Kerala: ரூ.2 கோடியை இழந்தது தான் மிச்சம்.. 60 வருஷமா லாட்டரி வாங்கியும் திருந்தாத கேரள முதியவர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கேரளாவின் கண்ணூரை சேர்ந்த ராகவன் என்ற முதியவர் 2 கோடிக்கும் மேல் லாட்டரி வாங்கியும் இதுவரை ஒரு ரூபாய் கூட பரிசு அடிக்காமல் ஏமாந்து இருக்கிறார். கேரள லாட்டரி அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்தே இந்த முதியவர் லாட்டரி சீட்டுக்களை வாங்கி வருகிறாராம். ஆனால் இதுவரை அவருக்கு பரிசு அடித்தது என்னவோ மூன்று முறை தான்.

வீட்டில் சாக்கு பைகளில் மூட்டை மூட்டையாக லாட்டரி டிக்கெட்டுகளை சேமித்து வைத்து இருக்கும் இந்த முதியவர் நான் வாங்கிய லாட்டரி சீட்டுகளுக்கான அந்த காசை வைத்து எங்கேயாவது முதலீடு செய்தால் கூட லாட்டரி அடித்து இருந்தால் எவ்வளவு கிடைத்து இருக்குமோ அதை விட கூடுதலாக சம்பாதித்து இருப்பார்.

Kerala Old Man buying lottery tickets for 60 years 2 Crore lost still he remains unlucky

லாட்டரி டிக்கெட் மோகம்

லாட்டரியில் நமக்கும் என்றாவது ஒரு நாள் பணம் அடித்துவிடாதா? ஒரே நாளில் வாழ்க்கை உச்சத்திற்கு போய்விடாதா? என்று மனக்கோட்டை கட்டிக்கொண்டு லாட்டரி வாங்கி, கடைசியில் பணத்தை இழந்தவர்கள்தான் அதிகம். யாரோ ஒருவருக்கு பரிசு அடிக்க பல லட்சம் பணத்தை இழந்து போக வேண்டும் என்று தெரிந்தும் லாட்டரி மீதான ஆர்வம் பலருக்கும் குறைவது இல்லை.

லாட்டரி வாங்கிய காசை சேமித்து வைத்து இருந்தால் கூட இன்று பணக்காரர் ஆகியிருக்கலாம் என்று பலரும் புலம்புவதை பார்க்க முடியும். இப்போதும் கூட ஓணம் பம்பரில் பரிசு அடிக்காமல் போயிவிட்டதே என சமூக வலைத்தளங்களில் பலரும் தங்கள் வாங்கி குவித்து வைத்து இருந்த டிக்கெட்டுகளை காட்டி.. 5 ஆயிரத்திற்கு வாங்கினேன். 10 ஆயிரத்திற்கு வாங்கினேன் எல்லாம் போச்சு என்று சமூக வலைத்தளங்களில் வீடியோவை பதிவிட்டு வருவதையும் பார்க்க முடிகிறது.

1967 ஆம் ஆண்டு முதல் வாங்கி வருகிறேன்

இதற்கிடையே, கேரளாவின் கண்ணூரை சேர்ந்த ராகவன் என்ற முதியவர் 2 கோடிக்கும் மேல் லாட்டரி வாங்கியும் இதுவரை ஒரு ரூபாய் கூட பரிசு அடிக்காமல் ஏமாந்து இருக்கிறார். கேரள மாநிலத்தில் 1967 ஆம் ஆண்டு லாட்டரி டிக்கெட் அறிமுகம் செய்யபட்டது. அப்போது முதல் பரிசு ரூ.5 ஆயிரம் அளிக்கப்பட்டது. கேரளாவில் முதல் முறையாக லாட்டரி அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்தே டிக்கெட் வாங்கி வந்த ராகவன் தற்போது வரை வாங்கி வருகிறாராம்.

வீட்டில் சாக்கு பைகளில் மூட்டை மூட்டையாக லாட்டரி டிக்கெட்டுகளை சேமித்து வைத்து இருக்கும் ராகவன், என்றாவது ஒருநாள் எனக்கு அதிர்ஷ்டம் அடித்தே தீரும் என்று கூறி வருகிறார். இதுவரைக்கும் ரூ.2 கோடிக்கும் மேல் லாட்டரி வாங்கிய நிலையில், அந்த காசை வைத்து எங்கேயாவது முதலீடு செய்தால் கூட லாட்டரி அடித்து இருந்தால் எவ்வளவு கிடைத்து இருக்குமோ அதை விட கூடுதலாக சம்பாதித்து இருப்பார் என்று பலரும் சொல்வதை பார்க்க முடிகிறது.

நிலம், நகைகளை விற்றும் லாட்டரி

ராகவனுக்கு சிறிய அளவிலான தொகை பரிசு அடித்து இருக்கிறதாம். 5 ஆயிரம், 4 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகை அவ்வப்பொது அடித்து இருந்தாலும், இதுவரை அவர் எதிர்பார்த்த ஜாக்பாட் பரிசு அடித்ததே இல்லை. விவசாய தொழில் செய்து வரும் ராகவன், தனது வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வரும் போது டிக்கெட் வாங்கி வருவாராம். 2.5 ஏக்கர் நிலம் வைத்துள்ள ராகவன், தென்னை மற்றும் வாழை விவசாயம் செய்து வருகிறார்.

இதில் இருந்து கிடைக்கும் வருமானத்தில் சிறிய தொகையை லாட்டரிக்கு ஒதுக்கி விடுவாராம். தொடர்ச்சியாக லாட்டரி வாங்கியதால் கடன் அதிகமாகியுள்ளது. ஒரு கட்டத்தில் கடனை அடைக்க தனது விவசாய நிலத்தையும் மனைவியின் நகைகளையும் விற்று இருக்கிறார். தற்போது 25 செண்ட் பரப்பளவு கொண்ட பிளாட் ஒன்றில் சிறிய வீட்டில் வசித்து வரும் ராகவன், வயது முதிர்வால் அவதிப்பட்டு வருகிறார்.

மிகவும் துரதிஷ்டவசமான நபர்

இதனால் எப்போதாவது வீட்டை விட்டு வெளியே வரும் ராகவன், பம்பர் லாட்டரி டிக்கெட்டுகளை தவறாமல் வாங்கிவிடுவாராம். 60 வருடங்களுக்கும் மேலாக லாட்டரி வாங்கி வந்தாலும் இதுவரை ஒரு முறை கூட பம்பர் அடிக்கவில்லை. இருந்தாலும் நிச்சயம் ஒருநாள் தனக்கு பரிசு அடிக்கும் என்று புன்னகைக்கும் ராகவன், இன்றைய தேதிக்கு நான் தான் மிகவும் துரதிஷ்டவசமான நபர். பல கோடிகளை லாட்டரியில் விட்டு விட்டேனே என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+