ஐய்யோ குஷ்புவின் முகத்தில் எத்தனை பிரகாசம்.. நெஞ்சோடு வாரி அணைக்கும் இந்த குழந்தை யார்?
சென்னை: சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள டுமில்குப்பத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்க சென்ற நடிகையும் பாஜக செயற்குழு உறுப்பினருமான குஷ்பு அங்கு ஒரு பெண் குழந்தைக்கு காவ்யா என பெயர் சூட்டினார்.
வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆகியவற்றால் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 20 செமீ. மழை பெய்ததால் சென்னை வெள்ளக் காடாக காட்சியளித்தது.
மேலும் புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், பூண்டி உள்ளிட்ட ஏரிகள் நிரம்பியதால் அவற்றின் மதகுகள் திறந்துவிடப்பட்டன. இதனால் அதனை சுற்றியுள்ள பகுதிகள் நீரில் மிதந்தன.
தேங்கிய தண்ணீரை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் முயற்சி மேற்கொண்ட போதிலும் அடை மழை பெய்து மேலும் மேலும் தண்ணீரின் அளவை அதிகரித்தன. கடந்த இரு தினங்களுக்கு முன்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்த நிலையில் மழை ஓய்ந்தது. எனினும் நேற்றைய தினம் மழையின் அளவு குறைந்தது.

தண்ணீர் வற்றவில்லை
எனினும் பெரும்பாலான இடங்களில் இன்னும் தண்ணீர் வற்றவில்லை. இந்த நிலையில் பட்டினம்பாக்கம் அருகே உள்ள டுமீல்குப்பம் மீனவ கிராமத்தில் நடிகையும் பாஜக செயற்குழு உறுப்பினருமான குஷ்பு நிவாரண உதவிகளை வழங்கினார். அப்போது மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி 500 பேருக்கு பிரெட் மற்றும் 500 பேருக்கு பால் பாக்கெட் ஆகியவற்றை வழங்கினார்.

கனமழை
அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்த போது கூறுகையில் தமிழக முதல்வரை தவிர வேறு யாரும் இந்த கனமழை பேரிடர் காலத்தில் ஒழுங்காக வேலை செய்யவில்லை. கொளத்தூர் தொகுதியில் கூடத்தான் தண்ணீர் தேங்கியுள்ளது என்றார். அப்போது அங்கிருந்த ஒரு பெண் பாலும் பிரட்டும் கொடுப்பதற்கு பதிலாக 5 கிலோ அரிசி கொடுத்திருந்தால் வச்சி சாப்பிட்டிருப்போம்.

பாலும்
இந்த பிரட்டும் பாலும் ஒரு வேலைக்குகூட போதாது என்றார். உடனே குஷ்பு உறுதியாக நடவடிக்கை எடுக்கிறோம். நீங்கள் சொன்னது போல் செய்கிறோம் என்றார். இதையடுத்து காரில் ஏறி உட்கார்ந்து குஷ்பு புறப்பட தயாரானார். அப்போது ஒரு பெண் தனது குழந்தைக்கு பெயர் வைக்குமாறு குஷ்புவிடம் கேட்டார்.

பேர் வைத்த குஷ்பு
உடனே காரை விட்டு இறங்கிய குஷ்பு, அந்த குழந்தையை வாரி அணைத்துக் கொண்டார். அவர் சிரிக்க, பதிலுக்கு அந்த குழந்தையும் சிரிக்க குஷ்புவுக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. முகமெல்லாம் பூ பூத்த புன்னகையுடன் அந்த குழந்தையை கொஞ்சினார். அந்த குழந்தையும் குஷ்புவின் துப்பட்டாவை கெட்டியாக பிடித்து கொண்டது. இதையடுத்து குழந்தையை ஆசை தீர கொஞ்சி காவ்யா என அந்த குழந்தையின் காதில் குஷ்பு மூன்று முறை கூறினார்.
-
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
'We the Leaders' தொடக்கம்.. தமிழ்நாட்டில் புதிய சக்தியாக உருவெடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார்












Click it and Unblock the Notifications