குஷ்புவா இது.. வேற லெவல்.. தேர்ந்த அரசியல்வாதிகளே தோற்றுப்போவார்கள்.. அனல் பறக்கும் ஆயிரம் விளக்கு'
சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட குஷ்பு கைக்குழந்தையை தூக்கி சிறிது நேரம் விளையாட்டு காட்டி பின்னர் வாக்கு சேகரித்தார்.
Recommended Video
ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் எழிலனை எதிர்த்து பாஜக சார்பில் நடிகை குஷ்பு போட்டியிடுகிறார். நாள்தோறும் தவறாமல் தொகுதி மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார்.
நாளுக்கு நாள் குஷ்புவின் பிரச்சார பாணி விறுவிறுப்பாக உள்ளது.. திமுகவுக்கு இணையாக தன் பிரச்சாரத்தை முன்னிறுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

குறைகளை கேட்கிறார்
குஷ்புவுக்கு நடிகை என்ற பந்தா எப்போதுமே இருக்காது.. எல்லாரிடமும் இயல்பாகவே வந்து பேசுவார்.. அப்படித்தான், தொகுதிக்குள் மிக இயல்பாக சென்று குறைகளை அக்கறையுடன் கேட்டு வருகிறார். ஆயிரம் விளக்கு திமுகவின் கோட்டை என்று சொல்லப்பட்டாலும், அந்த கோட்டையை உடைக்க வேண்டும் படு ஸ்பீடாக வேலை செய்து வருகிறது.

டீ போட்டு அசத்தல்
குஷ்புவின் பிரச்சார பாணி வழக்கமான அரசியல் தலைவர்களை போல் இல்லாமல் வெகு இயல்பாக இருப்பதால் அவரை பாஜகவினரே ஆச்சர்யத்துடன் பார்க்கிறார்கள். சிஏஏ விவகாரத்தில் பாஜகவை குறித்து நடத்தப்படும்பிரச்சாரங்களை முறியடிக்க இஸ்லாமியர்களை தேடித்தேடி சென்றுவாக்கு சேகரித்து வருகிறார்.அண்மையில் இஸ்லாமியரின் வீட்டிற்குள் சென்ற குஷ்பு அங்கிருந்தவர்களுக்கு டீ போட்டு கொடுத்து செல்பி எடுத்தார்.இது பெரிய அளவில் வைரலானது

அனுதாப வாக்கு
அதேபோல் அடுத்தடுத்த நாட்களில் ஜெயலலிதா பாணியில் செய்வீர்களா,செய்வீர்களா என்று கேட்டு, ஜெயலலிதா போல் தானும் திமுகவால் அவமானங்களை சந்தித்தாக கூறி அனுதாபத்தை அள்ளினார். இப்படிதொகுதியில் பரபரப்பை கிளப்பி வரும் குஷ்புவுக்கு ஆதரவாக ஆயிரம் விளக்கு தொகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார்.

வீடு வீடாக செல்கிறார்கள்
இந்த நிலையில் இன்று ஆயிரம் விளக்கு தொகுதிக்கு உட்பட்ட மாம்பலம் மெயின் ரோடு, பிள்ளையார் கோவில் தெரு, சோலை மாமணி தெரு, பாலு முதலி தெரு, லாலா தோட்டம் பகுதிகளில் வீதி வீதியாக சென்று துண்டு பிரசுரங்களை விநியோகித்து தாமரை சின்னத்திற்கு வாக்களிக்கும்படி குஷ்பு கேட்டுக் கொண்டார்.

விளையாட்டு காட்டினார்
இதில் மாம்பலம் பிரதான சாலை பகுதிக்கு வாக்கு சேகரிக்க சென்ற குஷ்பு அங்கு இருந்த காய்கறி, மீன் இறைச்சி விற்பனை கடை, டீ கடை என அனைத்து கடைகளுக்கும் சென்று பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யும்படி கேட்டுக் கொண்டார். கைக்குழந்தையை தூக்கி சிறிது நேரம் விளையாட்டு காட்டியும் வாக்கு சேகரித்தார்.












Click it and Unblock the Notifications