சீமானுக்கு தலைவலி.. நாம் தமிழர் கட்சியில் இருந்து அடுத்தடுத்து விலகும் தலைகள்.. பரபர குற்றச்சாட்டு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாம் தமிழர் கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் பலர் அடுத்தடுத்து விலகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது குற்றம்சாட்டி, நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் சுகுமார் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராக செயல்பட்டு வந்தவர் சுகுமார். இவர் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். நான் செய்வதைத் தான் செய்வேன். நீங்கள் இருந்தால் இருங்கள் இல்லாவிட்டால் கிளம்புங்கள் என சீமான் தன்னிடம் கூறியதாக சுகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

seeman naam tamilar katchi villupuram

நாதக விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் சுகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுகிறேன. நாம் தமிழர் கட்சியில் கடந்த 9 ஆண்டுகளாக என்னால் முடிந்த வரை அனைத்து கட்சி பணிகளும் சிறப்பாக செய்தேன். 2015 இல் முதனமுதலாக செஞ்சி நகர செயலாளராக நியமிக்கப்பட்டு 2018 ஆம் ஆண்டு தொகுதி செயலாளர் ஆகவும் 2020 இல் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் ஆகவும் மற்றும் 2021 சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராகவும் இருந்தோம்.

இரண்டு நாடாளுமன்றத் தேர்தல் இரண்டு சட்டமன்றத் தேர்தல் ஒரு உள்ளாட்சித் தேர்தல் என அனைத்து தேர்தலிலும் நாம் சிறப்பாக வேலை செய்தோம். அதேபோல உள்ளாட்சித் தேர்தலில் கட்சி சின்னத்தில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் 100% வேட்பாளரை நிரப்பினோம். கட்சியின் கிளை பொறுப்புகளை முடிந்த அளவு இதுவரை நிரப்பி சீமான் அண்ணனிடம் கையொப்பமும் வாங்கினோம்.

விழுப்புரம் மாவட்டத்தின் சிறந்த தொகுதியாக செயல்பட்டு வந்தோம். இது நாள் வரை நாம் செய்த செயல்கள், உடல் உழைப்பு மற்றும் பண விரயம் இவை எவையும் அவர் பொருட்படுத்தும் படி இல்லை, இது அனைத்து பொறுப்பாளருக்கும் சமம்.

அண்ணன் கூறியது : இந்த தொகுதியில் உள்ள எவருக்கும் நான் பதில் சொல்ல முடியாது மற்றும் நீங்கள் என்னிடம் கேள்வியும் கேட்கக் கூடாது. என் இஷ்டப்படி தான் நான் செய்வேன். நீங்கள் இருந்தால் இருங்கள்.. இல்லாவிட்டால் கிளம்புங்கள். உங்களை யாரும் போஸ்டர் ஓட்டவும் சொல்லவில்லை செலவு செய்யவும் கூறவில்லை என்று கூறினார்.

ஒன்றுக்கு இருமுறை பேசியும் நான் செய்வதைத் தான் செய்வேன். நீங்கள் இருந்தால் இருங்கள் இல்லாவிட்டால் கிளம்புங்கள் என்று கூறியதன் அடிப்படையில் அண்ணா நாங்கள் உங்களிடம் கேட்டது பணமோ பொருளோ அல்ல எங்களுக்கான மரியாதை மற்றும் எங்களுக்கான அங்கீகாரம் இதுவே உங்களால் தர முடியவில்லை எனவே மன வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நாம் தமிழர் கட்சியில் இருந்து அனைத்து பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுகின்றேன். இதுநாள் வரை என்னுடன் பணியாற்றிய அனைத்து பொறுப்பாளர்களுக்கும் மற்றும் உறவுகளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்." என்று தெரிவித்துள்ளார்.

seeman naam tamilar katchi villupuram

முன்னதாக, கிருஷ்ணகிரி நாம் தமிழர் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக மண்டல செயலாளர் கரு.பிரபாகரன் தலைமையில் அறிவித்தனர். மேலும் கட்சியில் இருந்து விலக இருப்பது குறித்தும் மண்டல செயலாளர் பிரபாகரன் விளக்கம் அளித்திருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+