Kushbu: மகள் அவந்திகாவுக்கு திருமணம்! பிரதமருக்கு அழைப்பு விடுத்த குஷ்பு- சுந்தர்.சி! மாப்பிள்ளை யார்?
சென்னை: நடிகை குஷ்பு- சுந்தர் சி.யின் மூத்த மகள் அவந்திகாவின் திருமணத்தையொட்டி அதற்கான திருமண அழைப்பிதழை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து குஷ்புவும் சுந்தர் சியும் கொடுத்துள்ளனர்.
நடிகை குஷ்புவின் மூத்த மகள் அவந்திகாவுக்கும் ஷ்ரவன் சீனிவாசனுக்கும் திருமணம் நடைபெறவுள்ளது. இதற்காக டெல்லி சென்ற குஷ்பு, சுந்தர் சி, மகள் அவந்திகா, அவரது வருங்கால கணவர் ஷ்ரவன் ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து அழைப்பிதழை கொடுத்து ஆசியும் பெற்றனர்.

எப்போது திருமணம் என்ற தகவல் இல்லை. அது போல் மாப்பிள்ளை ஷ்ரவன் சீனிவாசன் யார் என்ற விவரமும் தெரியவில்லை. மும்பையை சேர்ந்த குஷ்பு, வருஷம் 16 படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகினார். அதற்கு முன்னர் இந்தி படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு உள்ளிட்டோருடன் ஜோடியாக நடித்தவர். 1990-களில் முறைமாமன் படத்தின் இயக்குநர் சுந்தர்.சி.யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.
இதுவரை 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள குஷ்பு, கடைசியாக பழனி என்ற படத்தில் 2008ஆம் ஆண்டு நடித்திருந்தார். அதன்பின்னர் சின்னத்திரை, அரசியல், குடும்பம் என பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்தி வந்தார். இதையடுத்து 2021 ஆம் ஆண்டு ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார்.
பின்னர் கணவர் இயக்கிய தீயா வேலை செய்யணும் குமாரு, ஆம்பள, அரண்மனை 2, அரண்மனனை 4 ஆகிய படங்களில் பாடல்களில் நடனமாடியிருந்தார்.
திமுகவில் 2010 ஆம் ஆண்டு இணைந்த குஷ்பு, அங்கு தலைமையுடன் ஏற்பட்ட மனக்கசப்பால், 2014 ஆம் ஆண்டு காங்கிரஸில் இணைந்தார். இதையடுத்து அங்கிருந்து அவர் கடந்த 2020 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். தற்போது தமிழக பாஜக துணைத் தலைவராக இருந்து வருகிறார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதன்பின்னர் 2026 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் குஷ்பு போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது கணவர் சுந்தர் சி, மதுரை மத்திய தொகுதியில் ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதி கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
இவரது இளைய மகள் அனந்திதா மணிரத்னமிடம் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறார். அவர் பொன்னியின் செல்வன், பொன்னியின் செல்வன் 2, தக் லைஃப் ஆகிய படங்களில் அனந்திதா பணியாற்றியுள்ளார். தற்போது அவர் டபுள் ஆக்குபன்சி என்ற படத்தை இயக்கியுள்ளார்.
லண்டனில் நடிப்பு படித்த மூத்த மகள் அவந்திகா, நகைக் கடை விளம்பரத்தில் மாடலாக நடித்திருந்தார். பின்னர் ஆரம்பம் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இது மலையாள படம், தமிழிலும் வெளியாகும் என சொல்லப்படுகிறது.
குஷ்பு வீட்டில் சுந்தர் சியை போல் அவரது மகள்களும் உயரமானவர்கள். அதிலும் குஷ்புவின் மூத்த மகள் அவந்திகா 5 அடி 11 அங்குலம். இவரது உயரத்திற்கு ஏற்ற மாப்பிள்ளை அமைய வேண்டும் என குஷ்பு ஒரு முறை கூறியிருந்தார். அதே போல் தற்போது அமைந்துவிட்டது. குஷ்புவின் மகளுக்கு சமூகவலைதளங்களில் வாழ்த்துகளை கூறி வருகிறார்கள்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications