Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கேரள முதல்வர் பதவியேற்பு LIVE UPDATES: கேரளா முதல்வராக 2-வது முறையாக பினராயி விஜயன் பதவி ஏற்றார்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளா முதல்வராக பினராயி விஜயன் 2-வது முறையாக இன்று பதவியேற்றுக்கொண்டார். ஆளுநர் ஆரிப் முகமது கான் பினராயி விஜயனுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

நடந்து முடிந்த கேரளா சட்டசபை தேர்தலில் 140 சட்டசபை தொகுதிகளில் எல்டிஎப் (இடதுசாரிகள்) கூட்டணி 99 இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. 41 இடங்களில் காங்கிரஸ் தலைமையிலான யுடிஎப் கூட்டணி வென்றது. இதையடுத்து இன்று மாலை 3.30 மணிக்கு கேரளா முதல்வராக பினராயி விஜயன் மீண்டும் பதவியேற்றுள்ளார்.

அவருடன் 3 பெண் அமைச்சர்கள் உட்பட 21 அமைச்சர்களும் இன்று பதவியேற்கின்றனர். இந்த பதவியேற்பு விழாவுக்கு 500 பேருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளனர். முதல்வரை தொடர்ந்து அமைச்சர்களுக்கு ஆளுநர் ஆரிப் முகமது கான் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

4:38 PM, 20 May

திருவனந்தபுரம்: சிபிஐ கட்சியில் இருந்து 4 அமைச்சர்கள் பதவி ஏற்றனர்

4:30 PM, 20 May

திருவனந்தபுரம்: கேரளா காங்கிரஸ் (மணி), ஜனதா தளம் (மதசார்பற்ற), தேசியவாத காங்கிரஸ் சார்பாக தலா ஒரு அமைச்சர்கள் பதவி ஏற்றனர்

4:27 PM, 20 May

திருவனந்தபுரம்: சிபிஐ கட்சியில் இருந்து 4 அமைச்சர்கள் பதவி ஏற்றனர்

4:26 PM, 20 May

திருவனந்தபுரம்: 12 அமைச்சர்கள் சிபிஎம் கட்சியில் இருந்து பதவி ஏற்றனர்

4:11 PM, 20 May

திருவனந்தபுரம்: பினராயி விஜயனின் புதிய அமைச்சரவையில் பி.ஏ.முஹம்மது ரியாஸ், வி.சிவான்குட்டி, வீணா ஜார்ஜ், கே.என்.பாலாகோபால், வி.என்.வாசவன், சாஜி செரியன், பி ராஜீவ், எம்.பி.ராஜேஷ், கே ராதாகிருஷ்ணன், பி நந்தகுமார், மற்றும் எம்.வி.கோவிந்தன் போன்ற இளம் சிபிஎம் தலைவர்கள் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர்

4:06 PM, 20 May

திருவனந்தபுரம்: எல்டிஎப் எல்எல்ஏக்கள் ஆண்டனி ராஜு, கே ராதாகிருஷ்ணன், வீணா ஜார்ஜ் ஆகியோர் அமைச்சர்களாக பதவி ஏற்று வருகிறார்கள்

3:53 PM, 20 May

திருவனந்தபுரம்: கேரளா முதல்வராக பதவியேற்ற பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்து என் சகோதரர் பினராயி விஜயனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் - மு.க ஸ்டாலின்

3:44 PM, 20 May

திருவனந்தபுரம்: முதல்வர் பினராயி விஜயனுனை தொடர்ந்து 21 அமைச்சர்களுக்கு ஆளுநர் ஆரிப் முகமது கான் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்

3:41 PM, 20 May

திருவனந்தபுரம்: முதல்வர் பினராயி விஜயனுக்கு ஆளுநர் ஆரிப் முகமது கான் பதவி பிரமாணம் செய்து வைத்தார்

3:39 PM, 20 May

திருவனந்தபுரம்: முதல்வர் பினராயி விஜயனுக்கு ஆளுநர் ஆரிப் முகமது கான் பதவி பிரமாணம் செய்து வைத்தார்

3:39 PM, 20 May

திருவனந்தபுரம்: கேரளா முதல்வராக 2-வது முறையாக பினராயி விஜயன் பதவி ஏற்றார்

3:37 PM, 20 May

திருவனந்தபுரம்: முதல்வர் பினராயி விஜயனின் பதவி ஏற்பு விழாவில் கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றன

3:37 PM, 20 May

சமூக இடைவெளியுடன் விருந்தினர்கள் அமர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

3:34 PM, 20 May
கேரளா

கேரள முதல்வர் பினராயி விஜயன் பதவியேற்பு விழாவில் தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்பு

3:34 PM, 20 May
கேரளா

திருவனந்தபுரம்: பதவி ஏற்பு விழா நடக்கும் சென்ட்ரல் மைதானத்திற்கு முதல்வர் பினராயி விஜயன் வருகை

3:30 PM, 20 May
கேரளா

கேரளா முதல்வராக பினராயி விஜயன் இன்று 2-வது முறையாக மாலை 3.30 மணிக்கு பதவியேற்கிறார் அவருடன் 3 பெண் அமைச்சர்கள் உட்பட 21 அமைச்சர்களும் இன்று பதவியேற்கின்றனர் பதவி ஏற்பு விழா இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது இந்த பதவியேற்பு விழாவுக்கு 500 பேருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

6:57 AM, 12 May
தமிழ்நாடு

தமிழக சட்டப்பேரவை சபாநாயகராக இன்று பதவியேற்கிறார் அப்பாவு. சட்டப்பேரவையின் துணை சபாநாயகராக இன்று பொறுப்பேற்கிறார் கு.பிச்சாண்டி

12:35 PM, 11 May
தமிழ்நாடு

தமிழக சட்டசபை சபாநாயகராக போட்டியின்றி தேர்வானார் அப்பாவு

12:35 PM, 11 May
தமிழ்நாடு

தமிழ்நாடு சட்டசபை துணை சபாநாயகராக போட்டியின்றி தேர்வானார் கு. பிச்சாண்டி

12:34 PM, 11 May
தமிழ்நாடு

தமிழ்நாடு சட்டசபை சபாநாயகர், துணை சபாநாயகர் பதவிக்கு பகல் 12 மணிவரை அப்பாவு, கு. பிச்சாண்டி தவிர வேறு யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை

12:34 PM, 11 May
தமிழ்நாடு

தமிழக சட்டசபை சபாநாயகர், துணை சபாநாயகர் பதவிக்கான வேட்புமனுத் தாக்கல் பகல் 12 மணியுடன் நிறைவு

12:06 PM, 11 May
தமிழ்நாடு

தமிழக சட்டசபை சபாநாயகராக அப்பாவு போட்டியின்றி தேர்வாகிறார்; சபாநாயகர் பதவிக்கான வேட்பு மனுத்தாக்கல் பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது.

11:57 AM, 11 May
தமிழ்நாடு

கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினர்

10:57 AM, 11 May
தமிழ்நாடு

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எம்.எல்.ஏ.வாக பதவியேற்றார்

10:49 AM, 11 May
தமிழ்நாடு

இன்று சட்டமன்ற உறுப்பினர்களாகப் பதவி ஏற்றுக் கொள்ளும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அவரவர் தொகுதி மக்களை கொரோனாவிலிருந்து காப்பதை முழுமுதற் கடமையாகக் கருதி செயலாற்றும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்- கமல்ஹாசன்

10:23 AM, 11 May
தமிழ்நாடு

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என்று தொடங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் உறுதி மொழி ஏற்றுக் கொண்டார்

10:10 AM, 11 May

முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபை உறுப்பினராக பதவி ஏற்றுக் கொண்டார்

10:10 AM, 11 May
தமிழ்நாடு

முதல்வர் மு.க.ஸ்டாலினை தொடர்ந்து அமைச்சர்கள் சட்டசபை உறுப்பினராக பதவியேற்று வருகின்றனர்

10:07 AM, 11 May

தமிழ்நாடு சட்ட மன்ற எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்த்தெடுக்கப்பட்ட திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்கள்!- ப. சிதம்பரம்

10:04 AM, 11 May
தமிழ்நாடு

16-வது தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை பின்பற்றி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது

READ MORE

Kerala CM oath-taking ceremony LIVE UPDATES: Pinarayi Vijayan swear in for 2nd term
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+