சட்டசபைத் தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டி? நடிகை குஷ்பு அளித்த சுவாரஸ்ய பதில்!
சென்னை: சட்டசபைத் தேர்தலில் மீண்டும் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு பாஜக துணைத் தலைவரும், நடிகையுமான குஷ்பு பதில் அளித்துள்ளார். சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ள நிலையில், நயினார் நாகேந்திரன் அறிவுறுத்தலின்படி தேர்தல் பணிகளை செய்வோம் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள், மாநகராட்சி அலுவலகம் அமைந்துள்ள ரிப்பன் மாளிகையில் 13 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். அவர்களை நேற்று முன்தினம் இரவு காவல்துறையினர் கைது செய்து பல்வேறு பகுதிகளுக்கு அழைத்து சென்று சமுதாயக் கூடங்களில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டனத்தை பதிவு செய்தன.

இதன்பின் தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் நோக்கில் தமிழக அரசு தரப்பில் தூய்மைப் பணியாளர்களின் தொழில்சார் நோய்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் தனித்திட்டம், பணியின் போது உயிரிழக்கும் நிலை ஏற்பட்டால் ரூ.10 லட்சம் நிதி பாதுகாப்பு, சுயதொழில் தொடங்குவதற்காக அதிகபட்சம் ரூ.3.50 லட்சம் வரை மானியம் மற்றும் கடன் ஆகிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.
அதுமட்டும கடன் தொகையை தவறாமல் திருப்பிச் செலுத்துவோருக்கு வட்டி மானியம், தூய்மைப் பணியாளர்களின் பிள்ளைகளின் உயர்கல்விக்காக புதிய உயர் கல்வி உதவித் தொகை திட்டம், தூய்மைப் பணியாளர் நலவாரியத்தின் உதவியோடு, அடுத்த 3 ஆண்டுகளில் 30,000 வீடுகள் வழங்கும் வீட்டு வசதி திட்டம், பணியின் போது இலவச காலை உணவு வழங்கும் திட்டம் ஆகியவையும் அறிவிக்கப்பட்டது.
13 நாட்களாக தூய்மைப் பணியாளர்களை போராட வைத்து கைது செய்த பின், இப்படியான அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டது விமர்சனத்தை பெற்று வருகிறது. இதுதொடர்பாக தமிழக பாஜகவின் துணைத் தலைவர் குஷ்பு பேசுகையில், தூய்மைப் பணிகளுக்கு ஏராளமான பாதிப்புகளை சந்தித்த பின், இந்த அறிவிப்புகள் மேலோட்டமானவையாகவே பார்க்கிறேன்.
உருப்படியான எந்த விஷயங்களையும் எதையும் செய்யவில்லை. சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் மட்டுமே இருக்கிறது. அதனால் தூய்மைப் பணியாளர்கள் தொடர்பாக பேசி வருகிறார்கள். திமுக கூட்டணியில் இருக்கும் விசிக, காங்கிரஸ், சிபிஎம் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும், நாங்கள் கட்டாயம் தேர்தலில் வெல்வோம் என்கிறார்கள்.
தளபதி படத்தில் தேவாவிற்கு எதுவும் ஆகாது என்று தேவாவே சொன்னதாக ரஜினி சொல்வார். அதுபோல் தேர்தலில் அவர்கள் வெல்வார்கள் என்று அவர்களாகவே சொல்லிக் கொள்கிறார்கள். தமிழக பாஜகவின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் அறிவுறுத்தல்படி தேர்தல் பணிகளை மேற்கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கடந்த முறை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டீர்கள்.. இம்முறை மீண்டும் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுவீர்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு குஷ்பு, இன்னும் இந்தக் கேள்வி வரவில்லையே என்று நினைத்தேன்.. சரியா கேட்டுவிட்டீர்கள்.. ஓகே.. என்று பதில் அளிக்காமல் நழுவி சென்றார்.
-
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications