Khushbu: எனது முதல் முயற்சி.. 100% இயற்கையானது.. குஷ்பு போட்ட கலக்கல் வீடியோ
சென்னை: பாஜக தேசிய குழு உறுப்பினரும் நடிகையுமான குஷ்பு சுந்தரின் புதிய முயற்சியை அவரது ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.
Recommended Video
1980-90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. இவர் இயக்குநர் சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரு மகள்கள் உள்ளனர். சினிமாவில் தடம் பதித்த குஷ்பு, அரசியலிலும் அடியெடுத்து வைத்துள்ளார்.
திமுக, காங்கிரஸ் கட்சிகளில் இருந்த குஷ்பு தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். அங்கு பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் என்ற முக்கிய பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இவர் சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்கும் குரல் கொடுத்து வருகிறார்.

சமூகவலைதளங்கள்
ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். மனதில் பட்ட கருத்துகளை எந்தவித தயக்கமும் இன்றி கண்டிக்கவும் செய்வார், பாராட்டவும் செய்வார். கட்சி பேதமின்றி அனைவருடனும் நன்கு பழகக் கூடியவர். சொந்த கட்சியிலேயே யார் தவறு செய்தாலும் எந்த தயக்கமும் இன்றி கண்டிப்பார்.

அர்ப்பணிப்பு
குழந்தைகள் மீது நமது விருப்பத்தை திணிக்கக் கூடாது என்பதில் தீவிரமாக இருந்து வருகிறார். இதனால் அவரது குழந்தைகள் விரும்பும் துறையில் ஜொலிக்கலாம் என்ற சுதந்திரத்தையும் கொடுத்துள்ளார். இதையே பிறருக்கும் அறிவுறுத்துவார். இந்த நிலையில் இவர் எந்த ஒரு பணியை செய்தாலும் அதில் அர்ப்பணிப்பு இருக்கும்.

எடை குறைப்பு
அந்த வகையில் அண்மையில் தனது உடல் எடையை கணிசமாக குறைத்தார். எனது எடை குறைப்பை பார்த்துவிட்டு உங்களில் யாரேனும் எடையை குறைக்க விரும்பி அதற்கான முயற்சி எடுத்தால் எனக்கு அது போதும் என்றும் தெரிவித்திருந்தார். இந்த புகைப்படங்களை டிவிட்டரில் வெளியிட்டதை ரசிகர்கள் பெரிதும் வரவேற்றனர். மேலும் உடற்பயிற்சி உடலுக்கு நல்லது, கொரோனா தடுப்பூசி முக்கியம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வையும் அவ்வப்போது ஏற்படுத்தி வருவார்.

கைகளால் செய்யப்பட்ட சோப்பு
இந்த நிலையில் குஷ்பு நேற்றைய தினம் ஒரு ட்வீட் போட்டிருந்தார். அது வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறுகையில் கைகளால் செய்யப்பட்ட சோப்புகளை தயாரிப்பதில் முதல் முறையாக முயற்சித்தேன். இதில் எந்த ரசாயனங்களும் இல்லை. முற்றிலும் இயற்கையான பொருட்களை கொண்டு தயார் செய்யப்பட்டது என கூறிய குஷ்பு அந்த சோப்புகள் குறித்த வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.
-
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications