அமித்ஷாவை அடுத்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் குணமடையவும் வாழ்த்திய குஷ்பு

ஒரு கட்சியில் இருக்கும் போதே அந்த கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக சில கருத்துக்களை கூறி தொண்டர்களிடம் வாங்கிக்கட்டிக்கொள்வார் குஷ்பு.

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் விரைவில் குணமடைய வேண்டும் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் நடிகையும் காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளருமான குஷ்பு. உள்துறை அமைச்சர் நலம்பெற வேண்டும் என்று வாழ்த்திய குஷ்பு இப்போது ஆளுநர் நலம் பெற வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

இந்தியாவில் 18 லட்சம் பேரை கொரோனா பாதித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அமித்ஷாவிற்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

khushbu tweets BanwarilalPurohit very speedy recovery from Covid

இதேபோன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு ராஜ்பவனில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். தமிழக ஆளுநர் மாளிகையில் 90க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் விரைவில் குணமடைய குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்தியுள்ளார்.

khushbu tweets BanwarilalPurohit very speedy recovery from Covid

நமது மேதகு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விரைவில் குணமடைய வேண்டும் கெட் வெல் சூன் சார் என்று பதிவிட்டுள்ளார் குஷ்பு

அமித்ஷா குணமடைய வாழ்த்து

khushbu tweets BanwarilalPurohit very speedy recovery from Covid

முன்னதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா குணமடையவேண்டும் என்று வாழ்த்தியிருந்தார் குஷ்பு. இப்போது ஆளுநர் நலம் பெற வேண்டும் என்று வாழ்த்தியுள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும் கட்சி பேதமின்றி அனைவரையும் வாழ்த்தியுள்ளார் குஷ்பு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+