#KidsAreCool.. மாஸ்க் எப்படிக் கட்டணும்.. கையை எப்படிக் கழுவணும்.. சபாஷ் குட்டீஸ்!
சென்னை: இந்தக் காலத்துக் குழந்தைகள் கற்பூரத்தை விட வேகமக இருக்காங்க. நாம சொல்லாமலேயே பலதையும் கத்துக்கறாங்க. அதேசமயம், நாம சொல்லிக் கொடுத்தா படு வேகமாக அதை உள் வாங்கிக்கிறாங்க.
இன்று தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் கொரோனாவைரஸ் குறித்த நல்ல விழிப்புணர்வு இருக்கு.. அதில் சந்தேகமே இல்லை. மற்ற மாநிலங்கள் எப்படியோ, தமிழக மக்கள் படு தெளிவா, கவனமா இருக்காங்க. குறிப்பாக குழந்தைகள்.
குழந்தைகளுக்கும் கூட இந்த கொரோனாவைரஸின் கொடூரம் குறித்து நன்றாகவே தெரிந்திருக்கிறது. இதற்கு முக்கியக் காரணம் அதைப் பற்றி எடுத்துச் சொல்லி விழிப்புணர்வூட்டிய பெற்றோர்கள்தான். வாங்க இன்னும் ஒரு குட்டீஸ் தொகுப்பைக் காணலாம்.

அம்மா போல மகள்
இது நமது இணையதளத்தின் பரம ரசிகையான கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த கே. ஷோபனா. தனது மகள் தீபஸ்ரீ குறித்து எழுதியுள்ளார். பாப்பாவுக்கு 3 வயசாகிறது. ஷோபனா கூறுகையில், நான் உங்களது இணையதளத்தின் பெரிய ரசிகை. எல்லா செய்திகளையும் தவறாமல் பார்த்து விடுவேன். எல்லாமே நல்லாருக்கு. எனது மகள் தீபஸ்ரீ, 3 வயதாகிறது. அவளுக்கு கலரிங் செய்வது, படம் வரைவது, என்னோட உதவியுடன் கிராப்ட் செய்வது பிடிக்கும். நான் வீட்டிலிருந்து வேலை பார்க்கிறேன். நான் ஆபீஸுக்குப் போகும்போது எப்படிப் போவேனோ அதேபோல் சுடிதார் போட்டுக் கொண்டும், பேக் வைத்துக் கொண்டும் செய்து காட்டி விளையாடுகிறாள் என்று பெருமையுடன் கூறுகிறார். தாயைப் போல பிள்ளை.. சும்மாவா சொன்னாங்க.. ஹேப்பியா இருடா தீபஸ்ரீ !

யுவினேஷ்
இது நமது வாசகர் எம். ஜெயதீபக், ராமநாதபுரத்திலிருந்து அனுப்பியுள்ளார். அவரது மகன் 3 வயதாகும் யுவினேஷுக்கு படம் வரைவது ரொம்பப் பிடிக்குமாம். நமக்காக வரைந்த படம் + பட்டத்துடன் இங்கு காட்சி தருகிறார். அதில், Stay home Save Life என்றும் எழுதியுள்ளார். இதை அப்பாவும் பிள்ளையுமாக பறக்க விட்டு சமூகத்துக்கே அருமையான ஒரு சேவையை செய்துள்ளனர். வாழ்த்துகள் யுவினேஷ் செல்லம்.. சூப்பரா இருக்கு உன்னோட பட்டமும் படமும்.. அருமை

நித்தியஸ்ரீ - சத்தியஸ்ரீ
நமது வாசகி கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ரெத்தினவேணி ராஜேந்திரன் அனுப்பியுள்ள புகைப்படங்கள். இதில் இடம் பெற்றிருப்பது அவரது மகள்கள் நித்தியஸ்ரீ மற்றும் சத்தியஸ்ரீ. இருவரும் காலையில் பல்லாங்குழி ஆட்டம் விளையாடுகின்றனர். பரவாயில்லை.. நமது பாரம்பரிய விளையாட்டை இந்த குட்டீஸ்களாவது தொடர்ந்து விளையாடுகிறார்களே.. பாராட்ட வேண்டும்.. பின்னர் ஓவியம் வரைதல் மற்றும் craft things செய்து நேரத்தை செலவிடுகின்றனர் என்று பெருமையுடன் கூறியுள்ளார் ரெத்தினவேணி ராஜேந்திரன்.. நித்தியஸ்ரீ - சத்தியஸ்ரீ இருவருக்கும் வாழ்த்துகள்டா.
கை எப்படிக் கழுவணும்.. சூப்பர் பிரனேஷ்!
இது நம்ம வாசகர் எஸ்.பாலாஜியின் மகன் பிரனேஷ். இந்தக் குட்டிப் பையனுக்குத்தான் கொரோனாவைரஸ் விழிப்புணர்வு எப்படி இருக்கு பாருங்க. அம்மா கேட்க கேட்க அழகாக சொல்கிறார் பிரனேஷ். கை எப்படிக் கழுவணும், மாஸ்க்கை எங்கு கட்டணும் என்பது குறித்து இவரது பெற்றோர்கள் அழகாக சொல்லிக் கொடுத்துள்ளனர். அதை இந்த குட்டியும் அழகாக உள்வாங்கியிருக்கிறது. வெரிகுட் பிரனேஷ்.. வாழ்த்துகள் + பெற்றோருக்கும் பாராட்டுகள்!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications