#KidsAreCool.. கூண்டுக் கிளியா.. இல்லை குண்டு கிளியா.. குட்டீஸ்களின் தொடரும் களேபரங்கள்!
சென்னை: 21 நாள் லாக்டவுன் ஒரு பக்கம் பரபரப்பாக போய்க் கொண்டுள்ள நிலையில் வீடுகளில் குழந்தைகள் அவர்களது உலகில் அழகாக உலவிக் கொண்டுதான் உள்ளனர்.
தங்களைச் சுற்றி என்ன நடந்தாலும் அதை மனசுக்குள் ஏற்றிக் கொள்ளாமல் தங்களது உலகத்தை அழகாக வைத்துக் கொள்வதில் குழந்தைகளுக்கு நிகர் அவர்கள்தான். அதனால்தான் குழந்தைகளின் உலகம் அழகானது.. அலாதியானது.
இதோ 21 நாள் லாக்டவுன் என்ற சவாலுக்கு மத்தியில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதில் குழந்தைகள் மட்டும் தனித்துத் தெரிகிறார்கள். தங்களது சவாலை ஜாலியாக ஏற்றுக் கொண்டு உற்சாகமாக இருக்கிறார்கள். உண்மையிலேயே பாராட்ட வேண்டிய விஷயம்.. தட்டிக் கொடுத்து அவர்களுக்குத் துணையாக இருக்க வேண்டிய தருணமும் கூட.. இதோ இன்னும் ஒரு குட்டீஸ் கலாட்டாக்களின் தொகுப்பு உங்களுக்காக.

கூண்டுக் கிளியா குண்டு கிளியா
இது நமது வாசகர் கருணாநிதி அனுப்பியுள்ள அவரது மகளின் புகைப்படம். அவர் கூறுகையில், என் பெயர் கருணாநிதி என் மனைவி பெயர் காயத்திரி வருண் எனது மகனின் பெயர். சஞ்சனா ஸ்ரீ எனது மகள். இவர் வரைந்து இருப்பது கூண்டு கிளி அல்ல குண்டு கிளி என்று கலாய்த்துள்ளார் கருணாநிதி. உண்மையிலேயே சஞ்சனாஸ்ரீ வரைந்துள்ள கிளி அட்டகாசமாக, அழகாக இருக்கிறது. வாழ்த்துகள்!

அமிஷ் மோகன்
இது நமது இன்னொரு வாசகர் ஆர்.கே.ஆனந்தி அனுப்பியுள்ள படம். இதில் இருப்பவர் அவரது மகன் அமிஷ் மோகன். திருச்சியைச் சேர்ந்தவர். இவர் செய்துள்ள முரல் ஆர்ட் படத்தை நமக்கு புகைப்படமாக்கி அனுப்பி வைத்துள்ளார். உண்மையிலேயே சூப்பராக இருக்கிறது அமிஷ்.. பாராட்டுகள் + வாழ்த்துகள்.. எதிர்காலத்தில் மிகப் பெரிய கலைஞனாக வர எங்களோட வாழ்த்துகள்.

தென் ஆப்பிரிக்காவிலிருந்து
இது நமது வாசகர் ஜெசிந்தா சந்திரிகா தென் ஆப்பிரிக்காவிலிருந்து அனுப்பியுள்ள புகைப்படம். அவரது மகன் ஜீவன் ரோஹித் இதில் இடம் பெற்றுள்ளார். கையில் லேப்டாப். அங்கும் லாக் டவுன் போல. இருந்தாலும் முகத்தில் புன்னகை.. தனது உலகத்தில் தனது பொழுது போக்குடன் ரோஹித் காட்சி தருகிறார். இந்த விடுப்புக் காலத்தை சிறந்தபடி கழிக்க வாழ்த்துவோம்.. கவனமாகவும் இருக்கவும் அறிவுறுத்துவோம்.

குரு சுப்ரமணியன்
இது 4 வயது குரு சுப்ரமணியன். சாரோட அப்பா பேரு ராமச்சந்திரன். அம்மா பானு. எல்கேஜி (பி) படிக்கிறார். பல்லாவரம் வேல்ஸ் வித்யாஷ்ரம் பள்ளியில் படிக்கிறார். 21 நாள் பிரேக் டவுனை குரு ஜாலியாக வீட்டில் என்ஜாய் செய்வது பார்த்தாலே தெரிகிறது. புத்தகங்கள், நிறைய இருப்பதைப் பார்த்தால் விளையாட்டும் படிப்பும் கை கோர்த்து போவதாக தெரிகிறது.. என்ஜாய் குரு!

ஸ்ரீஹரிஷ் குமார்
இது நமது வாசகர் முனியாண்டி அனுப்பியுள்ள புகைப்படம். புகைப்படத்தில் இருப்பவர் அவரது மகன் ஸ்ரீஹரிஷ் குமார். அம்மா கெளசல்யாவுடன் கண்ணாமூச்சி விளையாடுகிறார். படம் வரைகிறார்.. ரொம்ப பிசியாகவே இருக்கிறார். பார்த்தாலே தெரிகிறது. அவர் எப்பவும் விளையாடிபடி துறுதுறுப்பாக இருப்பார் என்று அவரது அப்பாவே கூறியுள்ளார். சந்தோஷமான விஷயம்.. வீட்டுக்குள் இருந்தாலும் கூட மாஸ்க் முக்கியம் என்பதை வலியுறுத்துகிறது வாசகரின் குடும்பம்.. பாராட்டுவோம்.

ஹவி ரமேஷ்
இது நமது வாசகர் முத்துகிருஷ்ணன், தெலங்கானா மாநிலம் ராமகுண்டத்திலிருந்து அனுப்பியுள்ளார். இவரது மகன் ஹவி ரமேஷ் ஜாலியாக வீட்டில் பொழுது போக்குவதை அழகாக சுட்டிக் காட்டியுள்ளார். பொம்மைகள் வைத்து விளையாடுவது, பிளாக்குகளை அடுக்குவது என ஹேப்பியாக இருக்கிறார் ஹவி ரமேஷ். என்ஜாய் பண்ணு ரமேஷ்!

போரடிக்குதா தீரன்!
இது நமது மதிப்புக்குரிய வாசகர் கல்யாணி மாரப்பன் நமக்கு அனுப்பியுள்ள புகைப்படம். அவரது பேரன் தீரன்.. (குட்டிக்கு வயசு இரண்டரை) லாக்டவுனால் போரடித்துப் போயுள்ளாராம். வீட்டுக்குள்ளேயே இருக்கும் அவருக்கு இப்போது உற்ற துணை பாட்டியும் கூடவே இந்த விளையாட்டுப் பொம்மைகளும்தான். இருக்கும் எல்லா பொம்மைகளையும் வைத்து பொறுமையாக விளையாடி வருகிறார் குட்டிப் பையன் தீரன். சீக்கிரம் சரியாய்ரும்டா செல்லம்.. கொஞ்சம் பொறுத்துக்கோ!

கமேலஷின் விளையாட்டு
இது நம்ம வாசகர் பொன்னுச்சாமி அனுப்பியுள்ள புகைப்படம். படத்தில் இருப்பவர் கமலேஷ். செம போர்தான். ஆனாலும் விடுவதாக இல்லை.. ரயில் பொம்மை விளையாட்டு உள்ளிட்ட அனைத்து விளையாட்டுக்களையும் விளையாடிக் கொண்டிருக்கிறார். அவ்வப்போது போட்டோவுக்கு போஸ் கொடுப்பதும் நடக்கிறது. பில்டிங் பிளாக்ஸ் என சகலமும் அரங்கேறுகிறது.

பாலகிருஷ்ண ராஜா வீட்டுக் குட்டீஸ்
இது நம்ம வாசகர் பாலகிருஷ்ண ராஜா ரெங்கராஜு அனுப்பியுள்ள புகைப்படம். படத்தில் இரண்டு குட்டீஸ்.. செம கெட்டப்... செம ஸ்டைல்.. சுத்தமாக போரடிக்கவே இல்லை போல.. லாக்டவுன். பார்க்கவே சூப்பர் காட்சி.. என்ஜாய்!

இது வர்சன்
இது இரண்டரை வயசு வர்சன் குட்டிப் பையன். அப்பாபெயர் வனராஜ், அம்மா பெயர் வனிதா. சாருக்கு லாக்டவுன் செம போரடிக்குது போல.. பார்த்தாலே தெரியுது.. ஆனாலும் விளையாடுவது என்று டைம் பாஸ் போகிறது.. !
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications