுசாரி ஜனநாயக முன்னணி (LDF) வரலாறு படைத்தது. தற்போது மூன்றாவது முறையாக ஹாட்ரிக் வெற்றியை நோக்கி முதல்வர் பினராயி விஜயன் களம் காண்கிறார்.

கேரளாவில் இதுவரை 3 முறை யாரும் தொடர்ச்சியாக ஆட்சி அமைத்தது இல்லை. இதனால் இந்த முறை அங்கே ரிசல்ட் எப்படி வரும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. கேரளாவின் அரசியல் திசை எதை நோக்கி நகரப்போகிறது? என்ற கேள்வியும் நிலவி வருகிறது.

Kerala elections 2026 2026

யாருக்குப் பெரும்பான்மை? - இழுபறியில் கருத்துக் கணிப்புகள்!

இந்த முறை போட்டி என்பது வழக்கமான 'மாற்று அரசியல்' என்பதற்கு அப்பால், வாழ்வா சாவா போராட்டமாக மாறியிருக்கிறது. சமீபத்திய கருத்துக் கணிப்புகள் கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன:

LDF vs UDF: ஆளும் இடதுசாரி முன்னணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் (UDF) இடையே மிக நெருக்கமான போட்டி நிலவுகிறது.

கிங் மேக்கராகும் பாஜக?: எந்த ஒரு முன்னணியும் தனிப் பெரும்பான்மை பெறாத 'தொங்கு சட்டசபை' அமையும் பட்சத்தில், பாஜக தலைமையிலான NDA கூட்டணி 'கிங் மேக்கர்' இடத்தைப் பிடிக்க வாய்ப்புள்ளதாகக் கணிப்புகள் கூறுகின்றன. ஆனால் தேர்தல் நடப்பதால் கருத்து கணிப்பு நம்பர்களை கொடுக்க இயலாது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு.. 5 மாநில தேர்தல் முடிந்த பின்பே வெளியாகும்.

களத்தில் நிற்கும் 'வெயிட்டான' வேட்பாளர்கள்!

1. பினராயி விஜயன் (LDF):

தர்மடம் தொகுதியில் போட்டியிடும் முதல்வர் பினராயி விஜயன் தான் இடதுசாரிகளின் ஒரே முகம். கடந்த பத்தாண்டுகளில் பேரிடர் மேலாண்மை, மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகளை முன்வைத்து அவர் வாக்குச் சேகரித்துள்ளார். தற்போதைய ஆட்சி எதிர்ப்பு அலைகளைத் தாண்டி, வரலாற்றுச் சாதனை படைப்பாரா என்பது மில்லியன் டாலர் கேள்வி.

2. வி.டி. சதீசன் (UDF):

பறவூர் தொகுதியில் மீண்டும் களம் காணும் எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன், காங்கிரஸ் கூட்டணியின் நம்பிக்கை நட்சத்திரம். 2001 முதல் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் இவர், அரசின் நிர்வாகக் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி 'மாற்றம் வேண்டும்' என்ற முழக்கத்துடன் தேர்தலை எதிர்கொள்கிறார்.

3. பாஜகவின் பலப்பரீட்சை:

கேரளாவில் காலூன்றத் துடிக்கும் பாஜக, இந்த முறை மூத்த தலைவர்களைக் களமிறக்கியுள்ளது. மத்திய முன்னாள் அமைச்சர் மற்றும் மாநில பாஜக தலைவருமான ராஜீவ் சந்திரசேகர் நேமம் தொகுதியிலும், மற்றொரு சீனியர் தலைவரான வி. முரளீதரன் கழக்கூட்டம் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். கடந்த தேர்தல்களில் பெரிய அளவில் வெற்றி பெறாவிட்டாலும், இந்த முறை பாஜகவின் வாக்கு வங்கி முடிவுகளைத் தீர்மானிக்கும் காரணியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேரளாவின் அரசியல் திசை எதை நோக்கி நகரப்போகிறது? கடவுளின் தேசம் மீண்டும் சிவக்குமா அல்லது கை கொடுக்குமா? மே மாதம் வெளிவரப்போகும் தேர்தல் முடிவுகள் இதற்கான விடையைச் சொல்லும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+