tail bone வலியால் துடித்த குஷ்பு சுந்தர்.. கையில் IV லைனுடன் மருத்துவமனையில் அனுமதி..ரசிகர்கள் கவலை
சென்னை: நடிகை குஷ்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் அவருக்கு என்னவாயிற்று என்பதையும் அவரே விளக்கியுள்ளார்.
1990 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மும்பையை சேர்ந்த நக்கத் கான் எனும் குஷ்பு. தர்மத்தின் தலைவன். இந்த படத்தில் கார் மெக்கானிக் ஷாப் நடத்தி வருபவராக முதல் படத்திலேயே நன்றாக நடித்திருப்பார்.
முதல் படத்திலேயே ரஜினி, சுஹாசினி, வி கே ராமசாமி உள்ளிட்ட முன்னணி நடிகர், நடிகையுடன் நடித்த குஷ்பு, அந்த படத்தில் பிரபுவுடன் ஜோடி போட்டார். தயாரிப்பாளர், நடிகை, கதாசிரியர், அரசியல்வாதி என பல முகங்கள் குஷ்புவுக்கு உண்டு.

மீரா சீரியல்
தற்போது மீரா எனும் சீரியலை இயக்கி நடித்தும் வருகிறார். இந்த நிலையில் அவர் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி டெல்லி சென்றார். மேற்கு வங்க மாநிலத்தில் ஹன்ஸ்காலியில் 14 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜகவால் அமைக்கப்பட்ட உண்மை கண்டறியும் குழுவின் உறுப்பினராக குஷ்பு தேரவு செய்யப்பட்டார்.

குஷ்புடன் யாரெல்லாம் சென்றார்கள்?
இந்த கமிட்டியில் குஷ்புவுடன் வானதி ஸ்ரீனிவாசன், ரேகா வர்மா, ஸ்ரீரூபா மித்ரா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். இந்த தகவலை குஷ்புவே ட்விட்டரில் போட்டு காரில் புறப்பட்டு செல்லும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். எப்போதும் பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் பலாத்காரம், வரதட்சிணை கொடுமை உள்ளிட்டவைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் குஷ்பு உண்மை கண்டறியும் குழுவில் உறுப்பினராக்கியது மிகவும் பொருத்தமானது என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

என்னவோ தெரியலை
யாரு கண்ணு பட்டுச்சோ என்னவோ தெரியலை... திடீரென குஷ்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் கைகளில் ஐவி லைன் இணைப்பு இருப்பதை நம்மால் காண முடிகிறது.

கொரோனா
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குஷ்புவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். பின்னர் கொரோனாவிலிருந்து மீண்ட நிலையில் வழக்கம்போல அரசியல், சீரியல், டைரக்ஷன் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வந்தார். மருத்துவமனையில் இருக்கும் குஷ்புவை பார்க்கும் ரசிகர்களும் அவரது ஆதரவாளர்களும் என்னாச்சு என கேட்டுள்ளனர்.

எலும்பு பகுதியில் வலி
குஷ்பு பதிலளிக்கையில் முதுகு தண்டுவடத்தில் கீழ்பகுதியில் உள்ள எலும்பு வலி (tail bone) பிரச்சினைக்காக சிகிச்சை எடுத்துக் கொண்டேன். தற்போது பரவாயில்லை என கூறியுள்ளார். tail bone என்றால் முதுகு தண்டுவடத்தில் 33 எலும்புகள் இருக்கும். அதில் கடைசி 4 எலும்புகளை காக்சியக்ஸ் என்று சொல்வார்கள். இந்த 4 எலும்புகளைத்தான் tail bone என்பார்கள்.

tail bone என்றால் என்ன?
அந்த 4 எலும்புகளும் ஒட்டிக் கொண்டு வளைந்தாற்போல் இருக்கும். இது யாருக்கெல்லாம் வரும் என்றால் மாடியிலிருந்தோ அல்லது உயரமான இடத்திலிருந்தோ கீழே விழும் போது நமது புட்ட பகுதி தரையில் படும்படி விழும்போது ஏற்படும் அதிர்வால் இந்த எலும்புகள் ஒட்டிக் கொள்ளும், யாராவது நீண்ட நேரம் பயணித்துக் கொண்டே இருந்தாலும் அவர்களும் இந்த வலி ஏற்படலாம். இந்த வலி பொருத்து கொள்ள முடியாத அளவுக்கு இருக்குமாம். உட்கார முடியாத அளவுக்கு வலி உச்சத்தில் இருக்கும். இதற்கு பிசியோதெரபி, அல்ட்ராசவுண்ட் சிகிச்சைகள் அளிக்கப்படும். இந்த வலியால்தான் குஷ்பு அவதிப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
-
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்!












Click it and Unblock the Notifications