கேரளாவில் காங்கிரஸை பாருங்க! அதிகார பகிர்வு குறித்து பொங்கலன்றும் திமுகவை அலறவிடும் மாணிக்கம் தாகூர்
சென்னை: கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான UDF மாடல்தான் அதிகாரப்பகிர்வுக்கு முன்னுதாரணம் என காங்கிரஸ் கட்சியின் விருதுநகர் தொகுதி எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து இவர் ஆட்சியில் பங்கு குறித்து பேசி வருவதால் திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்க நெருங்க காங்கிரஸ் கட்சியில் அதிகாரப் பகிர்வு குறித்து ஆளாளுக்கு பேசி வருகிறார். திமுக கூட்டணியில் இருக்கிறோம் என கூறி கொண்டு காங்கிரஸ் கட்சியில் இவ்வாறு பலர் பேசி வருவது அக்கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தும் நிலை இருக்கிறது.

கூட்டணி விவகாரம் குறித்து யாரும் பொதுவெளியில் கருத்து தெரிவிக்க வேண்டாம் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எச்சரிக்கை விடுத்திருந்தார். எனினும் மாணிக்கம் தாகூர் அன்றாடம் இது குறித்து பேசி வருகிறார்.
மோதல் போக்கு
இவ்வாறு பேசிய போது அவருக்கும் திமுக முன்னாள் எம்பி புதுகை அப்துல்லாவுக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. மேலும் பராசக்தி படத்திற்கு தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அதே வேளையில் ஜனநாயகன் திரைப்படத்திற்கு அவர்கள் ஆதரவு தெரிவிக்கிறார்கள். தவெக பக்கம் காங்கிரஸ் செல்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது. இதற்கு அவர்கள் மறுக்கவும் இல்லை, ஆமோதிக்கவும் இல்லை.
பொங்கல் பண்டிகையில்
அந்த வகையில் பொங்கல் பண்டிகை என்றும் பாராமல் காங்கிரஸின் மாணிக்கம் தாகூர் எம்.பி. தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: தை பிறந்தால் வழி பிறக்கும்.. ஆட்சியில் பங்கு என்பது என்ன என்பதை நாம் அறிய ஒரு மாடல். கேரளாவின் UDF மாடல், கூட்டணி அரசியல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான நம்பிக்கையான பாதையை காட்டுகிறது.
பகிரப்படும் அதிகாரம்
காங்கிரஸ் தலைமையேற்கிறது - ஆனால் அதிகாரம் குவிக்கப்படவில்லை; பகிரப்படுகிறது; நட்பு +பங்கு
இதுவே UDF அரசியலின் அடித்தளம். UDF-ல் நாங்கள் தேர்தலை ஒன்றாகவே எதிர்கொள்கிறோம். பரஸ்பர நம்பிக்கையும், ஒரே அரசியல் நோக்கமும் அவர்களின் பலம்.
தேர்தல் முடிந்ததும்
முக்கியமானது - தேர்தல் முடிந்ததும் கூட்டணிக்கு "பை-பை" சொல்லுவதில்லை. தேர்தலில் கூட்டாளிகள், ஆட்சியிலும் பங்கு பெறும் கூட்டாளிகளே. அமைச்சர் பதவிகளும் முக்கிய துறைகளும் பலத்தையும், உடன்பாட்டையும், பொறுப்பையும் அடிப்படையாகக் கொண்டு பகிரப்படுகிறது -
ஆட்சி ஆதிக்கத்திற்காக அல்ல.
நிதி கல்வி
IUML, Kerala Congress (M), RSP உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் நிதி, கல்வி, பொதுப்பணித் துறை, தொழில், சமூக நலன், நீர்வளம் போன்ற முக்கிய அமைச்சகங்களை பொறுப்புடன் நிர்வகித்தன.
பங்கீடு அல்ல
இது பெயருக்கான பங்கீடு அல்ல. கூட்டணிக் கட்சிகள் மைய துறைகளை நிர்வகித்து, முடிவெடுத்து, முழுப் பொறுப்பையும் ஏற்றன. முக்கிய கொள்கை முடிவுகள், UDF ஒருங்கிணைப்பின் மூலம், கேரளாவின் சமூக-அரசியல் பல்வகைமையை மதித்து எடுக்கப்பட்டன. தேர்தலுக்குப் பின் துரோகம் இல்லை. வாக்குகள் எண்ணப்பட்டதும் கூட்டணியை ஒதுக்கும் அரசியல் இல்லை. இதுதான் UDF மாடலின் வித்தியாசம்.
கூட்டணி தர்மம்
UDF மாடல் = கூட்டணி தர்மம் செயல்பாட்டில்.
ஒன்றாகப் போராடு!
ஒன்றாக ஆட்சி செய்!
ஒன்றாக மக்களுக்கு வழங்கு!
இந்த ஜனநாயகமான UDF மாடல் 2026-லும் வெற்றி பெற வேண்டும். தை பிறந்தால் வழி பிறக்கும்.. நல்ல ஆட்சியாக மாறட்டும். இவ்வாறு மாணிக்கம் தாகூர் பதிவிட்டுள்ளார்.
-
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications