#KidsAreCool.. குழந்தைகளின் சிரிப்பு.. துறுதுறுப்பு.. மறப்போம் கொரோனா டென்ஷனை!
சென்னை: கொரோனா டென்ஷனிலிருந்து எப்பப்பா விடுதலை.. எப்பய்யா வீட்டை விட்டு வெளியே வருவோம் என்பதுதான் பலரின் கவலையாக உள்ளது.
சீனாவில் தொடங்கி ஆட்டம் காட்டி வரும் இந்த வைரஸ் தற்போது ஐரோப்பிய நாடுகளையும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளையும் கொடூரமாக பலி வாங்கி வருகிறது. இந்தியாவிலும் பாதிக்கப்பட்டோர், உயிரிழப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளது.
இந்த நிலையில் லாக் டவுனை அனுபவித்து வரும் நமக்கு குழந்தைகள்தான் பெரும் ஆறுதலாக உள்ளனர். அவர்களின் சேஷ்டைகளை், ஜாலிகளை, விளையாட்டுக்களைப் பார்த்து மனதை லேசாக வைத்துக் கொள்ள வேண்டியதுதான். அதுதொடர்பா இன்னும் ஒரு தொகுப்பு.
8 மாச குட்டி பாப்பா
இது ஜேசுதாஸ் - லட்சுமி பிரியா தம்பதியின் 8 மாதக் குழந்தை சுசேத்தா. தாத்தா பாட்டியுடன் ஜாலியாக பொழுதைக் கழிக்கிறாராம் இந்தக் குட்டிப்பாப்பா. இவரிடம் ஒரு சூப்பர் விஷயம் இருக்குங்க.. பார்க்கத்தான் குட்டிப் பாப்பா.. விஜய் சேதுபதியோட தீவிர ரசிகையாம்.. அவர் பாட்டைக் கேட்டால் போதும் டான்ஸ் ஆட ஆரம்பிச்சுருவாராம். இவர்தான் விஜய் சேதுபதியியின் மிக மிக இளம் வயது ரசிகையாக இருப்பார் போல.. வாழ்த்துகள்டா சுசேத்தா குட்டிப் பாப்பா.

வேலையுடன் டான்ஸும்
இது நமது வாசகர் சிவக்குமார் அனுப்பியுள்ள படம். இதில் அவரும் அவரது மகள் வர்ஷினியும் மாஸ்டர் பட பாடலான வாத்தி கமிங் பாட்டுக்கு டான்ஸ் ஆடி கலக்கியுள்ளனர்.

அருமையான ஓவியங்கள்
இது நமது வாசகர் ஜி. ராஜ்குமாரின் மகன். மூன்றரை வயது. கலரிங், டிராயிங்கில் நல்ல ஆர்வம். இப்போது லாக் டவுன் சமயத்தில் இன்னும் நிறைய டைம் கிடைத்திருப்பதால் ஜமாய்த்து வருகிறார் சார். வாழ்த்துகள் தம்பி.

ராமநாதபுரம் விகாஷ்
இது நமது வாசகர் ஜே. உமா சங்கரின் 9 வயது மகன் யு.பி விகாஷ். ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர். அருமையான ஓவியம் வரைந்து நமக்கு அனுப்பியுள்ளார். அதுவும் கொரோனா என்பதற்கு அவர் கொடுத்த விளக்கம் சூப்பர்.. நல்லாருக்கு விகாஷ் குட்டி.. வாழ்த்துகள்.

சென்னை ரிஷிகேஷ்
இது சென்னையைச் சேர்ந்த விஜய் ஸ்ரீனிவாசன்- வரலட்சுமி தம்பதியின் மகன் ரிஷிகேஷ். ரொம்ப சுட்டிக் குழந்தை. துறுதுறுப்பானவர். என்ன கிடைத்தாலும் எடுத்து விளையாட ஆரம்பித்து விடுவார். எல்லா சேட்டையும் செய்து விட்டு புன்னகையால் அப்படியே ஆளைக் கவிழ்த்து விடுவாராம்.. மொத்த குடும்பத்துக்கும் செல்லப் பிள்ளை.

பழனிக்குமாரின் மகள்
இது நமது வாசகர் பழனிக்குமாரின் மகள் பி. ஸ்ரீனிதி. 6 வது படிக்கிறார். நன்றாக ஓவியம் வரையக் கூடியவர். கிடைத்த பொருட்களை வைத்து கிராப்ட் செய்யக் கூடியவர். யோகாவில் ஆர்வம் அதிகம். ரொம்ப எனர்ஜியான பொண்ணு.. அவரது திறமைகளை நமக்கு அனுப்பி வைத்துள்ளார். சூப்பரா இருக்குடா ஸ்ரீ பாப்பா.. ஹேப்பியா இரு.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications