புழல் பெண்கள் சிறையில் குஷ்பு இன்று திடீர் ஆய்வு! கைதிகள் தயாரித்த பொருட்களை பார்வையிட்டு பாராட்டு!
சென்னை: நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு, புழல் பெண்கள் சிறையில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பெண் கைதிகள் சிறையில் தயாரித்த பொருட்களை பார்த்து அவர்களை அழைத்து பாராட்டவும் செய்தார்.
இதனிடையே குஷ்புவை பார்த்ததும் பெண் கைதிகள் உற்சாகம் அடைந்ததோடு தங்களின் நிலை குறித்து எடுத்துக் கூறினர். இதனிடையே அவர்களுக்கு நம்பிக்கையும், ஆறுதலும் அளிக்கும் வகையில் பேசிய குஷ்பு, பெண் கைதிகளுக்கு புது வாழ்க்கை அமைத்துக் கொடுப்பது பற்றி ஜெயிலர் உள்ளிட்ட சிறைத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார்.

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பிரச்சனைகளை சந்திப்பது சில நேரங்களில் தவிர்க்க முடியாத ஒன்று என்றும் அதையும் கடக்க கற்றுக் கொண்டு துணிச்சலுடன் வாழ்வதற்கு வாழ கற்றுக் கொள்ள வேண்டும் என பெண் கைதிகளுக்கு குஷ்பு அறிவுரை வழங்கினார். அதைத் தொடர்ந்து புழல் பெண்கள் சிறையில் ஆய்வு நடத்தியது பற்றிய கூறிய அவர், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் என்ற அடிப்படையில் பெண்கள் சிறைக்கு ஆய்வு நடத்த சென்றதாக தெரிவித்தார்.
மேலும், பெண்கள் சிறையில் சந்திக்கும் பிரச்சனைகள், சவால்கள் குறித்து கேட்டறிந்ததாகவும் தாம் எதிர்பார்த்ததை விட பெண் கைதிகள் சிறையை சுத்தமாக வைத்திருக்கிறார்கள் என பாராட்டினார். கைதிகளின் வாழ்க்கையை மேம்படுத்துவது பற்றி ஜெயிலருடன் விரிவான ஆலோசனை நடத்தியதாகவும் தனக்கு தோன்றிய யோசனைகளை சிறைத்துறை அதிகாரிகளுக்கு வழங்கியிருப்பதாகவும் தெரிவித்தார்.
மணிப்பூர் கொடூரம் தொடர்பாக குஷ்புவுக்கு அமைச்சர் கீதாஜீவன் உள்ளிட்ட திமுகவினர் கேள்வி எழுப்பி வரும் நிலையில் அவரது புழல் பெண்கள் சிறை விசிட் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை












Click it and Unblock the Notifications