சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"அன்னைக்கு கொலை.. இப்ப கடத்தல்.. கேரள கம்யூனிஸ்ட் ஜனநாயகத்தின் சாபக்கேடு".. எச்.ராஜா காட்டம்

கேரளா கடத்தல் விவகாரம் குறித்து எச்.ராஜா விமர்சித்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: "முதலில் 1968-ல் கொலைகுற்றச்சாட்டு.. இப்ப தங்கம் கடத்தல்... கேரள கம்யூனிஸ்ட் அரசு ஜனநாயகத்தின் சாபக்கேடு" என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ட்வீட் ஒன்றினை போட்டுள்ளார்.

கேரள மாநிலத்தில் "டிப்டாப் ஸ்வப்னா" வால் ஏகப்பட்ட பிரச்சனை நடந்து வருகிறது.. கேரள மாநில அரசியலையே தங்கம் கடத்தல் விவகாரம் அசைத்து பார்த்து வருகிறது.. ஐக்கிய அரசு அமீரக துணை தூதரக முகவரிக்கு சரக்கு விமானம் மூலம் பார்சல் வந்த அட்டை பெட்டியால் இவ்வளவும் வெளி உலகத்துக்கு வந்துள்ளது.

kerala swapana gold smuggling case: bjp h raja has criticized

கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப துறை அதிகாரியாக இவர் வேலை பார்த்ததால், ஆளும் தரப்புக்கு அழுத்தம் கூடுகிறது.. பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கி வருகின்றன.

இந்த சம்பவம் குறித்து பாஜக மூத்த தலைவரும், அக்கட்சியின் தேசிய செயலாளருமான எச்.ராஜா ஒரு ட்வீட் போட்டுள்ளார்.. ஏற்கனவே யானை இறந்தபோது, "மதவெறியனால் கொல்லப்பட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது" என்று பதிவிட்டிருந்த நிலையில், அந்த விவகாரம் கொழுந்து விட்டு எரிந்தது.

இப்போது, இன்றைய பதிவில், "முதலில் 1968 ல் கொலைகுற்றச்சாட்டு இப்ப தங்கம் கடத்தல். கேரள கம்யூனிஸ்ட் அரசு ஜனநாயகத்தின் சாபக்கேடு என்று தெரிவித்துள்ளார். அத்துடன் தங்கம் கடத்தப்பட்ட வீடியோவையும் பதிவிட்டுள்ளார்.

இதற்கு பலரும் கமெண்ட்களை போட்டு வருகிறார்கள்.. அருமையாக சொன்னீர்கள் என்றும், "கோத்ரா கலவரம் பண்ணவங்கல்லாம் குழந்தைகளா ஆபீசர்? இங்க மாத்திரம் என்ன வாழுதாம்? அடுத்தவங்கள குற்றம் சொல்லியே இவங்களுக்கு பழகி போச்சு... கடத்தல் மட்டும் தான் என்று இல்லை, மேலும் மேலும் பெரிய அளவில் குற்ற செய்கை செய்து கொண்டு தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது" என்றும் எச்.ராஜா ட்வீட்டுக்கு பதிவிட்டு வருகிறார்கள்.

English summary
kerala swapana gold smuggling case: bjp h raja has criticized
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X