என்னுடைய "கிரேட் டீச்சர்" கலைஞர்.. ஆசிரியர் தினத்தில் குஷ்பூ ட்வீட்.. நெட்டிசன்ஸ் சொன்ன பதில்!
சென்னை: என்னுடைய சிறந்த ஆசிரியராக திகழ்ந்தவர் கலைஞர்தான் என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து பாஜக உறுப்பினர் குஷ்பூ தெரிவித்துள்ளார்.
நாடு முழுக்க இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணனின் பிறந்த நாள் நாடு முழுக்க ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலர் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இன்று வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்பூவும் ஆசிரியர் தினம் குறித்து ட்வீட் செய்து இருந்தார். அவரின் ட்வீட் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.

குஷ்பூ
குஷ்பூ தனது ட்வீட்டில், மிக முக்கியமாக நான் என்னுடைய வழிகாட்டி மற்றும் சிறந்த ஆசிரியராக திகழ்ந்த டாக்டர் கலைஞர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்தான் அரசியல் என்பது வெறுப்பு மற்றும் விரக்தி கிடையாது. அது நம்பிக்கை மற்றும் சேவை சார்ந்தது என்று சொல்லிக் கொடுத்தது, என்று குஷ்பூ முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து உருக்கமாக டீவீட் செய்துள்ளார்.

மாற்று
குஷ்பூ திமுகவில் இருந்து பிரிந்த பின் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட மாற்று கட்சிகளில் இணைந்து பணியாற்றி இருக்கிறார். திமுகவிற்கு எதிரான கொள்கை கொண்ட பாஜகவில் தற்போது அவர் இருக்கிறார். திமுகவை பல மேடைகளில் அவர் விமர்சித்து இருந்தாலும் எப்போதும் அதன் முன்னாள் தலைவர் கருணாநிதியை விட்டுக்கொடுத்தது இல்லை.

கருணாநிதி
கருணாநிதிதான் தனது அரசியல் குரு என்று பல மேடைகளில் அவர் உருக்கமாக பேசி இருக்கிறார். கட்சி வேறுபாடுகள், திமுகவுடன் கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் இந்த ஒரு விஷயத்தில் அவர் கருணாநிதி குறித்து சிறப்பாகவே பேசி வந்து இருக்கிறார். அதை போலவேதான் இன்றும் ஆசிரியர் தினத்திற்கு ட்வீட் செய்து திமுகவினரையும், பாஜகவினரையும் ஒரே சமயத்தில் திரும்பி பார்க்க வைத்தார்.

கமெண்ட்
குஷ்புவின் இந்த வைரல் ட்வீட்டிற்கு நெட்டிசன்கள் பலர் கமெண்ட் செய்துள்ளனர். திமுகவினர் பலர் இவரின் ட்வீட்டிற்கு நன்றி என்று பதில் அளித்துள்ளனர். இன்னும் சிலர் அரசியலில் இப்படி பழைய விஷயங்களை, மாற்று கட்சி தலைவர்களை பாராட்டுவது நல்ல அணுகுமுறை என்று குறிப்பிட்டுள்ளனர்.

கட்சி
இன்னும் சிலர் மீண்டும் திமுகவிற்கு வர திட்டம் உள்ளதா? திமுக முன்னாள் தலைவரை இப்படி திடீரென பாராட்டி உள்ளீர்கள். திமுகவிற்கு மாறும் எண்ணம் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications