#kidsarecool அடங்க மறுக்கும் குட்டீஸ்கள்.. அதகளமாகும் வீடுகள்.. செம ஜாலி.. சூப்பர் ஹேப்பி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சும்மா சொல்லக் கூடாது.. குழந்தைகள் எல்லாம் கலக்குகிறார்கள்.. கொரோனாவைரஸ் பரவல் தொடர்பான விழிப்புணர்வு குழந்தைகளிடமும் நல்லாவே போய்ச் சேர்ந்திருக்கு.

கொரோனாவைரஸ் என்றால் என்ன என்ற டீட்டெய்ல் அவர்களுக்குத் தெரிந்திருக்கோ இல்லையோ.. நிச்சயம் வெளியே போகக் கூடாது.. போனால் பரவல் அதிகமாகும் என்பதை தெளிவாக புரிந்து வைத்துள்ளனர்.. அதற்காக முதலில் அவர்களது அம்மாக்களுக்கும், அப்பாக்களுக்கும் ஒரு ஷொட்டு வைக்கலாம்.

வீட்டில் உங்களது குழந்தைகள் எப்படிப் பொழுதைக் கழிக்கிறார்கள் என்று கேட்டிருந்தோம்.. இன்னும் வந்து குவிந்து கொண்டே இருக்கின்றன புகைப்படங்களும் வீடியோக்களும்.. அதில் இப்போது நாம் பார்க்கப் போவது 3வது செட்.

வாசகர் ராமராஜன் பாஸ்கரன்

வாசகர் ராமராஜன் பாஸ்கரன்

இது நமது வாசகர் ராமராஜன் பாஸ்கரின் வீடு.. அப்பா எவ்வளவு ஜாலியா ஹாயாக படுத்திருக்காரு பாருங்க..ஆனா குழந்தை எப்படி பொறுப்பா வேலை பார்க்குது பாருங்க.. சூப்பர். இப்படித்தான் வீட்டில் பெரியவர்களுக்கு உதவ வேண்டும். உதவி செய்த மாதிரியும் ஆச்சு, பொழுது போன மாதிரியும் ஆச்சு.. வீட்டு வேலையை கத்துக்கிட்ட மாதிரியும் ஆச்சு.. (எல்லாம் சரி.. குட்டிப் பையனுக்கு டிரஸ்ஸைப் போட்டு விடுங்க ராமராஜன் சார்!)

அண்ணனும் அன்புத் தங்கையும்

அண்ணனும் அன்புத் தங்கையும்

இது ஒரு பாச மலர் போட்டோ... ஆமாங்க,, 1வது படிக்கும் மிதுன்நாதனும், இரண்டரை வயதான அவருடைய தங்கை கீர்த்தியா கல்யாணியும்தான் இதில் இருக்காங்க. அண்ணனும் தங்கச்சியும் எவ்வளவு பொறுப்பா, சமத்தா, பவ்யமா எழுதிட்டிருக்காங்க பாருங்க. 21 நாள் லாக்டவுனில் உருப்படியாக பொழுதைக் கழிக்கலாம் என்பதற்கு இந்த இரண்டு குட்டீஸும் நல்ல உதாரணம்.. வாழ்த்துகள் மிதுன், கீர்த்தியா.

அன்பும் அமர்க்களமும்

அன்பும் அமர்க்களமும்

இது அண்ணன் தம்பி கதை.. அனுப்பியிருப்பவர் வாசகர் கற்பகம் சங்கர். இந்தப் புகைப்படத்தில் இருப்பவர்கள் தனேஷ் சாய் மற்றும் கார்த்தி சாய்.. அண்ணன் தம்பியின் பாசத்தைப் பாருங்கள்.. கூடவே பொறுப்பாக படம் வரைந்து, அன்பைப் பரிமாறி, அழகாக நேரத்தை கடத்துகிறார்கள். இதுபோன்ற சமத்துக் குழந்தைகள் இருக்கும்போது வீட்டில் உள்ளவர்களுக்கும் அது பெரும் மகிழ்ச்சியும், நிம்மதியும்தான். வாழ்த்துகள் குட்டிப் பசங்களா!

ஓவியர் சந்தோஷ் குமார்

ஓவியர் சந்தோஷ் குமார்

இது நமது வாசகர் வி.சரவணன், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியிலிருந்து அனுப்பியுள்ள ஒரு அருமையான புகைப்படம். இதில் இருப்பவர் அவரது மகன் சந்தோஷ் குமார். சந்தோஷ் குமாரின் திறமையையும் உடன் இணைத்து அனுப்பியுள்ளார்.. அதுதான் ஓவியம்.. ஓவியத்தில் யார்னு பார்த்தா நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். எந்திரன் பட ரோபோவை அற்புதமாக வரைந்திருக்கிறார் சந்தோஷ் குமார்.. ஓவியத்தில் சந்தோஷ் குமார் சூப்பர் ஸ்டாராக வர வாழ்த்துவோம்!

வீட்டுக்குள்ளேயே விளையாடலாமே

வீட்டுக்குள்ளேயே விளையாடலாமே

இது நமது வாசகர் ஜின்சி ஏஞ்செல் அனுப்பியுள்ள புகைப்படம். வீட்டுக்குள்ளேயே அதாவது வீட்டு வளாகத்திலேயே விளையாட்டு. கால்பந்து விளையாடுவது நிச்சயம் புத்துணர்ச்சி கொடுக்கவே செய்யும்.. மெஸ்ஸியாகவே இருந்தாலும் கூட வீட்டுக்குள்தான் இப்போது விளையாடியாக வேண்டும். இந்த வளரும் மெஸ்ஸியும் ஜாலியாக தனது பொழுதைக் கழிக்கிறார். . பத்திரம் தம்பி.!

மேனகா செந்தில் மகள்

மேனகா செந்தில் மகள்

இது நமது வாசகர் மேனகா செந்தில் அனுப்பி வைத்துள்ள அவரது மகளின் படம். வீட்டுக்குள்ளேயே எவ்வளவு நேரம்தான் சுற்றி சுற்றி வருவது.. அதுவும் பார்த்த முகத்தையே திரும்பத் திரும்பப் பார்த்தாக வேண்டும்.. ஆனாலும் இந்த குட்டிப் பாப்பாவின் முகத்தைப் பாருங்கள்.. போரடிக்காத முகத்துடன், ஜாலியாக இருக்கிறார். வீட்டுக்குள்ளேயே சைக்ளிங். டேபிள் மேலே ஏறி போனில் டாக்கிங்.. என்ஜாய் பாப்பா.

இது ஜூனியர் ஜெயராஜ் வீடு

இது ஜூனியர் ஜெயராஜ் வீடு

இது நமது வாசகர் ஜூனியர் ஜெயராஜ் வீடு. குட்டிப் பாப்பாவுக்கு வெளியில் போக முடியலையேன்னு ஏக்கம் போல. இருந்தாலும் அப்பா அம்மா சொல்லிட்டா அப்பீல் கிடையாதே.. ஸோ ஜாலியாக வீட்டுக்குள்ளும், வெளியிலுமாக பொழுதைக் கழிக்கிறார் போலும். கைக்கு கிடைத்ததை எல்லாம் எடுத்து விளையாட வேண்டியதுதான்.. 21 நாளை சட்டுப்புட்டுன்னு முடிங்கப்பா.. பாப்பா வெளில போகணும்ல!

காதர் மைதீன் பிள்ளைகள்

காதர் மைதீன் பிள்ளைகள்

இது நமது வாசகர் ஆர். காதர் மைதீன் அனுப்பியுள்ள படம். அவரது இரு வாரிசுகளும் வீட்டில் எப்படி அமர்க்களமாக இந்த லாக் டவுன் பீரியடை கடந்து செல்கின்றனர் என்பதை புகைப்படமாக நமக்கு அனுப்பியுள்ளனர். சகோதரப் பாசமும் தெரிகிறது.. கூடவே அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதும் புரிகிறது. இவர்களுக்கேற்ற உலகை அவர்களது கொடுக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பில் நாம் உள்ளோம் என்பதையும் நாம் உணர வேண்டியுள்ளது.

ஜெயந்த் முருகன் மகள்

ஜெயந்த் முருகன் மகள்

இது நமது வாசகர் ஜெயந்த் முருகன் அனுப்பியுள்ள புகைப்படம். அதில் இருப்பது அவரது செல்ல மகள். இந்த நேரமெல்லாம் பரீட்சை முடிந்து கொண்டிருந்திருக்கும் அல்லது முடிந்திருக்கும். ஆனால் இடையில் புகுந்த கொரானாவால் எல்லாம் பாழ். இருப்பினும் அந்த அயர்ச்சியையும் தாண்டி கிடைத்துள்ள இந்த பிரேக்கைப் பயன்படுத்தி ஜெயந்த் முருகனின் மகள் விளையாட்டுக்களில் மூழ்கிக் களிக்கிறார்.. பாராட்டுவோம்.

அப்பா தலையில் பாப்பா

அப்பா தலையில் பாப்பா

இதைப் பாருங்க.. அப்பா வேலை பார்க்கிறார்.. மகளோ அவரைப் பார்க்கிறார்.. அதுவும் எப்படி.. அவரது தலை மேலே ஏறி அமர்ந்து கொண்டு. நமது வாசகர் வர்ஷினி அனுப்பி வைத்துள்ள புகைப்படம் இது. பெரும்பாலான ஒர்க் பிரம் ஹோம் இப்படித்தான் இருக்கும் போல.. இருந்தாலும் இதுவும் நல்லாதான் இருக்கு.. அப்பாக்களும், பிள்ளைகளும் இப்படி இணைந்து விளையாடிக் கொண்டே வேலை பார்க்கும் காட்சிகள் எல்லாம் இந்த 21 நாள் லாக்டவுனில்தான் சாத்தியம்.. என்ஜாய்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+