#KidsAreCool.. லாக் டவுனா.. எங்களுக்கா.. நீங்க வேற.. கலகலக்கும் குட்டீஸ்கள் உலகம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: லாக்டவுன் உலகையே முடக்கிப் போட்டு வைத்தாலும் கூட குடும்பங்களுக்குள் அன்பையும் பாசத்தையும் வலிமையாக்கியுள்ளது என்பது மறைக்க முடியாத உண்மை.

குடும்பத்தோடு சேர்ந்து இருப்பது என்பது இப்போதெல்லாம் குதிரைக் கொம்பாகி விட்டது. எத்தனை பேருக்கு அப்படி சேர்ந்தாற் போல இருக்க முடிகிறது இப்போதெல்லாம். பலருக்கும் அது கனவாகத்தான் இருக்கும். ஆனால்.. இன்றோ குடும்பத்தை விட்டு ஒரு நொடி கூட பிரிய முடியாத அளவுக்கு கொரோனா வைரஸ் பரவல் நம்மைக் கட்டிப் போட்டு வைத்துள்ளது.

உண்மையிலேயே பெரும்பாலான குடும்பங்கள் இதற்காக மகிழ்ச்சி அடையவே செய்துள்ளன. அதிலும் குட்டீஸ்கள் ரொம்ப ஹேப்பி.. தாத்தா பாட்டி உள்ளிட்டோரை மட்டுமே எப்போதும் பார்த்து வந்த குட்டீஸ்களுக்கு அப்பாவும், அம்மாவும் இப்படி சேர்ந்தாற் போல கூடவே இருப்பது கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாதது என்பதால் செம ஹேப்பி அவர்கள்தான்.. வாங்க அடுத்த தொகுப்புக்குப் போகலாம்.

க்யூட் அக்கா குறும்புக்கார தம்பி

க்யூட் அக்கா குறும்புக்கார தம்பி

இந்த மெயில் சூப்பர்ங்க.. இதில் இருப்பது ஒரு குறும்புக்கார தம்பியும், பாசக்கார அக்காவும். இந்த மெயிலை அனுப்பியிருப்பது நமது வாசகர் சரவணக்குமார் - சிவசக்தி பாலா தம்பதி. சொந்த ஊர் ராஜபாளையம் முகவூர். "இது எங்களது குட்டீஸ் எஸ்.எஸ்.ஜெயஸ்ரீ (நாலரை வயசு) மற்றும் எஸ்.எஸ். ராஜ விசாக பிரியன் (மூன்றரை வயது). நாங்கள் இருவரும் வேலைக்குச் செல்வதால் வீட்டில் இருக்கும் நேரம் குறைவு. இப்போது நால்வரும் வீட்டில் இருப்பதால் எங்கள் குழந்தைகளுக்கு ஒரே குதூகலம். ஜெயஸ்ரீ அழகாக ஓவியம் வரைவாள். அதனை இத்தோடு இணைத்துள்ளேன். ராஜ விசாக பிரியன் அக்காவுடன் சேர்ந்து விளையாட்டு, சில சண்டைகள், குறும்புகள் என இருப்பான்" மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார் சரவணக்குமார்.. ஹேப்பி பேமிலி.. அப்படியே சந்தோஷமா இருங்க!

அசத்தும் மித்ரன்

அசத்தும் மித்ரன்

இது நமது வாசகர் கோவை நேரு நகரைச் சேர்ந்த அனிதா வெள்ளிங்கிரி அனுப்பியுள்ள புகைப்படங்கள். இதில் இருப்பது அவரது மகன் எச். மித்ரன். 1வது வகுப்பு படிக்கும் மித்ரனின் விரல்கள் இந்த இளம் வயதிலேயே ஜாலம் செய்கின்றன. அவர் வரைந்துள்ள ஓவியங்களும், கிராப்ட் ஒர்க்கும் பார்க்கவே படு சந்தோஷமாக இருக்கிறது. ஆக்கப்பூர்வமாக கழியும் மித்ரனின் பொழுதுகள் விரைவில் வெளி உலகையும் பார்க்கட்டும்.

