அட்றா சக்க! இது ஃபாரீன் இல்ல.. பளபளக்கும் சென்னை விமான நிலைய புதிய முனையம் - அது என்ன “ஸ்கை லைட்”?
சென்னை: சென்னை விமான நிலையத்தில் கட்டப்பட்டு வரும் புதிய முனையத்தின் புகைப்படங்கள் விமான நிலையத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தின் வெளியாகி வியப்படைய செய்து இருக்கின்றன. பெரும் பெரும் வல்லரசு நாடுகளில் இருப்பதை போன்ற உணர்வை அந்த விமான நிலைய உள்கட்டமைப்பு பணிகள் ஏற்படுத்துகின்றன.
இந்தியாவின் முன்னணி விமான நிலையங்களில் ஒன்றாக சென்னை விமான நிலையம் திகழ்ந்து வருகிறது. கண்ணாடிகளால் கட்டப்பட்ட விமான நிலையத்தின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முனையங்கள் தற்போது பயன்பாட்டில் இருந்து வருகின்றன.
இந்த விமான நிலையத்தின் கண்ணாடிகள் பல முறை கீழே விழுந்து உடைந்ததால், அதன் மீதான விமர்சனம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. சமீப காலமாக அதுபோன்ற அசம்பாவீதங்கள் ஏதும் நிகழவில்லை.

புதிய முனையம்
இந்த நிலையில் சென்னை விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இடப்பற்றாக்குறையை போக்கவும், நவீனப்படுத்தவும் ரூ.2,400 கோடி மதிப்பில் புதிய முனையம் அமைக்கும் பணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. பல்வேறு நவீன அம்சங்களை உள்ளடக்கிய இந்த புதிய விமான நிலைய முனையம் 2.36 லட்சம் சதுர மீட்ட பரப்பளவில் கட்டுப்பட்டு வருகிறது.

பயணிகள் எண்ணிக்கை
ஒருங்கிணைந்த விமான முனையங்களின் முதல் கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடைந்து இருக்கின்றன. தற்போது சென்னை விமான நிலைய பயணிகள் எண்ணிக்கை 2.2 கோடியாக உள்ள நிலையில், இந்த புதிய முனையம் மக்களின் பயன்பாட்டிற்கு வருமேயானால் அது 3.5 கோடியாக உயரும்.

5 மாடிகள்
இதில் பயணிகளின் உடைமைகளை கையாள்வதற்காக கீழ் தளம் ஒதுக்கப்பட்டு உள்ளது. உலக நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்காக முதல் தளம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. பயணிகள் புறப்படுவதற்காக 2வது தளம் என 5 மாடிகளை இந்த புதிய விமான நிலைய முனையம் கொண்டுள்ளது.

நவீன வசதிகள்
மற்ற தளங்களில் பயணிகளுக்கான ஓய்வு அறைகள், விமான நிலையத்தின் நிறுவன அலுவலகங்கள், நிர்வாக அலுவலகங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தற்போது கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடைந்து இருக்கும் நிலையில் சென்சார் மற்றும் இதர பாதுகாப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பிரதமர் மோடி
வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி தமிழ்நாடு வரும் பிரதமர் நரேந்திர மோடி, ராமேஸ்வரத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அதன் பின்னர் சென்னையில் புதிய விமான நிலையத்தின் முனையத்தை திறந்து வைக்க உள்ளார். விமான பயணிகளின் உடைமைகளை கையாளும் பணிகள் புதிய விமான நிலைய முனையத்தில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டன.

பார்க்கிங், ஷாப்பிங் மால்
இதில் குறிப்பாக பலரை உற்று நோக்க வைத்தது மல்டி வெலல் கார் பார்க்கிங், ஷாப்பிங் மால் மற்றும் திரையரங்குகள்தான். இவை கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதியே திறந்துவைக்கப்பட்டன. இந்த நிலையில் புதிய விமான நிலையத்தின் புகைப்படங்கள் விமான நிலையத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.

ஸ்கை லைட்
அதில் ஸ்கை லைட் என்ற அம்சத்தை பயன்படுத்தி இருப்பதாக விமான நிலைய நிர்வாகம் தெரிவித்து உள்ளது. மின் பயன்பாட்டை குறைக்க இயற்கையான வெளிச்சத்தை வழங்க மேற்கூரையில் இடம்விட்டு இருக்கிறார்கள். அதன் மூலம் சூரிய ஒளி விமான நிலைய வளாகத்திலும் கிடைக்கும். இதனால் காற்றோட்டமும் இருக்கும் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications