கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி.. என்னாச்சு அவருக்கு?
சென்னை: கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று சென்னைக்கு திடீரென வருகை தந்தார். சென்னையில் ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பினராயி விஜயனுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. சென்னையில் தங்கியுள்ள பினராயி விஜயன் ஓரிரு நாட்களில் கேரளாவிற்கு திரும்புவார் என்று கூறப்படுகிறது.
கேரள முதல்வராக பினராயி விஜயன் உள்ளார். 80 வயதான பினராயி விஜயன், இன்று சென்னைக்கு திடீரென வந்தார். சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் பினராயி விஜயன் அனுமதிக்கப்பட்டார்.

வழக்கமான உடல் நல பரிசோதனைகளுக்காக பினராயி விஜயன் அனுமதிக்கப்பட்டதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பினராயி விஜயனுக்கு ரத்த பரிசோதனை, ஈசிஜி, எக்ஸ்ரே, ஸ்கேன் உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டது. முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.
பினராயி விஜயனுக்கு மருத்துவமனையின் மூத்த மருத்துவர்கள் தலைமையிலான குழு பரிசோதனை மேற்கொண்டது. முதல்வர் பினராயி விஜயனுக்கு முழு உடல் பரிசோதனை மேற்கொண்ட பிறகு, இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதையடுத்து பலத்த பாதுகாப்புடன், தான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு பினராயி விஜயன் சென்றார்.
சென்னையில் தங்கியுள்ள பினராயி விஜயன் ஓரிரு நாட்களில் கேரளாவிற்கு திரும்புவார் என்று கூறப்படுகிறது. கேரள முதல்வரின் இந்த திடீர் சென்னை பயணம் பல்வேறு பரபரப்புகளை ஏற்படுத்தியது. எனினும், அவர் மருத்துவமனையில் பரிசோதனைக்காக வந்த தகவலால் அவர் தனிப்பட்ட பயணமாக வந்தது தெரியவந்தது.
பினராயி விஜயன் வருகையை முன்னிட்டு அவர் தங்கியுள்ள நட்சத்திர ஹோட்டல், மருத்துவமனையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பினராயி விஜயன் கடந்த சில ஆண்டுகளாக அவ்வப்போது மருத்துவ பரிசோதனைக்காக சென்னை வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications