சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஹாஸ்டல் ரூமில் தூக்கில் தொங்கிய பாத்திமா.. சென்னை ஐஐடி விடுதியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னை ஐஐடி வளாக விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை ஐஐடியில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. ஹாஸ்டல் ரூமிலேயே தூக்கில் தொங்கிய மாணவிக்கு வயது 18!

கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த மாணவி பாத்திமா லதீப். இவர், எம்ஏ முதலாமாண்டு படித்து வருகிறார். சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள சரயு பெண்கள் விடுதியில் தங்கி படித்து வந்திருக்கிறார்.

 kerala student committed suicide in Chennai IIT

இந்நிலையில், இந்த மாணவி தன்னுடைய ஹாஸ்டல் ரூமிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வழக்கம்போல், மாணவியை தேடி அறைக்கு வந்த சக தோழிகள், பாத்திமா தூக்கில் தொங்கியதை கண்டு ஹாஸ்டல் நிர்வாகத்துக்கு தகவல் அளிக்க, இது தொடர்பாக உடனடியாக போலீசுக்கும் தெரிவிக்கப்பட்டது.

வெறும் 24 வயசுதான்.. ஆனால் தேவி செய்த காரியம் இருக்கே.. கைது செய்த போலீஸ்!வெறும் 24 வயசுதான்.. ஆனால் தேவி செய்த காரியம் இருக்கே.. கைது செய்த போலீஸ்!

விரைந்து கோட்டூர்புரம் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். தற்கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை என்றாலும், தேர்வில் மதிப்பெண் (இன்டெர்னல் மார்க்) குறைவாக இவர் வாங்கியதாகவும், அதனால் இவர் பெரும் கவலையுடன் காணப்பட்டதாகவும் சொல்கிறார்கள். இருந்தாலும் இது கொலையா, அல்லது தற்கொலையா என்ற விசாரணை நடக்கிறது. கிடைக்கப் போகும் ஆதாரங்கள், மற்றும் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வைத்துதான், மாணவியின் மரணம் குறித்து தெரியவரும்.

ஐஐடி மாணவர்கள் இப்படி தூக்கில் தொங்குவது இது முதல்முறை அல்ல.. இந்த ஆண்டு மட்டும் 4-க்கும் மேற்பட்டோர் ஹாஸ்டலிலேயே தற்கொலை செய்து கொள்வது நடந்து வருகிறது. உயர்படிப்பு படிக்கும் மாணவர்கள் இப்படி ஏன் தற்கொலையில் முடிவை தேடி கொள்கிறார்கள் என்ற கேள்வியும் பீதியும் பெற்றோர்களிடையே எழுந்துள்ளது.

English summary
kerala student committed suicide in Chennai IIT campus hostel room and kottupuram police investigation is going on it
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X