ஹன்ஷினி லக்ஷினி

ஹன்ஷினி லக்ஷினி

இது சேலம் சின்ன திருப்பதியிலிருந்து நமது வாசகர் தேவி அனுப்பி வந்துள்ள மடல். இதில் இடம் பெற்றிருப்பது ஹன்ஷினி மற்றும் லக்ஷினி. இருவரும் சமர்த்தாக வீட்டில் அமர்ந்து விளையாடிக் கொண்டுள்ளனர். கூடவே படம் வரைதலும் சைட் பை சைடாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதை விட முக்கியம் ஹன்ஷினிக்கு டான்ஸ் ஆடப் பிடிக்குமாம்.. அதையும் ஒரு போட்டோ எடுத்து அனுப்பிருக்கலாம்டா செல்லம்.. மிஸ் பண்ணிட்டியே.. ஜாலியா இருங்க இப்படியே.

வாவ் கோபால்

வாவ் கோபால்

இது எல். ராம் கோபால். பெங்களூர் சந்தபுராவிலிருந்து அனுப்பியுள்ளார். சாருக்கு செம திறமைங்க.. படம் வரைதலில் பின்னி எடுப்பவர் போல.. போட்டோவைப் பார்த்தாலே தெரிகிறது. அது ஹாபி என்று அவர் கூறியுள்ளார். ஆனால் இதைத் தொடர்ந்து கடைப்பிடித்தால் மிகப் பெரிய ஓவியக் கலைஞராக வரலாம்.. வாழ்த்துகள் ராம் கோபால்.. நல்லா பெரிய ஆளா வாங்க.. பத்திரமா வீட்டுக்குள்ளேயே இருங்க.

தெறி பேபி + ரவுடி பேபி!

தெறி பேபி + ரவுடி பேபி!

இதில் உள்ளதை அப்படியே சொல்லியாகணும்.. நமது வாசகர் ஜெயசுதாகர் அனுப்பி வைத்துள்ள போட்டோக்கள் இவை.. அதில் அவர் கூறியிருப்பதாவது.. எனது முதல் மகள் பெயர் எஸ். மித்ரா. கிராப்ட் ஒர்க், டிராயிங் நல்லா பண்ணுவா. 2வது பேபி பெயர் எஸ். கார்த்திகா. இவங்க ரவுடி பேபி மற்றும் ஆங்கிரி பேர்டு என்று கூறியுள்ளார் ஜெயசுதாகர்.. ஹாஹாஹா.. கோவக்கார பாப்பாவாதான் தெரியுது.. இனிமே அவங்களை ஆங்கிரி பேர்டுன்னு சொல்லாதீங்க.. "ஜாங்கிரி" பேர்டுன்னு சொல்லுங்க.. கூலாய்ருவாங்க!

தன்வந்த் குட்டி

தன்வந்த் குட்டி

புகைப்படத்தில் இருப்பவர் மாஸ்டர் தன்வந்த். வீட்டுக்கு வெளியே என்ன நடக்குதுன்னு அவர் கவலையே படவில்லை.. காரணம் சார் வீட்டுக்குள்ளேயே ரொம்ப பிசியாக இருக்கிறார். கிடைப்பதை எல்லாம் எடுத்து வைத்து விளையாடிக் கலக்குகிறார். குழந்தைகள் உலகமே எப்போதும் தனி தானே.. அந்த தனி உலகத்தில் ராஜாவாக கோலோச்சுகிறார் தன்வந்த்.. வாழ்த்துவோம்!

அனிஷின் குட்டிக் கதை

அனிஷின் குட்டிக் கதை

இது பெங்களூர் கோரமங்களாவில் வசித்து வரும் அனிஷ் டி. சீனியர் கேஜி டி பிரிவில் படிக்கிறார். இந்த லாக்டவுன் சமயத்தில், அவர் எப்படியெல்லாம் பொழுதைக் கழிக்கிறார் என்பதை இந்த மெயில் விவரிக்கிறது. இவர் ஒரு குட்டிக் கதை எழுதியுள்ளார்.. அதை நமக்கும் அனுப்பி வைத்துள்ளார். அழகான ஆங்கில கையெழுத்தில் பளிச்சென இருக்கிறது கதை.. நல்லாவும் இருக்கு.. சூப்பர் அனிஷ். பிறகு படம் வரைந்துள்ளார். அதையும் அனுப்பி வைத்துள்ளார். இப்படியே எப்பவும் ஹேப்பியா, பிரில்லியன்ட்டா இரு அனிஷ் குட்டி!

ஆதிஷ்வரின் கை வண்ணம்

ஆதிஷ்வரின் கை வண்ணம்

இது சென்னையைச் சேர்ந்த நமது வாசகி ஆர்த்தி சதீஷ்குமாரின் செல்ல மகன் ஆதிஷ்வர். 3வது வகுப்பு படிக்கிறார் ஆதிஷ்வர்.. தேர்வு எழுதாமலேயே பாஸ் பண்ணியாச்சு. இருந்தாலும் சும்மா இருக்கலாமோ.. அதனால் கைவண்ணத்தைக் காட்ட ஆரம்பித்து விட்டார் ஆதிஷ்வர். அவரது கைவண்ணத்தில் பட்டு மிளிரும் படைப்புகள்தான் இவை.. சூப்பரா இருக்குடா ஆதி குட்டி.. வாழ்த்துகள்!

அலோ யாரு பேசறது

அலோ யாரு பேசறது

"அலோ யாருப்பா பேசறது.. அந்த கொரோனாவை விரட்டியாச்சா இல்லையா.. சீக்கிரம் விரட்டு விடுங்கப்பா.. போரடிக்குது.. நாங்க வெளில போக வேணாமா".. இப்படித்தான் கேட்கிறாராம் நம்ம எஸ். காவ்யா குட்டி.. கூடவே அவரது பாசக்கார அண்ணன் வி.எஸ். கவின்..நம்ம வாசகி விஜயகுமாரியின் குழந்தைகள் இவர்கள். கவின் சார் பிசியாக கம்ப்யூட்டரில் மூழ்கியிருக்கிறார். தங்கச்சி அக்கறையாக கொரோனா அப்டேட்ஸ் விசாரித்துக் கொண்டிருக்கிறார்.. ஜாலியா இருங்கடா செல்லங்களா.

சீக்கிரம் வெளியே விடுங்க

சீக்கிரம் வெளியே விடுங்க

இது நமது வாசகர் கார்த்திக் ஆறுமுகம் அனுப்பியுள்ள புகைப்படம். இரு குட்டிப் பசங்களையும் பார்த்தாலே பாதி டென்ஷன் போயிடும் போல.. அப்படி ஒரு க்யூட் லுக். வெளியில் போக முடியாமல் இருந்தால் என்ன.. வீட்டுக்குள் இப்படிப்பட்டலட்டுக்கள் இருந்தால் போரடிக்குமா என்ன.. ஹேப்பியா இருங்க குட்டீஸ்.

உள்ளேயே ஆடுவோம்ல

உள்ளேயே ஆடுவோம்ல

இது நமது வாசகர் மீனாட்சி சுந்தரம் அனுப்பியுள்ள புகைப்படங்கள். வீட்டு ஹாலையே கிரிக்கெட் கிரவுண்டு ஆக்கி விட்டார்களாம்.. பிறகென்ன அடித்து தூள் கிளப்ப வேண்டியதுதானே.. இதை விட வேறு என்ன வேலை.. அசத்துகிறார் குட்டிப் பையனும். கூடவே அக்கறையாக படமும் வரைந்து கலக்குகிறார்.. வாழ்த்துகள் சார்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+