சட்டசபை தேர்தலில் எனக்கு எதிராக போட்டியிட உதயநிதி ஸ்டாலின் தயாரா? குஷ்பு சவால்
சென்னை: 2021 சட்டசபை தேர்தலில் எனக்கு எதிராக போட்டியிட உதயநிதி ஸ்டாலின் தயாரா என பாஜக தேர்தல் பொறுப்பாளர் குஷ்பு சவால் விடுத்துள்ளார்.
இன்னும் 4 மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி ஒதுக்கீடு, மற்றும் பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்கி உள்ளன.
இதன் காரணமாக தமிழக சட்டசபை தேர்தல் திருவிழா போல் களைகட்டி உள்ளது. ஆளும் அதிமுகவுக்கும், எதிர்க்கட்சியான திமுகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

பாஜக
அதிமுக கூட்டணியில் பாஜக இடம் பெற்றுள்ளது. அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த குஷ்பு அந்த கட்சியின் தேர்தல் பொறுப்பாளராக உள்ளார். குஷ்பு சட்டசபை தேர்தலை முன்னிட்டுவிரைவில் பிரச்சாரத்தை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

எங்கு போட்டி
ஏனெனில் குஷ்பு முதல்முறையாக சட்டசபை தேர்தலில் களம் காண விரும்புகிறார். அவர் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதேநேரம் திமுக தலைவர் முக ஸ்டாலினின் மகனும், திமுக இளைஞரணி செயலாளருமாகிய உதயநிதி ஸ்டாலின், ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

சந்தேகம் வேண்டாம்
இந்நிலையில் சென்னை புதுப்பேட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த குஷ்பு, முதல்வர் வேட்பாளரை அறிவிப்பதற்கென சில நெறிமுறைகளும் நடைமுறைகளும் உள்ளது. அதன்படி தான் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார்கள் . எடப்பாடி பழனிசாமியை முதல்வராக ஏற்றுக்கொண்டுதான் இங்கு நிற்கிறோம். அதில் எந்த சந்தேகமும் இல்லை. இதில் எந்த குழப்பமும் வேண்டாம் என்றார்.

குஷ்பு சவால்
இதனிடையே வரும் சட்டசபை தேர்தலில் நான் போட்டியிடும் தொகுதியில் என்னை எதிர்த்து போட்டியிட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தயாரா என்று குஷ்பு கேள்வி எழுப்பினார். சட்டசபை தேர்தலில் எந்த இடத்தில் தலைமை அனுமதித்தாலும் போட்டியிடதயார் என்றும் குஷ்பு கூறினார். அண்மையில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், ஸ்டாலின் எந்த தொகுதியில் நின்றாலும் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications