கணவனுக்கு கடைசி முத்தம் தந்த மனைவி.. சவப்பெட்டியில் இருந்து நிமிரவே இல்லை.. அதிர்ந்த கேரளா

Subscribe to Oneindia Tamil

சென்னை: மனிதவாழ்வில் காதலுக்கும் தம்பதியரின் வாழ்வுக்கும் பல அர்த்தங்கள் உண்டு. ஆனால், சில மனிதர்களின் வாழ்க்கை நிறைவுபெறும் விதம், அவர்களின் பரஸ்பர அன்பின் ஆழம் எத்தகையது என்பதை உலகிற்கு உணர்த்திவிட்டு செல்கிறது.. அப்படித்தான் கேரளாவிலும் ஒரு நிகழ்வு நடந்து, மொத்த பேரையும் உலுக்கி எடுத்துள்ளது.. யாரிந்த தம்பதி? என்ன நடந்தது?

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் பாலாவில் வசித்து வருபவர் குரியன் ஜோசப்.. 73 வயதாகிறது.. இவரது மனைவி ஷெர்லி (71). கேரள காங்கிரசின் வழிநடத்தல் குழு உறுப்பினரும், பாலாவில் மிகவும் பிரபலமான நபராகவும் விளங்குபவர் குரியன் ஜோசப்.

Kerala Couple Final Kiss Emotional Story

குரியன் ஜோசப்

வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக குரியன் ஜோசப் பாலாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.. ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி காலமானார்.

இதனைத் தொடர்ந்து, கடந்த திங்கட்கிழமை குரியன் ஜோசப்பின் இல்லத்தில் இறுதி சடங்குகள் முழு வீச்சில் நடைபெற்றன. உறவினர்களும் நண்பர்களும் சூழ்ந்திருக்க, அவரது உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டி மூடப்பட்டு தேவாலயத்திற்குக் கொண்டு செல்வதற்கான கடைசித் தருணம் வந்தது. ஆனால், குடும்பத்தின் தூணாக நின்ற கணவரின் பிரிவை ஷெர்லியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

கடைசி முத்தம்

தன் கணவனின் முகத்திற்கருகே குனிந்து ஷெர்லி இறுதி முத்தம் கொடுத்தார். பிரியமானவரின் முகத்தில் தன் முத்தத்தை பதித்த அந்த நொடிக்கு பிறகு ஷெர்லி நிமிரவே இல்லை. உறவினர்கள் பதறிப்போய் அவரை எழுப்ப முயன்றும் முடியவில்லை.. உடனடியாக மருத்துவமனைக்கு ஷெர்லியை தூக்கி கொண்டு ஓடினார்கள்.. ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக சொல்லிவிட்டார்கள்.

கணவனின் பிரிவை தாங்க முடியாமல், அதே சோகத்தில் அவரும் தன் வாழ்வின் பயணத்தை முடித்துக் கொண்டார். 3 மகள்களுடன் நிறைவாகவும் அமைதியாகவும் வாழ்ந்த நிலையில், மரணமும் இந்த தம்பதியை பிரிக்க முடியாமல் ஒரே நாளில் அடுத்தடுத்து அரங்கேறியது. கணவனின் பிரிவை தாங்க முடியாமல் மனைவியும் அவரைத் தொடர்ந்து உயிரிழந்ததை கண்ணால் பார்த்து கதறி அழுதனர் உறவினர்கள்.

அடுத்தடுத்து இறுதிச்சடங்கு

ஏஞ்சலா, அன்னா, அபி ஆகிய 3 மகள்களும் பெற்றோரின் சடலத்தை கண்டு அழுதது காண்போரை நிலைகுலைய வைத்து விட்டது. பிறகு 2 பேருக்கும் சேர்ந்தே இறுதிச்சடங்குகள் நடந்தன.. பாலா செயின்ட் ஜார்ஜ் லாலம் புதன் பள்ளி கல்லறையில் ஒரே நாளில் அடுத்தடுத்து நல்லடக்கம் செய்யப்பட்டது.

வாழ்விலும் தாழ்விலும் இணைபிரியாமல் வாழ்ந்த அந்தத் தம்பதியின் இறுதிப்பயணம், இப்போது பாலா நகர மக்களின் மனதை துளைத்தெடுத்து கொண்டிருக்கிறது..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+